மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.
இந்த பஸ் ஸ்டாண்டு ஆரம்பிக்ரதுக்கு முன்னாடி வெறும் குப்பை மேடு தான்.... அப்புறமா இடங்களை வளைச்சு போட்டு பஸ் ஸ்டாண்டு கட்டி, ISO 9001 சான்றிதழ் வேற வாங்கியாச்சு. பஸ் ஸ்டாண்டு வந்ததுக்கு அப்புறம் அதை சுத்தி உள்ள இடங்களின் விலை மலையென ஏறி விட்டது. ஆமாங்க, ஒரு சென்ட் ரேட் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபது லட்சம் வரை விலை போகுது. எடத்தை பத்தி நாம ஏன் பேசிக்கிட்டு? அதெல்லாம் பண முதலாளிகள் பேசுற பேச்சு. இப்ப நம்மளுக்கு அந்த டாபிக் வேண்டாம். நாம பஸ் ஸ்டாண்டுக்கு வருவோம்.
பஸ் ஸ்டாண்டுக்கு மொத்தம் மூணு வழிகள் இருக்கு. ஒண்ணு பஸ் உள்ள போற வழி. இன்னொன்னு பஸ் வெளியே போற வழி. இன்னொன்னு நடுவுல அழகா ரவுண்டா பயணிகள் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. எப்பவுமே பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கும். பஸ் ஸ்டாண்ட சுத்தி காம்பௌண்ட் சுவர் கட்டியிருக்காங்க. அங்கிட்டு வெறும் குப்பை மேடு தாங்க. ஏதோ, இப்ப ஒரு வருஷ காலமா குப்ப நாத்தம் அடிக்கிறது இல்லை. எப்படியோ சுத்தம் பண்ணிட்டாங்க.. ஆனா அதுக்கு பதிலா பஸ் ஸ்டாண்டு கட்டுன காலத்துல இருந்து ஒரே ஒரு நாத்தம் மட்டும் மாறவே இல்லை. கரக்ட் நீங்க நெனச்சது, வேறென்ன நாத்தமா இருந்துர போகுது? எல்லாம் மூச்சா நாத்தம் தான்.
நம்ம அஞ்சா நெஞ்சன் பஸ் ஸ்டாண்ட சுத்தி சுத்தமான டாய்லெட் கட்டி விட்டிருக்காரு. நம்மாளுக அதை யூஸ் பண்ண மாட்டாங்க. திறந்த வெளி தான். குடலை புரட்டும் அந்த நாத்தத்தில், நம்மாளுக அந்த நாத்தமே பிடிக்காத மாதிரி மூக்கை பொத்திட்டு அதே இடத்துல போய் மூச்சா அடிப்பானுக பாருங்க, அவிங்க மேல கோவம் கோவமா வரும். அவன் நிக்ரதுக்கு கூட அங்க இடம் இருக்காது, ஒரே ஈரமா இருக்கும். இந்த நாத்தத்துக்கு மத்தில பூக்கடை, பழக்கடை, பங் கடை, டீக்கடை ன்னு நம்மாளுக மொச்சிக்கிட்டு இருப்பாங்க. அதென்னமோ தெரியலைங்க, இங்க இருக்கற பூக்கடையில நூறு எண்ணிக்கை மல்லிகை பூ எப்பவுமே அஞ்சு ரூவா தாங்க. விலை கூடவே கூடாது.
டவுன் பஸ் நிக்கற இடத்துக்கு பக்கத்துல தமிழ்நாடு தேயிலை கழகம் நடத்துற டீக்கடை இருக்கு. ஏதோ, டான் டீ ன்னு போடறான். டீ நல்லா டேஸ்டா இருக்கும். இங்க ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரெண்டு ரூபாய்க்கு விக்கிறாங்க. பிளாட்பாரத்துல நிக்க கூட இடம் ஈல்லாம கடைகளா இருக்கும். கடைய கட்டடத்துக்கு உள்ள வைங்கன்னா வெளில வச்சிருக்காங்க. மக்கள் நடந்து போனா டீயோ, வடையோ சாப்பிடுரவங்களை தட்டி விடாம போக முடியாது. அவ்வளவு ஆக்கிரமிச்சு இருப்பாங்க. நைட் நேரத்துல திடீர்னு டிபன் கடைகள் பிளாட்பாரத்தில் முளச்சிடும். உட்கார நல்ல டேபிள் சேர் கூட இருக்காது. அவிங்க சொல்றது தான் ரேட்டு. பஸ்கள் விடுற புகை, மற்றும் எல்லா தூசியும் அந்த நைட் நேரத்துல டிபன் மேல விழுகரது நம்ம கண்ணுக்கு தெரியவே தெரியாது. சாம்பாருன்னு பேருல ஊத்துவாங்க பாருங்க கடலை மாவு தண்ணிய, அய்யோ சாப்பிட சகிக்காது. அவிங்க விக்கற கூல்ரிங்க்ஸ், வாட்டர், பிஸ்கட் போன்ற எல்லா பொருட்களின் விலையும் எம் அர் பி ரேட்டை விட ரெண்டு ரூவா அதிகமா தான் இருக்கும். அவிங்க கிட்ட நியாயம் பேசினோம் வச்சுக்கங்க, நம்மள அநியாயமா காதுல கேட்க கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவாங்க.
என்னடா, தலைப்புல ரெண்டு டாஸ்மாக் கடைன்னு போட்டுட்டு அத பத்தி ஒண்ணுமே சொல்லலைன்னு நீங்க கத்தறது என் காதுல விழுது. இப்ப உங்கள அங்க தான் கூட்டிட்டு போறேன்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு ரெண்டு பக்கமும் டாஸ்மாக் கடைகள் இருக்கு, பஸ் வெளியேற பக்கமா, பூ மார்கெட் எதுத்த மாதிரி ஒரு கடை. பஸ் உள்ளே போற பக்கமா, வரவேற்பு ஆர்ச் பக்கத்துல ஒரு கடை. ரெண்டு கடையும் காலையில இருந்து இரவு வரை செம கூட்டமா இருக்கும். பஸ் பயணிகள், டிரைவர், கண்டக்டர் கூட்டமா இருக்கும். பூ மார்க்கெட் பக்கத்துல பார் அளவு சின்னது. நைட் நேரத்துல பார்ல இடம் இல்லாம வெளியில நின்னு தண்ணி அடிப்பாங்க. எல்லோர் கையிலும் பெரிய பை ஒண்ணு தொங்கிக்கிட்டு இருக்கும். ஆமாங்க, எல்லோருமே பயணிகள் தான். நாமெல்லாம் ஊருக்கு சீக்கிரமா போக முடியுமான்னு பார்ப்போம். ஆனா அவிங்க நல்லா மப்பு போட்டுட்டு ஊருக்கு போவாங்க.
அடுத்ததா ஆர்ச் பக்கத்துல இருக்குற கடையில் பார் ரொம்ப பெரிசு. சரக்கு வாங்கிட்டு நம்மாளுக உள்ளே போனாங்கனா நல்லா மப்பு ஏத்திட்டு தான் வருவாங்க. எந்த நேரமும் கூட்டம் களை கட்டி இருக்கும். பார்ல ஸ்நாக்ஸ் ரேட் அதிகமா இருக்ரதுனால நம்மாளுக சரக்கை மட்டும் வாங்கிக்கிட்டு அந்த ஆர்ச் மறைவில நின்னுட்டு குடிப்பாங்க. கடைக்கு முன்னாடி சின்ன சின்ன தள்ளு வண்டியில பிரியாணி, சிக்கன், மட்டன் விப்பாங்க. அந்த கடைகளும் நல்லா கூட்டமா இருக்கும்.இப்போ ஏதோ பிரச்சினையில அந்த கடை இடம் மாறிருச்சு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி. மாட்டுதாவனில இருந்து சர்வேயர் காலனி போற வழில ஒரு சுடு காடு இருக்கு. அதுக்கு பக்கத்துல மாத்திட்டாங்க. சுடு காட்டுக்கும், கடைக்கும் சுமாரா நூறு அடி தூரம் தான் இருக்கும். சைட் டிஸ்சா பொன வாடைய பிடிச்சுக்கிட்டு தண்ணியடிக்க வேண்டியது தான். இன்னும் இங்க கடைக்கு பக்கத்துல தள்ளு வண்டி உணவு கடைகள் முளைக்கல. சீக்கரமா வந்துடும்னு நம்பிக்கையில தண்ணி அடிச்சுட்டு இருக்காங்க. சரிங்க இதோட உங்கள அறுக்ரத முடிச்சுக்கறேன்.
டிஸ்கி: நான் தினந்தோறும் வேலைக்கு சென்று வரும் போது இவைகளை பார்த்து வருவதன் பாதிப்பே மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டு பற்றியும், டாஸ்மாக் கடைகளை பற்றியும் இந்த பதிவு எழுதுவதற்கான காரணம். அவ்வளவே!
42 கருத்துரைகள்:
இலவசமாக மாட்டுதாவணியை சுற்றி காட்டியதுக்கு நன்றி...ஹி ஹி...
பஸ் ஸ்டாண்டுக்கு மொத்தம் மூணு வழிகள் இருக்கு. ஒண்ணு பஸ் உள்ள போற வழி. இன்னொன்னு பஸ் வெளியே போற வழி. இன்னொன்னு நடுவுல அழகா ரவுண்டா பயணிகள் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு.//
நான் நினைத்தேன், மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டை வைச்சு மொக்கை போடப் போறீங்க என்று.
சுகாதரத் திணைக்களம் இந்தப் பஸ் ஸ்டாண்டின் தூய்மையினைப் பேணும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
// நம்ம அஞ்சா நெஞ்சன் பஸ் ஸ்டாண்ட சுத்தி சுத்தமான டாய்லெட் கட்டி விட்டிருக்காரு.//
அவரு இதெல்லாம் கட்டுறாரா??
நோ நோ இது மொக்கை பதிவல்ல நிரு,சீரியஸ்..ஹிஹி
@NKS.ஹாஜா மைதீன்இலவசமாக மாட்டுதாவணியை சுற்றி காட்டியதுக்கு நன்றி...ஹி ஹி...>>>
வோட் போட்டிங்கல்ல,
@நிரூபன்நான் நினைத்தேன், மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டை வைச்சு மொக்கை போடப் போறீங்க என்று.>>>>
இது மொக்கை பதிவு இல்லை சகோ...
தாகசாந்தி அடஞ்சிட்டு போகட்டும் விடுங்கய்யா..
@மைந்தன் சிவா// நம்ம அஞ்சா நெஞ்சன் பஸ் ஸ்டாண்ட சுத்தி சுத்தமான டாய்லெட் கட்டி விட்டிருக்காரு.//
அவரு இதெல்லாம் கட்டுறாரா??>>>>
நெசமாவே சுத்தமா இருக்கும்.
@MANO நாஞ்சில் மனோ
தாகசாந்தி அடஞ்சிட்டு போகட்டும் விடுங்கய்யா..>>>>
மக்கா சொல்லிட்டாரு. எல்லோரும் கேட்டுக்கங்க.
ரொம்பத் தேவையான பதிவு. இருந்தாலும் பிரச்னைகளைத் தீர்க்க என்ன வழிகள் என கருத்துகளையும் சொல்லியிருக்கலாம். இது மொக்கைப்பதிவல்ல. பொறுப்பான ஒன்றே.
கடைகள் இருந்தால் மக்கள் வாங்குவார்கள். உணவுக்கடைகளென்றால் கண்டிப்பாக வாங்கிச் சாப்பிடுவார்கள் என்பதைத் தெரிந்தே அங்கே வியாபாரிகள் அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் ? விமான நிலையத்தில் நடப்பதைப்போல நடக்கும், அங்கே வியாபாரிகள் அக்கிரமம் இல்லை. மதுரை வி.மா.த்தில் கூட. ஒரே ஒரு கடைதான். எதிர்காலத்தில் வரினும் அவை எத்தரத்தில் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பதான் அவர்கள் அழிச்சாட்டியம் பண்ணமுடியாது. வி.மா மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ளது.
மாட்டுத்தாவணி ஒரு பேருந்து நிலையமா? அல்லது அங்காடியா ? எங்கு பார்த்தாலும் கடைகள். இதற்கு காரணம் அரசியல் வாதிகளும் அவர்களுக்கு உடந்தை போகும் அதிகாரிகளும்.
எவர் ஆட்சிக்கு வந்தாலும் மாட்டுத்தாவணி, வியாபாரிகளின் ராச்சியமே.
@simmakkal
தீர்க்க என்னென்ன வழிகள் என நாம் சொன்னால் கேட்க ஆட்கள் உண்டா? நண்பரே...
ஓஹோ ஓஹோஹோஹஓஹோ !
அன்பின் பிரகாஷ்
மாட்டுத்தாவணியும் டாஸ்மாக்கும் - நல்ல அலசல் - ஒண்னூம் ப்ண்ண முடியாது - இப்படியே தொடர வேண்டியதுதான் - டிஸ்கி நம்ப்றாப்ல இல்லையே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
I don't want to finish it on negative vote:
Here r my suggestions:
1, Remove all shops from inside the Bus Station Complex, including hotels and other eateries like tea sellers.
2. Construct a long corridor-like building just adjoining the boundary wall on any side, or both sides.
3. Call it Food Court. Move all eateries, big hotels and small tea stalls, including edible items sellers like sweetmeat shops.
4. The place where these sellers and shops / hotels occupy r occuping now, should be free from encroachment except allowing newspapers / magazines selling shops, who may be asked to sell water bottles also. Water bottle is an essential item to be purchased on emergencies too. So, it should be near where the buses stand.
Koyambedu is better in this regard. Sellers are allowed only in particular places there. But outside Koyambedu is a shame on Tamilians and their style of living.
While planning,the engineers should have earmarked an area to build a food court.
It is not too late to undo the error. We can make it happen if the public ask for removal of encroachment but not elimiantion of the vendors. They will be still in the bus station.
Peace on both sides - yours and theirs.
For people using the bus station as an open toilet, u cant blame either polticians or officials. Only your own Tamilians about whom u r so proud as your blog describption boast, r responsible. Can u change ur people and their deplorable life style ?
Be harsh with them in ur blog posts at least now onwards.
தமிழன் மிரட்டலுக்குத்தான் பயப்பட்டு திருந்துவான்.
பேருந்து நிலையத்தில் சுற்றயுள்ள ஹோட்டலில் எப்போதும் உணவருந்த கூடாது ,பட்னி கிடந்தாலும் பரவாயில்லை என்று
டாஸ்மாக் பாரின் அளவுகளை சரியாக சொல்கிறீர்களே ,ஆனால் நான் அப்படி இல்லை நான் ரொம்ப நல்ல பையன்ப்பா
@நா.மணிவண்ணன்
டாஸ்மாக் பாரின் அளவுகளை சரியாக சொல்கிறீர்களே>>>>>
ஹி..ஹி.. பதிவுக்காக டீடெயில்ளா கலெக்ட் பண்ணினேன்.
அங்கு எத்தனையோ விபத்துக்கள் கடைகளால் நடந்தும் ஒன்றும் மாற்றம் இல்லை .அங்கு டாஸ்மாக் செலும் வழி அன்று மிக பெரிய போர்டுகள் இருக்கும் ஆனால் புதூர் செல்லும் வழி என்று போர்டுகள் இருக்காது .என்ன செய்ய நாம் சொல்லி வருத்தபடதான் முடியும் .இதை நீங்கள் பதிவு செய்தது பாரட்டபட வேண்டிய ஒன்றுதான்
ரவுண்ட் அப் நல்லா இருக்குதுங்களே!!!
அப்ப டாய்லெட்ஸ் கட்டிவிட்டாலும் மக்களுக்கு வேணாமா?????????
அட ராமா.............
பா வா டை தாவணியைப்பார்த்த உருவமா!
பூ வாடைப்பூத்துவர பூத்த பருவமா! என்ற பாடல்போல அழகாக மாட்டுத்தாவணியையும், அங்குள்ள பூக்கடைகள், வடைக்கடைகள் முதல் டாஸ்மாக் கடைகள் வரை கூட்டிப்போய் அசத்திவிட்டீர்கள்.
நான் ஓருரு முறை மாட்டுத்தாவணியில் ஏறி இறங்கி மதுரை சென்று வந்துள்ளேன். அங்கு மாட்டையும் காணோம், தாவணியையும் காணோம். [எல்லாம் ஒரே சுடிதார் அல்லது புடவை மயம்]
என்ன இப்படியொரு பெயர் என்று நினைத்துக்கொண்டு வந்தேன்.
தங்கள் பதிவிலும் பெயர் காரணம் கூறப்படவில்லை. மற்றபடி பதிவு ரொம்ப நல்லா இருந்தது.
துர்நாற்றம் என்பது எல்லா ஊர் பஸ் ஸ்டாண்டுகளிலும் உள்ள பொதுப்பிரச்சனையே. மக்கள் இதிலேயே பழகி விட்டார்கள்.
ரூ.2,3,5 என்று காசு மட்டும் கரெக்டா வசூலிப்பார்கள். சுத்தமோ சுகாதாரமோ கிடையவே கிடையாது. சில இடங்களில் கழுவத் தண்ணியோ, ஓட்டையில்லாத தகரக் குவளையோ கூட கிடையாது.
@பிரபாஷ்கரன்
.அங்கு டாஸ்மாக் செலும் வழி அன்று மிக பெரிய போர்டுகள் இருக்கும்>>>
ஆமாம். பெரிய போர்டுகள் நிறைய இடங்களில் வைத்துள்ளார்கள்.
@FOOD
நல்லா சுத்திப் பார்த்துட்டுதான் சொல்றீங்க. நான் மதுரை வரும்போதெல்லாம், அந்த கடையில் Lemon Tea அருந்துவது வழக்கம். அருமையாக இருக்கும்.>>>>
மாடுதாவணியில எனக்கு பிடிச்சது அங்க போடற டீ தான்.
@FOOD
மிக நேர்த்தியுடன் உங்கள் ஆதங்கங்களை வெளியிட்டுள்ளீர்கள்.அவசர சிகிச்சை தேவைப்படும் ஏரியா அது!>>>
உங்கள போல உணவு நண்பர் இங்கு இருக்காரா?
@துளசி கோபால்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் பதிவிலும் பெயர் காரணம் கூறப்படவில்லை. மற்றபடி பதிவு ரொம்ப நல்லா இருந்தது.>>>>
பெயர் காரணமா? இன்னொரு பதிவுல சொல்லிட்டா போச்சு.
அனுபவம் பேசுதோ?
அடேய் ஒழுங்கா வேலைக்கு போடன்னா , சுத்தி கடைகல வேடிக்கை பாக்குறதே வேலையாப் போச்சே
அடப்பாவி..
எத்தனை தீ விபத்துக்கள் நடந்தாலும் அதிரடி நடவடிக்கை எல்லாம் ஒரு வாரம் தான். திரும்ப பழையபடி வியாபாரிகள் இஷ்டத்துக்கு ஆக்கிரமிப்பு பண்ணி கடைவச்சு நடுபாதையில் அடுப்பைவச்சு வடைசுடும் அராஜகம்தான்.
எனக்கென்னவே டாஸ்மாக் சைட்டிஷ் ரேட் எல்லாம் சொல்றதைபார்த்தால் சந்தேகமா இருக்கே????
அங்குட்டு ஒரு ரவுண்டு அடிச்ச மாதிரி இருக்குதுங்க...
@வை.கோபாலகிருஷ்ணன்
மாட்டுத் தாவணியென்றால் மதுரையில் மட்டுமல்ல. எல்லாப்பெரிய ஊர்களிலும் சிற்றூர்களிலும் இருந்தன. அக்காலத்தில் மோட்டார் வாகனங்கள் கிடையா. மாட்டு வண்டிகளே. வயலை உழுவதற்கும் பயணங்கள் செல்லவும் மாடுகள் தேவை. அதனால் அவைகளை வாங்குவோரும் விற்போரும் இருந்தபடியாலும், அவர்கள் அதை நாளும் எல்லாவிடங்களிலும் செய்ய முடியாதபடியாலும், ஊரில் வெளிப்புறத்தில் பொதுமக்களுக்கு இடைஞசல் இருக்காவண்ணம் ஒரு பொது இடத்தைத் தேர்ந்தெடுத்து வாரத்தில் ஒருநாளோ மாதத்தில் ஒரு நாளோ கூடினார்கள். மாடு விறபனை / வாங்கலை 'மாடு பிடித்தல்' என்பார்கள். வாங்குபவர் கையை, விற்பவர் பிடிப்பார். இருவர் கைகளும் ஒரு துண்டால் மூடப்படும் பிறர் பார்வையில் படக்கூடாதாம்! விலை வாயால் சொல்லப்படாது. கைவிரல்களைத் தொட்டு குறிகாட்டப்படும். இதுவே மாடு பிடித்தல். வாயிலும் சொல்லலாம் புரியாபட்சத்தில்.
The cattle were used as investments for a family also, just like gold today. A family was proud of such possession, which was also given as dowry for daughter. When a family was in dire straits financially, they would bring their cattle (like sheep, goat, cows, oxen, bullocks, ram) to maattuththaavani. That is called in economics Distress sale.
மதுரையில் மட்டுமல்ல. திருச்செந்தூரிலும் நான் நேரில் பார்த்ததுண்டு. அவ்வூர் சுற்றுவட்டார் நூற்றுக்கணக்கான சிற்றூர்களுக்கு ஒரு பெரிய மாட்டுத்தாவணியாக விளங்கியது. அதுவும் - என்னே ஒற்றுமை ! - இன்று ஒரு பெரிய பேருந்து நிலையமாகி விட்டது. ஆனால், மதுரையைப்போலில்லாமல், அதன் பெயர் காமராஜர் பேருந்து நிலையம் என அழைக்கப்படுகிறது.
மதுரையின் பழங்காலத்தைப்பற்றி இன்னொரு மதுரைப்பதிவாளர் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரிடம்தான் நீங்கள் போக வேண்டும் இம்மாதிரியான விடயங்களைத் தெரிந்து கொள்ள.
இப்பதிவாளர் இளையவர் என நினைக்கிறேன்.
மாடுகள் 'போரடிக்கவும்' பயன்படுத்தப்பட்டன. சிரிக்காதீர்கள். போர் என்றால் threshing paddy.
மதுரையில் எங்கும் வயல்கள். நெல் விளைச்சல் அப்படி. நெற்பயிரை அம்பாரமாகக் குவித்து வைத்துப்போரடிக்க ஆனைகளைப்பயன்படுத்தினர்கள் பணம்படைத்தோர். எனவே
'மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டி போரடிக்கும் அழகான தென் மதுரை"
என்று அக்காலப் புலவர் மதுரையின் செல்வச்செழிப்பை எடுத்துச்சொன்னார்.
I am not from Madurai. I dont either like or hate ur city. I am an impartial observer only
simmakkal said... 32
@வை.கோபாலகிருஷ்ணன்
மாட்டுத் தாவணியென்றால் மதுரையில் மட்டுமல்ல. ..........
Thank you for your kind explanation, Sir. நானும் பிறகு மதுரை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு விட்டேன். மாடுகள் விற்க/வாங்க கூட்டப்படும் சந்தை என்ற விபரம் அறிந்துகொண்டேன்.
சும்மா ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே தமிழ்வாசியிடம் தெரியாததுபோல கேட்டிருந்தேன்.
என்னை உத்தேசித்து பலருக்கும் உங்கள் விளக்கம் பயன்பட்டிருக்கும்.
மிக்க நன்றி
பிரகாஷ் எனக்கு மதுரை ன்னா ரொம்ப புடிக்கும்! எப்போதாவது மதுரைக்கு வரணும் னு ஆசை! மீனாட்சி அம்மனை தரிசிக்கணும்! உங்கபதிவு அந்த ஆசையை மேலும் தூண்டி விட்டிருக்கு!
@simmakkal
@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி நண்பர்களே! திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் பெயர் விளக்கம் கேட்டதும் அது சம்பந்தமாக என் நண்பர்களிடம் விசாரித்தேன் இன்னொரு பதிவு எழுத. ஆனா, சிம்மக்கல் அவர்கள் அருமையா விளக்கம் கொடுத்திருக்கிறார். நன்றி. தற்போது புதிதாக சென்ட்ரல் மார்க்கெட் கட்டியுள்ளார்களே, அது கட்டுவதற்கு முன் அந்த இடத்தில் மாட்டு சந்தை நடைபெறும். நான் நிறைய முறை பார்த்துள்ளேன். மார்கெட் வந்த பின் சந்தை எங்கு நடக்கிறது என தெரியவில்லை.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
கண்டிப்பா வாங்க. மதுரை உங்களை அழைக்கிறது.
சுடு காட்டுக்கும், கடைக்கும் சுமாரா நூறு அடி தூரம் தான் இருக்கும்.
.... என்னே ஒரு இட பொருத்தம்! பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருக்கிறதை விட, இது சரியா இருக்குது!
மாட்டுத்தாவணியை சுற்றிக்காட்டிய பிரகாஷிற்கு நன்றி.
பகிர்வுக்கு மிக்க நன்றி பிரகாஷ்!!
டைட்டில் செம .. பதிவு இண்ட்ரஸ்ஸ்ட்டிங்க்
மாட்டுத்தாவணின்னு பேரைப்பத்ததுமே
சிரிப்பு வந்தது. மாட்டுக்கெல்லாம் தாவணி சுத்தி விடுராங்களோன்னு. அனா
பதிவு பார்த்ததும் இப்படில்லாமா பொதும
க்கள் கூடுர இடத்தை அசிங்கம் பண்ணுவாங்க?
தக்வலுக்கு நன்றி
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
முடிஞ்ச பதில் சொல்லுங்க
http://speedsays.blogspot.com/2011/05/talk-me.html
மதுரை மாட்டுத்தாவணி பெயர் பார்த்தே பதிவைப் படிக்க வந்தேன். மதுரை வந்து நீண்ட நாட்களாகி விட்டன. அந்தக் குறையை சற்று தீர்த்த பதிவு.