பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
நம்ம கருத்து:
எவ்வளவு அடி வாங்குனாலும் இந்தியன் தாங்குவண்யா. விலையை ஏத்துறதையும் ஏத்திட்டு பாதி தான் ஏத்தியிருக்கோம்னு சாக்கு போக்கு வேற... இந்தியர்களே! நாம் ஏமாளிகள். மசாலா அரைக்கும் அம்மிக்கல் நாம் தான்.
நான்காவது ஐ.பி.எல்., தொடரின் ஏலத்தில், ஒதுக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, புதிய திருப்பமாக தற்போது புனே வாரியர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நம்ம கருத்து:
எந்த அணியிலும் இடம் கிடைக்காம கல்லா பாக்கெட்டை நிரப்ப முடியாம இருந்த கங்குலிக்கு இப்படி ஒரு சான்ஸா. ஹா...ஹா...ஹா... மச்சம் உச்சந்தலையில் இருக்குன்னு நினைக்கிறேன்
டில்லியில் நடைபெறும் தேனீர் விருந்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா அழைப்பு விடுத்தள்ளார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு சோனியா வாழ்த்தும் தெரிவித்துள்ளார். வாழ்த்து கூறுவதம், விருந்திற்கு அழைப்பதும் அரசியல் நாகரிகம்.
நம்ம கருத்து:
அப்படியா? நல்ல அரசியல் நாகரீகம். இதே மாதிரி சில வருடங்களுக்கு முன் நடந்த தேநீர் விருந்தில் பி.ஜே.பி.யை ஜே கவிழ்த்தார். அத கொஞ்சம் நெனச்சு பார்த்துக்கங்க சோனியா அம்மா. அம்மாவால ஆப்பு, கீப்பு வந்து கை ஒடஞ்சுற போகுது.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு, இந்த தேர்தலில் யோகம் அடித்துள்ளது. தே.மு.தி.க., மற்றும் இடதுசாரி கட்சிகள் கணிசமான இடங்களை அள்ளியதுடன், ஒன்றிரண்டு இடங்களைப் பெற்ற குட்டிக் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளன.
நம்ம கருத்து:
கண்ணா... லட்டு திங்க ஆசையா? அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்த சின்ன சின்ன கட்சியெல்லாம் எம்புட்டு லட்டு வாங்கியிருக்காங்க பாருங்க. ஆமா, வாங்குன்ன லட்டுக்கு அ.தி.மு.க.,வுக்கு எம்புட்டு காசு கொடுத்தாங்களோ? எல்லாம் மேலே இருக்கிறவனுக்கு தான் தெரியும்.
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் காரணமாக, நடைமுறையில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிகளை, தேர்தல் கமிஷன் நேற்று வாபஸ் பெற்றது.கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிகள் வாபஸ் பெறப்படுகின்றன.
நம்ம கருத்து:
நன்னடத்தை விதிகள் வாபஸ்ன்னு சொல்றாங்களே, அப்ப இனிமே நன்னடத்தை அவசியமில்லையா? அடப்பாவிகளா, தேர்தல் சமயத்துல மட்டும் கட்சிகளை கட்டுப்படுதுற தேர்தல் கமிசன் தேர்தலுக்கு பிறகும் அவங்கள கண்காணிக்கிற கமிஷனா மாறனும். அப்படி செஞ்சா நன்னடத்தை விதிகள் வாபஸ் வாங்கனும்னு அவசியம் இருக்காதுல. ஹி...ஹி... இது நடக்குமா?
சிமென்ட் சிலாப் கல்லில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறில், ஆத்திரமடைந்த விவசாயி, வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதால், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
நம்ம கருத்து:
தமாத்துண்டு கல்லுல உட்கார உரிமையில்லையா? இதுக்கு வெடி குண்டு வீச்சா? எங்கய்யா, போகுது நம்ம ஊரு?
அ.தி.மு.க., வெற்றி என 13 நபர்களுக்கு மெசேஜ் அனுப்புங்கள். நீங்கள் 92.53 ரூபாய்க்கு "டாக்டைம்' பெறுவீர்கள். இது உண்மை, இன்றைய "ஜெயா' செய்திகள் பாருங்கள். அடுத்த 5 நிமிடங்களில் உங்களது மொபைல்ஃபோன் பேலன்ஸ் பரிசோதிக்கவும். இது ஏமாற்று வேலை இல்லை. விரைந்து அனுப்புங்கள்,'' என்று குறப்பிடப்பட்டுள்ளது.
நம்ம கருத்து:
ஜெயிச்ச மொத நாளே ஆரம்பிச்சுட்டாங்கய்யா இலவசத்தை. ஆனா மொக்க இலவசம். ஆமா பின்ன மெசேஜ் அனுப்பின காசு போனது போனதுதான். ஒரு பைசா லாபமில்லை. கொடுக்கிற இலவசத்தை கரெக்டா கொடுங்க. இல்லையின்னா தி.மு.க. வுக்கு வச்ச ஆப்பு தான் உங்களுக்கும்.
டிஸ்கி: மேற்கண்ட செய்திகள் இன்றைய செய்தி தாள்களில் வந்தவை. நம்ம கருத்து, என்னோட சொந்த கருத்து.
26 கருத்துரைகள்:
நல்லா கலாய்குறீங்க
உன் கருத்து சூப்பர் மாப்ள ..
அருமைமையாத்தான் சொல்லுறிங்க அண்ணா
நாட்ல என்னெல்லாம் அநியாயம் நடக்குதுய்யா...
ஜெ...சோனியா டீ விருந்து அடுத்த அரசியல் பரபரப்பு
ரைட்டு லெப்டு ஸ்ட்ரைட்டு!
ஒரு காப்பிய பாத்து இன்னொரு காபி....இது ஒரு பொழப்பு!
உங்கள் வலைப்பூ வடிவமைப்பு மிக நன்றாக இருக்கிறது, இப்போது தான் பார்க்கிறேன்.
எளிமையான வடிவமைப்பால் வாசகர்களின் எண்ணிக்கை கட்டாயம் உங்கள் வலைப்பூவுக்கு அதிகரிக்கும்.
இந்த பதிவின் அத்தனை செய்திகளும் அருமை. கடைசில
கடுப்பாய்டிங்களே?
எவ்வளவு அடி வாங்குனாலும் இந்தியன் தாங்குவண்யா.//
அநியாயம் ....
எலக்ஷன் முடிந்த பிறகு அறிவிச்சிருக்காங்க
இந்த வருட முடிவுக்குள் நிச்சயம் பெட்ரோல் விலை 90.00 ருபாய்-க்கு ஏறும்.
http://zenguna.blogspot.com/
@பிரபாஷ்கரன்
ரைட்டு...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
உன் கருத்து சூப்பர் மாப்ள ..))))
அப்படியா மாம்ஸ்.
@Mahan.Thamesh
அருமைமையாத்தான் சொல்லுறிங்க அண்ணா)))
ஓகே...ஓகே....
@MANO நாஞ்சில் மனோ
நாட்ல என்னெல்லாம் அநியாயம் நடக்குதுய்யா...))))
இப்படியே நாம பொலம்பிக்கிட்டு இருக்க வேண்டியது தான்
@ஆர்.கே.சதீஷ்குமார்
ஜெ...சோனியா டீ விருந்து அடுத்த அரசியல் பரபரப்பு)))))))
என்னன்ன திருப்பங்கள் நடக்கப்போகுதோ?
@விக்கி உலகம்ரைட்டு லெப்டு ஸ்ட்ரைட்டு!
ஒரு காப்பிய பாத்து இன்னொரு காபி....இது ஒரு பொழப்பு!))))))
கூல் மாம்ஸ்.
@பாரத்... பாரதி...
உங்கள் அன்புக்கும், கருத்துக்கும் நன்றி.
@இராஜராஜேஸ்வரி
கருத்துக்கு நன்றி.
@குணசேகரன்...
இந்த வருட முடிவுக்குள் நிச்சயம் பெட்ரோல் விலை 90.00 ருபாய்-க்கு ஏறும்.>>>>
அவ்வளவு தான் உங்க மதிப்பீடா?
எவ்வளவு அடி வாங்குனாலும் இந்தியன் தாங்குவண்யா. விலையை ஏத்துறதையும் ஏத்திட்டு பாதி தான் ஏத்தியிருக்கோம்னு சாக்கு போக்கு வேற... இந்தியர்களே! நாம் ஏமாளிகள். மசாலா அரைக்கும் அம்மிக்கல் நாம் தான்.//
ஏமாற்றுவோர் இருக்கும் வரை ஏமாளிகள் இருப்பார்கள் எனும் நிலமைக்கு மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள். ஆனால் இனி வரப் போகின்ற அரசு பெற்றோல் விலை பற்றி என்ன சிந்திக்கப் போகிறது என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிமென்ட் சிலாப் கல்லில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறில், ஆத்திரமடைந்த விவசாயி, வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதால், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
நம்ம கருத்து:
தமாத்துண்டு கல்லுல உட்கார உரிமையில்லையா? இதுக்கு வெடி குண்டு வீச்சா? எங்கய்யா, போகுது நம்ம ஊரு?//
இதிலை சொந்தக் கருத்தில்..நகைச்சுவை, கலாய்ப்பு அருமையாக இருக்கிறது சகோ.
அ.தி.மு.க., வெற்றி என 13 நபர்களுக்கு மெசேஜ் அனுப்புங்கள். நீங்கள் 92.53 ரூபாய்க்கு "டாக்டைம்' பெறுவீர்கள். இது உண்மை, இன்றைய "ஜெயா' செய்திகள் பாருங்கள். அடுத்த 5 நிமிடங்களில் உங்களது மொபைல்ஃபோன் பேலன்ஸ் பரிசோதிக்கவும். இது ஏமாற்று வேலை இல்லை. விரைந்து அனுப்புங்கள்,'' என்று குறப்பிடப்பட்டுள்ளது//
ஆஹா....வெற்றி பெற்ற உடனேயே ஆரம்பிச்சிட்டாங்களா.
இந்த அரசாவது இலவசங்களை ஒழித்து, தமிழகத்தில் ஊழலற்ற ஜனநாயகம் நிரம்பிய நல்லாட்சி எதிர்காலத்தில் அமைய வழிகாட்டியாக அமையும் என்று நினைத்தால், இலவசத்தை ஆரம்பிச்சிட்டாங்களே..
அவ்...
சோனியா ஜெயலலிதா தேனீர் விருந்தா
சுப்ரமனிய சாமி எங்கபோனாரு?
கலக்கல்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே
http://speedsays.blogspot.com/2011/05/how-to-make-problems.html
இந்த ஆப்பு நமக்கு நாமே வைத்துகொண்டது