ஒசாமா பின்லாடனை ஒழித்துக்கட்டிவிட்டது, அமெரிக்கா.எப்போதும், பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்து, பெருமூச்சு விடுவதே நமக்கு தலைவிதி என்றாகிவிட்டது. இதிலும் அப்படிதான். ஆமாம் நண்பர்களே, மும்பை அட்டாக்,ஐ தான் குறிப்பிடுகிறேன்.
குருவி சுடுவதை போல, அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றவனை, ராஜமரியாதையுடன், சிறையில் வசதி செய்து கொடுத்து, "நான் ஒன்றும் செய்யவில்லை' என, அவன் எதிர்வாதம் செய்வதற்கு, ஒரு வக்கீலையும் வைத்துக் கொடுத்துள்ளோம்.
ஒரு பயங்கரவாதியை தூக்கில் போட்டால் என்ன ஆகுமோ என, தொடை நடுங்கிக்கொண்டே, அவனை ராஜமரியாதையுடன் வைத்திருக்கிறோம். எதிர்த்து கேட்டால், ஜனநாயகம்; சட்டத்தின் ஆட்சி என்கின்றனர். கேள்வி கேட்பவர்கள், ஜனநாயக விரோதிகள், மதசார்புடையவர்களாக கருதப்படுவராம்!எவ்வளவோ சட்டத் திருத்தங்கள் செய்தவர்கள், உலக அரங்கில் நாம் தலை நிமிர்ந்து நிற்பதற்காக, ஒரு திருத்தம் செய்யக்கூடாதா?
எவராவது வந்து சமாதி கட்டி விடுவரோ என, பின்லாடன் உடலை, கடலில் ஜலசமாதி ஆக்கிவிட்டனரே! நாம், இனிமேலாவது, அஜ்மல் கசாப்புக்காக, இன்னும் பிற பயங்கரவாதிகளுக்காக பாகிஸ்தானிடம் கையேந்தி நிற்பதை, கேவலமாக நினைக்க வேண்டும்.
தேச குற்றம் செய்தவர்களை என்கவுண்டர் செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும். சில குற்றங்களுக்கு பகவத்கீதை சத்தியம், கண் கட்டிய பெண்ணின் கையில் இருக்கும் காலியான தராசின் சமநிலை, காந்தியின் அகிம்சை வழிகள் போன்றவைகளை மறந்து, துணிந்து குற்றவாளிகளை உடனே அழிக்க வேண்டும். இது நடக்குமா?
தேச குற்றம் செய்தவர்களை என்கவுண்டர் செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும். சில குற்றங்களுக்கு பகவத்கீதை சத்தியம், கண் கட்டிய பெண்ணின் கையில் இருக்கும் காலியான தராசின் சமநிலை, காந்தியின் அகிம்சை வழிகள் போன்றவைகளை மறந்து, துணிந்து குற்றவாளிகளை உடனே அழிக்க வேண்டும். இது நடக்குமா?
20 கருத்துரைகள்:
நியாயம் கோரும் பகிர்வு தான்.
ஜன நாயகம் பற்றி ப்பேசுபவர் கள்யோசிக்க வேண்டிய விஷயம்.
நடைமுறைபடுத்த துணிவு வர வேண்டும்.
என்னாது பின்லேடனை கொன்னுட்டாயிங்களா....???
ok
//நாம், இனிமேலாவது, அஜ்மல் கசாப்புக்காக, இன்னும் பிற பயங்கரவாதிகளுக்காக பாகிஸ்தானிடம் கையேந்தி நிற்பதை, கேவலமாக நினைக்க வேண்டும்.//
//
நம்ம ஆளும் வர்க்கம் சரி இல்லைய்யா அதான் கோடிகனக்குல செலவு பண்ணி ஒரு தீவிரவாதியை காப்பாத்திட்டு இருக்காங்க...
நல்ல பதிவு...காந்தியாக நாம் இருக்கும் வரை, கோட்சேக்கள் உருவாகிக்க் கொண்டுதான் இருப்பார்கள்..
சகோதரர் பிரகாஷ்,
அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்)
------
பின்லாடன் கொல்லப்பட்டான்! அஜ்மல் கசாப் எப்போது கொல்லப்படுவான்?!
-------
நியாயமான கேள்வி...அன்றைக்கே போட்டு தள்ளிருக்கணும். தேவை இல்லாம என் காசையும் உங்கள் காசையும் வீணடித்து கொண்டிருக்கு அரசு. அப்படி பார்த்தாலும் நரகத்துக்கு தான் போகப் போறான் இந்த கசாப். அவன அன்றைக்கே அனுப்பி வச்சிருக்கலாம்....என்ன செய்ய நம்ம சட்டம் அப்படியிருக்கு...
நியாயமான ஆதங்கம்...
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் தந்தருள பிரார்த்தனை செய்யும்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
///குருவி சுடுவதை போல, அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றவனை, ராஜமரியாதையுடன், சிறையில் வசதி செய்து கொடுத்து, "நான் ஒன்றும் செய்யவில்லை' என, அவன் எதிர்வாதம் செய்வதற்கு, ஒரு வக்கீலையும் வைத்துக் கொடுத்துள்ளோம்.
/// நியாயமான கேள்வி தான்
இங்கயும் ரணகளமா?..சரி தான்.
அன்பின் பிரகாஷ் - ஆதங்கம் புரிகிறது - ஒன்றும் செய்ய இயலாது - பொறுத்திருப்போம் - காலம் மாறும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நல்லா கேட்கராங்கய்யா கேள்வி ,,
பழைய பாணியில் சொல்வதென்றால் "சட்டம் தன் கடமையைச் செய்யும்"
ரைட்டு...
உங்களின் ஆவேசம், நியாயமானதாகவே தெரிகிறது. ஆனால் சட்டத்தின் சிறு ஓட்டைகளில் எல்லாம் பெரும் பெருச்சாளிகள் ஒளிந்து சுகமாய் வாழ்கிறதே... அவர்களின் ஆதரவும் இந்த மாதிரியான தீவிரவாதிகளுக்கும் கிடைக்கிறதே?
Good question but no answer
ஆஹா..ஆஹா..நம்ம சகோவின் வலைக்குப் புது டெம்பிளேட் கலக்கலாக இருக்கு.
நாட்டின் தேசிய நலன் சார்ந்த உங்களின் சிந்தனையை வரவேற்கிறேன் சகோ.
நானும் இதை எதிர்பார்க்கிறேன்
=+=+=+=+=+=+=+=+=+=+=+
காலம் செய்த கோலம்
http://speedsays.blogspot.com/2011/05/blog-post_12.html
இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. இன்னும் நம்முடைய பொருளாதாரம் 'பெரிய அண்ணன்'களின் கையில் சிக்கி உள்ளது. நம்முடைய பங்களிப்பை அவர்கள் உணர்ந்திருந்தாலும் இன்னும் சிறிய தம்பிகளாகவே உள்ளோம். சில வேளைகளில் அண்ணன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் உள்ளோம். மேலும் வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்காக depentent ஆக உள்ளோம். நம்மை நியாயவாதிகளாக காட்டிக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் தன்னிறைவு அடைந்தபின்தான் நம் உணர்வுகளுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்கமுடியும்.