இனிய உறவுகளுக்கு வணக்கம்,
இந்த இடுகையோடு நம் தமிழ்வாசி 200 வது இடுகைக்கு உங்கள் அன்பும், ஆதரவோடும் அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு இடுகைக்கும் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.
இந்த 200 வது இடுகையை சிறப்பித்து தருபவர் திரு. மதிசுதா. இவர் மதியோடை என்னும் வலைப்பூ ஆரம்பித்து கடந்த ஒரு வருடங்களாக சிறப்பான பதிவுகளை எழுதி வருபவர். இவரிடம் உங்களை பேட்டி காண போகிறேன். அதுவும் கேள்விகளை பதிவுலகில் இருப்பவர்களே கேட்பார்கள் என்றதும், உடனே பேட்டிக்கு ஒத்துக்கொண்டார். இவரை பற்றி தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும். சிற்சில தவிக்கமுடியாத காரணங்களால் இப்பேட்டி வெளியாவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது, மன்னிக்கவும் நண்பர்களே!. இந்த இடுகையில் என்னுடைய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார். அடுத்த இடுகையில் பதிவுலகினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
1 - மதியோடை - பெயர் காரணம் கூறுக.
2 - நீங்கள் பதிவு எழுதும் நேரம் குறைந்து விட்டதே. என்ன காரணம் சகோ?
என் உடல் நிலை தான் முக்கிய காரணம். மற்றும்படி இப்போதும் 27 பதிவுகள் என்னிடம் சேமிப்பில் இருக்கிறது ஆனால் அவசியமானதை மட்டுமே ஒரு ஒழுங்கில் போடுகிறேன். அதிகாலையே எங்கள் இடத்தில் இணைய வேகம் மிகவும் வேகம் என்பதால் அப்போதே வாசிக்கிறேன்.
3 - கிரிக்கெட்டில் நீங்கள் கைதேர்ந்த வீரராமே! இலங்கை அணியில் இடம்பெற முயற்சிக்கலாமே?
அந்தளவுக்கு எனக்கு திறமையில்லிங்க அனால் முயற்சித்திருக்கலாம் அந்த வயதை தான் காடுகள் தின்று விட்டதே ?
அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! என்ற எனது 43 வது பதிவில் தான் முதல் எதிர் பின் ஊட்டம் வந்தது. அதை தந்தவர் இப்போது எனது ஒரு நெருங்கிய நண்பர் மட்டுமல்ல நல்ல வாசகரும் கூட. கெட்டதை மறப்போம் நல்லதை மட்டும் நினைப்போம்.
5 - இலங்கை உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற போது உங்கள் நாட்டினர் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?
நான் வசிக்கும் நாட்டில் இரண்டு அணிக்கும் நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கையணியின் வெற்றி பரிசு சம்பந்தமான செய்தியால் பலர் அணி ஆதரவை கைவிட்டிருந்தார்கள்.
6 - சோளம் பொறித்தல், தேயிலை இல்லா டீ போடுதல் போன்ற ஆராய்ச்சி பதிவுகள் உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுள்ளிர்களே! அதை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பலாமே?
ஹ.. ஹ…. என்ன நக்கலா. அவை எனக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. ஒரு மனிதனுக்கு தேவைகள் தான் கண்டுபிடிப்புகளை தோற்றுவிக்கும் என்பதற்கு உதாரணமாகும். பொருள் தட்டுப்பாடு, பண நெருக்கடி என பலதையும் பழகிக் கொண்ட வன்னி மக்களால் இந்த உலகத்தின் எந்த மூலையிலும் வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
7 - உங்களை பற்றி ஒரே வரியில் சொல்ல சொன்னால் எப்படி சொல்வீர்கள்?
“நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை“
8 - முதல் பின்னூட்டமாக "சுடு சோறு எனக்குதான்" அப்படின்னு போடுறிங்களே! எப்படி இந்த ஐடியா வந்தது?
வன்னி போன்ற இடங்களில் இப்போதும் எம் பழங்கால தமிழ் அப்பழுக்கில்லாமல் உயிர்வாழ்கிறது அவற்றை வெளிக் கொணரணும் என்ற ஆசையில் தான் செய்கிறேன் உதாரணமான மூஞ்சிப் புத்தகம் (பேஸ்புக்) என்ற வசனமாகும். முகம் என்பதை விட மூஞ்சி என்பது அழகானதாம்.
9 -உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான தருணங்களில் உங்கள் உதவிக்கு வந்தவர் யார்? அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஒருவரல்ல இருவர் முதலாமவர் என்னை தனது முதல் பிள்ளையாக கருதி தூக்கி வளர்த்த அக்கா அவர் ஒரு விஞ்ஞான அசிரியராவார் நான் தப்பச் செய்தால் தன்னை தண்டித்த என்னை திருத்தும் ஒருவர். அடுத்தவர் பெரும்பாலன பதிவர்களின் வாசகரான என் நெருங்கிய நண்பர் ஜீவன் தான் உதவுவார். என் பதிவகளில் அடிக்கடி தலைகாட்டுவார். என்னை விட அதிக வயது மூத்தவரானாலும் எம் நட்பை விபரிக்க வார்த்தைகள் இல்லை
10 - நீங்கள் எப்படி பதிவுலகம் வந்திர்கள் ? பதிவெழுத வந்ததன் நோக்கம் ?
நான் முகாமில் இருந்த காலத்தில் களவாகப் பார்க்கும் தினக்குரல் பத்திரிகையில் வரும் இணையத்தில் நம்மவர் பகுதி தான் வரத் தூண்டியது அதில் வந்தும் விட்டேன். ஆனால் எழுத ஆரம்பிக்கும் போதே நினைத்தவை என்ன நடந்தாலென்ன என்ன எதிர்ப்ப வந்தாலென்ன போருக்கும் போதைப் பொருளுக்கும் எதிராகவே எழுதணும் என்பது தான். (சாராயத் தயாரிப்பு பதிவிலும் அதன் விளைவை சொல்லியிருக்கிறேன்)
11 - நல்ல சமூக விழிப்புணர்ச்சி பதிவுகளை வழங்கும் நீங்கள் 18+ பதிவகளையும் எழுதவதன் காரணம் ?
ஹ… ஹ… யார் சொன்னது அது 18+ என்று அதில் ஆபாசமோ அருவருப்பன வசனமோ இருக்காது ஏதாவது அறிவியல் அல்லது சமூக விழிப்புணர்வே இருக்கும். அதன் அர்த்தம் 18+ ற்க உட்பட்டவருக்கு தேவைப்படாது என்பதாகும்.
12 - சிங்கள ராணுவ வீரர்கள், புலி வீரர்கள் இருவரிலும் ராணுவ ரீதியாக பார்க்கையில் உங்கள் கண்ணில் எப்படி இருந்தார்கள் ?
இருவரதும் உயிர்கள் தான் கண் முன் தெரியும். இருவருக்கு ரத்தம் போனாலும் எம் கைகள் நீள யாரும் தடை போட்டதில்லை.
13 - இந்த பரவகாலத்தின் ஈழத் தமிழர், புலம் பெயர் தமிழர் ஒப்பீட்டு பிரச்சனைக்கு நீங்கள் தான் ஆரம்பகர்த்தாவாமே உண்மையா ? காரணம் என்ன?
உண்மை தான். ஆனால் புலம்பெயர்ந்தவர் என வார்த்தைச் சுட்டலில் அடக்கப்பட்டாலும் எல்லோரும் அப்படியல்ல எம்மைபுரிந்த பலர் இருக்கிறார்கள். இப்போதும் வன்னியின் வவுனிக்குளம் பகுதிக்கு கனடாவில் வாழும் சில இளைஞர்கள் குழுவாக சேர்ந்து தம் சொந்தப் பணத்தில் பல குடும்பத்திற்கு உதவுகிறார்கள். காரணங்கள் பல முக்கியமாக தவறான புரிந்தணர்வுகளே , மேலும் சிலரிடம் அவர்களது குடியுரிமை பெறுவதற்கான போராட்டம் , போர் வெறி கொண்டிருக்கும் மக்களை நாம் திசை திருப்பி விடுவோமா என்ற பயம் என சின்ன சின்ன காரணங்கள் நீண்டு செல்கிறது…
தொடரும்...
நம் வலைப்பூவுக்கு பேனர் அளித்து உதவிய திரு. குகரூபன்,
திரு. மதிசுதா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
42 கருத்துரைகள்:
200 ஆவது பதிவிற்கு முதல் வாழ்த்து..
அருமையான கேள்விகள்...தலைவரின் பதில்கள் நிதானத்துடன் தெளிவாக வழங்கப்பட்டு இருக்கின்றன!!
வாழ்த்துக்கள் உங்களுக்கும் மதிக்கும்
அவரை பற்றி மேலும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் படியான அருமையான கேள்விகளும் பதில்களும். வாழ்த்துக்கள்!
200th post - Congratulations!
அன்பின் பிரகாஷ்
இருநூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள் - மதிசுதா பொறுப்பாகவும் இயல்பாகவும் பதிலளித்துள்ளார். எல்லாம் தெரிந்தவனும் இல்லை - ஒன்றும் தெரியாதவனும் இல்லை ; இருவரின் இரத்தமும் ஒன்றே ; புலம் பெயர் தமிழரின் நிலை - பதில்கள் அருமை. நல்வாழ்த்துகள் மதிசுதா
முதலில் உங்கள் இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...உங்களின் கேள்விக்கு, சகோ மதிசுதா அவர்களின் பதில், தெளிவாக இருந்தது...
“நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை“
அருமை சகோ...உங்களைப் பற்றி அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...அடுத்ததாய் நண்பர்கள், சகோவிடம் கேட்ட கேள்விக்கான பதிவை எதிர்பார்க்கின்றோம்
வாழ்த்துகள் மக்கா...
கேள்வி பதில் நல்லா இருக்குடே தம்பி..
வாழ்த்துக்கள் உங்களின் 200 பதிவுக்கு !மேலும் மதியின் சிறப்புக்களை வலையுலகம் அறிந்துகொள்ள நல்லதருனம்!
வாழ்த்துக்கள் உங்களுக்கும் திரு மதி சுதா அவர்களுக்கும்
இரட்டை சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா!
அருமையான கேள்விகள் தெளிவான பதில்கள்.
ஒரு சமூகம் சார்ந்த பதிவரை இதுவரை அறியாதவர்களும் அறியவைத்ததர்க்கு நன்றிகள். தொடர்க...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்....
200 பதிவுக்கு வாழ்த்துக்கள் மாப்ள..........இன்னொரு மாப்ள மதி சுதாவுக்கும் வாழ்த்துக்கள்.......வலி நிறைந்தவன் வாழ்கை வெளிப்படும் போதுதான் இன்னும் அர்த்தம் பெரும் நன்றி!
200 -வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அதுவும் ஸ்பெஷல் பதிவாக பேட்டியுடன்
அமிந்தது இன்னும் சிறப்பு. கேள்விகள் பதில்கள் எல்லமே நல்லா இருக்கு.
உங்களின் 200 பதிவுக்கு வாழ்த்துக்கள், சுதா கலக்றீங்க ....
200 அடித்ததற்கு வாழ்த்துகள் பிரகாஷ்.
//அந்த வயதை தான் காடுகள் தின்று விட்டதே//
மதிசுதாவின் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது.
200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
கேள்வி பதில் பகுதி சிறப்பாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள்
மிக்க நன்றி சகோ இரவு வாறன்..
அருமை நண்பரே அப்பாடியோ 200 பதிவா வாழ்த்துக்கள் சொல்லிகிறேன்..வாழ்க உங்கள் தொண்டு ..
200 அடிச்சுட்டு மனோ மாதிரி மட்டை ஆகாம விக்கி தக்காளி மாதிரி ஸ்டடியா நிற்கும் பிரகாஷ்க்கு வாழ்த்துக்கள்
>>என் பதிவகளில் அடிக்கடி தலைகாட்டுவார். என்னை விட அதிக வயது மூத்தவரானாலும் எம் நட்பை விபரிக்க வார்த்தைகள் இல்லை
சந்தடி சாக்குல ஜீவனை அண்னா ஆக்கிட்டாரே அவ்வ்வ்வ்வ்வ்
என்னது? தொடருமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாழ்த்துக்கள் சகோதரா....
சச்சினை போல 200 அடிச்சிட்டிங்க ..,அவரை போலவே 18 ஆயிரம் அடிக்க வாழ்த்துக்கள் ..,
சுதாவின் விரிவான பேட்டி பல விஷயங்களை தெரிந்துகொள்ள வைத்துள்ளது! சுதாவின் அமைதியான நிதானமான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்! அதுமட்டுமல்ல வலையுலகில் எனது குரு சுதாதான்! வலையுலகம் பற்றி எனக்கு சொல்லித்ததவரும் அவர்தான்!
இந்த நன்றியை நான் எப்போதுமே மறக்க மாட்டேன்! இந்தவாரம் தமிழ்மணம் டாப் பதிவர்களுள் எனக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது! இந்த மகிழ்ச்சியான செய்தியை, வெற்றியை நண்பன் சுதாவின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்! இதனை இந்த பகிரங்க மேடையில் தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!
அதேவேளை இன்னுமொரு விஷயத்தையும் அனைத்து நண்பர்களுக்கும் பகிரங்கமாக கூறுகிறேன்! எனது உயிர் நண்பனான சி பி செந்தில்குமாரே தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும்!
அவரை பின்தள்ளி, முன்னுக்குவர நான் ஒருபோதும் விரும்பியதில்லை! இனியும் அப்படி ஆசைப்படமாட்டேன்! நேற்றைய நாள் செந்தில் மூன்றாவது இடத்துக்கு வந்த கவலையில் கழிந்ததே தவிர, நான் முதலாம் இடத்துக்கு வந்த மகிழ்ச்சியை நான் சிறிதும் உணரவில்லை!
நிற்க, பிரகாஷ் உங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்! உங்கள் பெயரைப்போலவே உங்கள் எதிர்காலமும் பிரகாசமாக இருக்க வேண்டும்!
வலைத்தள வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது! சுதாவுக்கும், பிரகாசுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்!!!
எழுத்துத் துறையில் "இருநூறு" என்பது இன்னும் பலநூறு பதிப்புக்களைத்
தாண்டிச்செல்ல இதுவோர் மயில்க்கல்லாக அமைய மதிசுதாவிற்க்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!....வாழ்க தமிழ்!........
அவரின் பதிலில் பொறுமையும் நிதானமும் தெரிகிறது வாழ்த்துக்கள்
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா....
முதலில் 200வது பதிவிற்கு வாழ்த்துகள் பிரகாஷ்..தொடரட்டும் உங்கள் நற்பணி!...மதிசுதாவின் பதில்களில் தெரிவது முதிர்ச்சியும் உண்மையும்! வாழ்த்துகள்.
கேள்விகேற்ற பதில்கள் ஒரு தனிச் சிறப்புத்தான்
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .
முதலில் அன்பு வாழ்த்துக்கள் பிரகாஷ்! :)
மதிசுதாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிஜம் தோய்ந்த வலிகள். யார் கொடுக்கிறார்கள்? யார் தட்டி பறிக்கிறார்கள்?
எதுவும் புரியாத பொது மக்கள். இந்நிலை மாறி அமைதி பிறக்க போராடும் மனங்கள். என்றேனும் மாற்றம் நிகழும் என்ற காத்திருப்புகளும்
கானல் நீராய் போக... என்ன செய்வது என்ற கேள்வியை மட்டும் சுமக்காமல், ஏதேனும் செய்ய வழிகாட்டும் வரிகள்..
யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு சிலராவது இருக்கிறார்கள் என்ற ஒரு அமைதியான பதில்.. நல்லது நடக்கட்டும்!
http://karadipommai.blogspot.com/
200 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
மதிசுதாவின் ஒவ்வொரு பதிலும் வலி நிறைந்ததாக இருக்கிறது. நல்லது நடக்க பிராத்திப்போம்..
அன்புச் சகோதரன் மதிக்கு வாழ்த்துக்கள். அவரைப் பற்றி தெரியாத சில விடயங்களை அறிந்துகொண்டேன்.
பதிவு உலகத்தில் என்னை மிகவும் கவர்ந்த மனிதர்.......உங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா....
தங்களது ௨௦௦வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.....
200 ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
தங்களின் இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்தும் மதுரை மணங் கமழும் தமிழில் அதிகளவான எண்ணற்ற பதிவுகளை நீங்கள் பகிர வேண்டும் சகோ.
மதிசுதா, பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். அவரைப் பற்றிப் பல தெரியாத விடயங்களையும் அறிய வைத்துள்ளீர்கள் சகோ. நன்றிகள் சகோ.
நல்ல மனிதரிடம் பேட்டிக் கண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது... வாழ்த்துக்கள்
அருமையான கேள்விகளும் பதில்களும்.
200 வது பதிவிற்க்கு எனது வாழ்த்துக்கள்