CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இசைப்புயல் A. R. ரஹ்மான் வரலாறு!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

     
ஏ.ஆர். ரஹ்மான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். ஏ.ஆர். ரஹ்மான் (அல்லா இரக்கா இரகுமான்) 1966ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஆர்.கே.சேகர் என்பவரது ஒரே மகனாவார். ரஹ்மான் ஒன்பது வயதாயிருக்கும் போதே அவர் தந்தை காலமானார். அதனால் மிகவும் கஷ்டப்பட்ட இவர்கள் குடும்பம் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாயைக் கொண்டு காலம் தள்ளி வந்தது. இந்நிலையில் ரஹ்மானின் சகோதரி ஒரு விசித்திர நோயினால் தாக்கப்பட்டார். அந்நோயை சூஃபி துறவி ஒருவர் தீர்த்து வைத்தார். அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார் திலீப் என்ற பெயர் கொண்ட அல்லா ராகா ரஹ்மான். 

     ஆரம்ப காலத்தி கீ போர்டு வாசித்து வந்த ரஹ்மான் தனது 11வது வயதில் இளையராஜாவின் குழுவில் சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோரின் இசைக் குழுவிலும் பணியாற்றினார். ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து உலகம் முழுதும் இசைப்பயணம் மேற்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் உதவித்தொகை பெற்று, மேற்கத்திய இசையில் இளநிலை பட்டம் பெற்றார்.1991ல் தனது வீட்டை ஒட்டியே தனியாக ஸ்டூடியோ ஆரம்பித்த ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கும், தொலைகாட்சிகளுக்கு இசை அமைத்து வந்தார். 1992ல் முதன் முதலாக இயக்குனர் மணிரத்தினத்தின் 'ரோஜா' படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் ரூ.25,000 மட்டுமே. இப்படத்திற்கு முதன் முதலாக ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் ரஹ்மான் மின்சார கனவு (1997) லகான் (இந்தி 2002) மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் (2003) ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார். 

     ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் ரஹ்மான். தில் சே, தால் ஆகிய இந்திப் படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இவர் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து 2006 வரை பத்து படங்களில் பணியாற்றியுள்ளார். அதேபோல் இயக்குனர் சங்கருடன் இணைந்து ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், நாயக், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். அதே போல் இவர் இசையமைத்த ரஜினியின் படங்களான முத்து, படையப்பா, இப்போது சிவாஜி ஆகியவற்றின் பாடல்கள் மிகவும் பிரபலபலாமாக இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பானில் பேசப்படுகிறது. 

     இவர் வாரியர்ஸ் ஆப் ஹெவன் அண்ட் எர்த் (Warriors of Heaven and Earth) (2003) என்ற சின ஆங்கிலப்படத்திற்கும் பின்னணி இசையமைத்துள்ளார். இவர் வந்தே மாதரம் என்ற (1996) இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். பாம்பே டிரீம்ஸ் (Bombay Dreams)(2002) என்ற ஆங்கில நாடகத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். 

அவர் பெற்ற விருதுகள்
ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது கிடைத்தன. இதே படத்துக்காக இவருக்கு இரு ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தன. இவ் விருதுகளை ஒருசேரப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது. பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.           
  • 2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருது
  • கோல்டன் குளோப் விருது 
  • பாப்டா விருது
  • மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது
  • பத்மஸ்ரீ விருது
  • ஆறு முறை தமிழக திரைப்பட விருது 
  • 13 முறை பிலிம்பேர் விருது
  • 12 முறை பிலிம்பேர் சவுத் விருது
  • பத்ம பூஷண் விருது (2010)

ரஹ்மான் இசையமைத்த படங்கள்

ரோஜா - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - (1992)
ஜென்டில்மேன் - தமிழ் தெலுங்கு, ஹிந்தி (தி ஜென்டில்மேன்) - (1993)
கிழக்குச் சீமையிலே - தமிழ் - (1993)
புதிய முகம் - தமிழ் - (1993)
திருடா திருடா - தமிழ், தெலுங்கு (டொங்கா,டொங்கா), ஹிந்தி (ச்சோர் ச்சோர்) - (1993)
உழவன் - தமிழ் - (1993)
யோதா - மலையாளம் - (1993)
டூயட் - தமிழ் - (1994)
காதலன் - தமிழ், ஹிந்தி (ஹம்ஸே ஹே முக்காப்லா) - (1994)
கருத்தம்மா - தமிழ் - (1994)
மே மாதம் - தமிழ் - (1994)
புதிய மன்னர்கள் - தமிழ் - (1994)
வண்டிச்சோலை சின்னராசு - தமிழ் - (1994)
பவித்ரா - தமிழ் - (1994)
சூப்பர் போலீஸ் - தெலுங்கு - (1994)
கேங் மாஸ்டர் - தெலுங்கு - (1994)
பம்பாய் - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - (1995)
இந்திரா - தமிழ் - (1995)
முத்து - தமிழ் - (1995)
ரங்கீலா - தமிழ், ஹிந்தி - (1995)
இந்தியன் - தமிழ், தெலுங்கு (பாரதீயடு), ஹிந்தி (ஹிந்துஸ்தானி) - (1996)
காதல் தேசம் - தமிழ், தெலுங்கு (பிரேம தேசம்), ஹிந்தி (துனியா தில்வாலோன் கீ) - (1996)
லவ் பேர்ட்ஸ் - தமிழ், ஹிந்தி (ஃபயர்) - (1996)
மிஸ்டர் ரோமியோ - தமிழ் - (1996)
இருவர் - தமிழ் - (1997)
மின்சார கனவு - தமிழ், தெலுங்கு (மெருப்பு கல்லு), ஹிந்தி (சப்னே) - (1997)
ரட்சகன் - தமிழ், தெலுங்கு (ரக்ஷடு) - (1997)
தவுட் - ஹிந்தி (1997)
ஜீன்ஸ் - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - (1998)
உயிரே - தமிழ், தெலுங்கு (ஹிருதயாஞ்சலி), ஹிந்தி (தில் சே) - (1998)
தோலி சஜா கே ரக்னா - ஹிந்தி (1998)
கபி நா கபி - ஹிந்தி - (1998)
முதல்வன் - தமிழ், தெலுங்கு (ஒக்கே ஒக்கடு), ஹிந்தி (நாயக்) - (1999)
தாஜ்மஹால் - தமிழ் - (1999)
சங்கமம் - தமிழ் - (1999)
காதலர் தினம் - தமிழ், தெலுங்கு (பிரேமிகுலு ரோஜு) - (1999)
ஜோடி - தமிழ் - (1999)
தாளம் - தமிழ், ஹிந்தி (தாள்) - (1999)
என் சுவாசக் காற்றே - தமிழ் - (1999)
படையப்பா - தமிழ் - (1999)
1947 எர்த் - ஹிந்தி - (1999)
தக்ஷக் - ஹிந்தி - (1999)
புக்கார் - ஹிந்தி - (1999)
பிஸா - ஹிந்தி (ஒரு பாடலுக்கு மட்டும்) - (1999)
ரிட்டர்ன் ஆப் தி தீப் ஆப் பாக்தாத் - ஆங்கிலம் - (1999)
அலைபாயுதே - தமிழ், தெலுங்கு (சகி), ஹிந்தி (சாத்தியா) - (2000)
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - தமிழ், தெலுங்கு (ப்ரியலு பிலிச்சிந்தி) - (2000)
ரிதம் - தமிழ், தெலுங்கு - (2000)
தெனாலி - தமிழ், தெலுங்கு - (2000)
தில் ஹே தில் மே - ஹிந்தி - (2000)
ஸ்டார் - தமிழ் - (2001)
பார்த்தாலே பரவசம் - தமிழ், தெலுங்கு (பரவசம்) - (2001)
அல்லி அர்ஜுனா - தமிழ் - (2001)
சுபைதா - ஹிந்தி - (2001)
ஒன் 2 கா 4 - ஹிந்தி - (2001)
லவ் யூ ஹமேஷா - ஹிந்தி - (2001)
லகான் - ஹிந்தி - (2001)
கன்னத்தில் முத்தமிட்டால் - தமிழ், தெலுங்கு (அம்ருதா) - (2002)
தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங் - ஹிந்தி - (2002)
உதயா - தமிழ் - (2003)
பரசுராம் - தமிழ் - (2003)
பாய்ஸ் - தமிழ், தெலுங்கு - (2003)
வாரியர்ஸ் ஆப் ஹெவன் அண்ட் எர்த் - ஆங்கிலம் - (2003)
எனக்கு 20 உனக்கு 18 - தமிழ், தெலுங்கு (நீ மனசு நாக்கு தெலுசு) - (2003)
கண்களால் கைது செய் - தமிழ் - (2003)
தெஹ்ஜீப் - ஹிந்தி - (2003)
டியான் டி யிங் சியாங் - சீன மொழி - (2003)
ஆய்த எழுத்து - தமிழ், தெலுங்கு (யுவா), ஹிந்தி (யுவா) - (2004)
நியூ - தமிழ், தெலுங்கு (நானி) - (2004)
தேசம் - தமிழ், ஹிந்தி (லவ் தேஸ்) - (2004)
லகீர் - ஹிந்தி - (2004)
மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ் - ஹிந்தி - (2004)
தில் நே ஜிஸே அப்னா கஹா - ஹிந்தி - (2004)
கிஸ்னா - ஹிந்தி - (2004)
போஸ் - தி ஃப்ர்காட்டன் ஹீரோ - ஹிந்தி - (2005)
மங்கள் பாண்டே - தி ரைஸிங் - ஹிந்தி - (2005)
அ ஆ - தமிழ் - (2005)
வாட்டர் - ஹிந்தி - (2005)
ரங் தே பசந்தி - ஹிந்தி - (2006)
சில்லுனு ஒரு காதல் - தமிழ் - (2006)
வரலாறு - தமிழ் - (2006)
குரு - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - (2007)
ப்ரோவோக்டு - ஹிந்தி - (2007)
சிவாஜி - தமிழ் - (2007)
அழகிய தமிழ் மகன் - தமிழ் - (2007)
எலிசபெத் தி கோல்டென் ஏஜ் - ஆங்கிலம் - (2007)
ஜோதா அக்பர் - ஹிந்தி - (2008)
ஜானே து யா ஜானே நா - ஹிந்தி - (2008)
அடா: எ வே ஆப் லைப் - ஹிந்தி - (2008)
சக்கரகட்டி - தமிழ் - (2008)
யுவ்ராஜ் - ஹிந்தி - (2008)
கஜினி - ஹிந்தி - (2008)
ஸ்லம் டாக் மில்லியனர் - ஆங்கிலம் - (2008)
டில்லி 6 - ஹிந்தி - (2009)
ப்ளூ- ஹிந்தி - (2009)
பாசேஜ் - ஆங்கிலம் - (2009)
கபுள்ஸ் ரிட்ரீட் - ஆங்கிலம் - (2009)
விண்ணைத்தாண்டி வருவாயா - தமிழ், தெலுங்கு (யே மாய சேசாவே) - (2010)
எந்திரன் - தமிழ், தெலுங்கு (ரோபோ), ஹிந்தி (ரோபோ) - (2010)
ஜ்ஹுதா ஹீ சஹி - ஹிந்தி - (2010)
127 ஹவர்ஸ் - ஆங்கிலம் - (2010)

- பல இணையதளங்கள் - 


15 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips

தமிழன் என்பதில் பெருமை ..நல்ல பகிர்வு நண்பா

cheena (சீனா) said... Best Blogger Tips

இசைப்புயல் A.R.ரஹ்மான் வரலாறு அருமை. பற்பல தகவல்கள் - உழைப்பிற்கு நன்றி - பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

சாதனையாளர் பற்றிய மிகவும் அருமையான தகவல்கள். நன்றி.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

குட் கலெக்‌ஷன்

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

விரிவான அலசலுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

விரிவான அலசல்...

கலக்கல் நண்பா...
ரஹ்மானின் புகழ் ஓங்கட்டும்..

Anonymous said... Best Blogger Tips

மீண்டும் ஒரு ஆஸ்கரை வெல்லட்டும் ரஹ்மான்!

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

பல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன்...

Unknown said... Best Blogger Tips

ரைட்டு

சிசு said... Best Blogger Tips

பதிவு... ரஹ்மானின் இசையைப் போலவே....

Anonymous said... Best Blogger Tips

அருமையான தொகுப்பு

ரஹீம் கஸ்ஸாலி said... Best Blogger Tips

நல்ல தொகுப்பு

செங்கோவி said... Best Blogger Tips

அருமையாகத் தொகுத்து உள்ளீர்கள்..நன்றி பிரகாஷ்!

பனித்துளி சங்கர் said... Best Blogger Tips

சாதனை சிகரத்தை பற்றி மீண்டும் அறிந்துகொண்டேன் .இவரின் முக்கியமான பல விருதுகளின் விவரங்கள் இந்தப் பதிவில் விடுபட்டு இருக்கிறது சற்றுக் கவனிக்கவும் . புரிதலுக்கு நன்றி , பகிர்ந்தமைக்கு நன்றி .

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1