நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்குவேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.
சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கமும் செயல்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஜெயலலிதாவை விஜய்யும், அவரது அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய், இந்த தேர்தலில் அதிமுக., வெற்றி பெறும் என்பது எனக்கு முன்பே தெரியும், ஆனால் இந்தளவுக்கு வெற்றி பெறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக எனது ரசிகர்கள் செயல்பட்டது மிகழ்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். முழுநேர அரசியலில் களமிறங்குவீர்களா என்ற கேட்டதற்கு, விரைவில் நான் அரசியலில் அடியெடுத்து வைப்பேன். நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் அதற்கான நேரமும், காலமும் இதுவல்ல என்று கூறினார்.
நன்றி தினமலர்
13 கருத்துரைகள்:
பத்தோடு பதினொன்னு...இத்தோடு இது ஒன்னு
அரசியல்னா எல்லாமே ச்கஜம் தான் போல இருக்கு.
விஜய் அரசியலுக்கு ரொம்ப முக்கியம்...
இருந்தாலும் ஒரு வாழ்த்தை சொல்லி வைப்போம்...
இதுக்கும் மைனஸ் ஓட்டா அட பாவிகளே...
/////நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்குவேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.///////
இதே டயலாக்க எத்தனை பேருதான் சொல்லுவாங்க
ஹா ஹா ஹா ஹா பிரகாஷ், என்னய்யா நடக்குது...??? நீ பெரிய ஆளாயிட்டே மக்கா.....!!!!!
வடிவேலு ஆசைய தூண்டி விட்டுட்டாராக்கும்:)
present, sir!
மாப்ள நீ எப்போ அரசியல்ல சேந்த உனக்கு யாரோ மைனஸ் போட்டு பெரியாளாக்கிட்டான்களே ஹிஹி!
மைனஸ் ஓட்டா?...பிரபல பதிவர் தமிழ்வாசி வாழ்க!
ஆனால் அதற்கான காலமும் நேரமும் இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.//
இதனைத் தானே விஜய் பல வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவ்...
ஆனால் அதற்கான காலமும் நேரமும் இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.///////
காலமும் நேரமும் வரட்டும் பார்க்கலாம்.
இவரு ஒருத்தர் தான் இன்னும் பாக்கி.. கடவுளே! தமிழ்நாட்ட காப்பாத்த எங்க இருந்தாலும் உடனே ஓடி வா!
http://karadipommai.blogspot.com/