CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013

வணக்கம் வலை நண்பர்களே,

        2013-ம் வருடம் இறுதி நாட்களை நெருங்கி விட்டது. பல பதிவர்களும் பல டாப் 2013 பதிவுகள் பகிர்ந்து வரும் இவ்வேளையில் தமிழ்வாசியில் இந்த வருடம் எழுதிய பதிவுகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் வாசகர்கள் அதிகம் வாசித்து அதிக பக்கப்பார்வைகள் பெற்ற பத்து பதிவுகளை வரிசையாக தொகுத்துள்ளேன். அவற்றை பார்ப்போமா?

மேலும் வாசிக்க... "வாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013"



ஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி? வாசி'ஸ் கிச்சன்

        வீட்டில் மட்டும் சமைத்து ருசி பார்த்துக் கொண்டிருந்த நான் இன்று வெளியான இரண்டு முக்கிய சமையல் பதிவுகளால் சற்று ஆடிப்போனேன். ஏனெனில் உப்பு, எண்ணெய், காரம், புளிப்பு, இனிப்பு என எதுவும் சேர்க்காமல் தண்ணீரை சுவையானதாக உடலுக்கு ஆரோக்கியமான, இதமான சுடு தண்ணீராக சமைப்பது எப்படி என பதிவுகள் போட்டு அனைவரின் வீட்டிலும் புதியதொரு சமையல் குறிப்பை ஆடவர்களிடத்தில் அளித்து பெரும் சேவை செய்திருந்தார்கள். அவர்களது சுடு தண்ணீரை வச்சு, சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாயினுள் திணித்து சாப்பிடும் அவித்த முட்டை செய்வது எப்படின்னு உங்களுக்கு இங்க சொல்லப் போறேன்...

மேலும் வாசிக்க... "ஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி? வாசி'ஸ் கிச்சன்"



வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி? Updated!


வணக்கம் வலை நண்பர்களே,
இன்னும் ஆறே நாட்களில் 2014-ம் வருடம் துவங்க உள்ளது. புது வருடத்திற்காக நமது வலைத்தளத்தில் பதிவை வாசிக்க வரும் வாசகர்களுக்கு வாழ்த்து சொல்ல நமக்கெல்லாம் விருப்பம் இருக்கும். ஒரு அனிமேட்டட் படம் மூலம் வாழ்த்து சொன்னால் மிகவும் நல்லா இருக்கும். அதற்காக சில வாழ்த்து படங்கள் இங்கே இணைத்துள்ளேன். இணைப்பதற்கான வழிமுறையும் பகிர்ந்துள்ளேன். அதன்படி உங்கள் வலையில் இணைத்து வாசகர்களுக்கு ஹேப்பி நியு இயர் சொல்லுங்கள்.

மேலும் வாசிக்க... "வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி? Updated!"



மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று!


வணக்கம் வலை நண்பர்களே,
மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் மதுரை சம்பந்தமான செய்திகள் சில தொகுப்பாக எழுதியுள்ளேன். வாசித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

காற்றில் பறக்கும் தலைக்கவசம்:
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வேண்டும் என்கிற சட்டம் இப்போது அமலில் இருக்கான்னு தெரியல. அப்படியே அமலில் இருந்தாலும் யாரும் தலைகவசம் அணிவதே இல்லை. அவர்களை காவல்துறையும் கண்டுகொள்வது கிடையாது. மதுரையில் கடந்த சில மாதங்களாக எந்த இடத்தில பார்த்தாலும் காவல்துறை இருசக்கர வாகனங்களை பிடித்து ஆவணங்களை சோதனை செய்து, இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கிறார்கள். ஆனால், தலைக்கவசம் அணியாதவர்களை ஒன்றுமே செய்வது இல்லை. அவர்களை விட்டுவிடுகிறார்கள். 

கடந்த மாதம் மதுரையில் இருசக்கர வாகன விபத்துகள் கொஞ்சம் அதிகம் தான். உயிரிழப்பும் அதிகம். இவை பெரும்பாலும் குடி போதையாலும், தலைக்கவசம் இல்லாததாலுமே உயிரிழப்பு ஏற்பட்ட விபத்துக்கள். எனவே காவல்துறை முதலில் தலைகவசம் அணியாதவர்களை பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வைகை:
மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவில், அதற்கடுத்து நினைவுக்கு வருவது வைகை ஆறு. இப்போதெல்லாம் ஆற்றில் கழிவு நீரைத் தவிர தண்ணீர் ஓடுவதென்பது அபூர்வமாகி விட்டது. ஏப்ரல் மாதம் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி கள்ளழகர் வைகையில் இறங்கும் நாளில் மட்டும் எப்பாடுபட்டாவது வைகை அனையிலிருக்கும் சொற்ப தண்ணீரை அரசானை மூலம் வர வைத்து விடுவார்கள். அன்று மட்டும் ஆற்றின் அகலத்திற்கு தண்ணீர் ஓடும். மாமதுரை எனும் மதுரை பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சியில் வைகையைப் போற்றுவோம் என வைகைக்காக சுத்தம் செய்து சீர் படுத்தி ஒரு நாள் விழாவே கொண்டாடினார்கள். ஆனால் இன்றோ வைகை எப்படியுள்ளது என படத்தில் பாருங்கள்.



மீனாட்சியம்மன் கோவில் அதிசயம்:
 மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஓர் அதிசயம்...... யாரேனும் பார்த்து உள்ளீர்களா????? வேப்பமரத்தில் அரச மரம் ஒட்டி வளர்ந்து இருக்கும்....
அரச மரத்தின் வேர், வேப்ப மரத்தில் மையப்பகுதியில் இருந்து ஒட்டி வளர்ந்து இருக்கும்.... (ஒரு படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்)

கோவிலின் வெளிப்புற நடைபாதையில் மேற்கு கோபுரம் உள்ள பகுதியில் வலப்பக்கமாக தென் பக்கம் நோக்கி வருகையில் தென் கோபுரம் நோக்கி திரும்புகிற இடத்தில் இந்த இரட்டை மரம் உள்ளது.....


செல்லூர் பாலம்:
மதுரையின் சாலை மேம்பாலங்களில் மிக முக்கியமானது செல்லூர் மேம்பாலம் ஆகும். இந்த பாலம் வருவதற்கு முன் திண்டுக்கல் மார்க்கமாக வருகிற ரயில்களால் செல்லூர் ரயில்வே கிராஸிங் பெரும்பாலும் மூடியே இருக்கும். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் முதல் கோரிப்பாளையம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் கிமி தூரங்களாக நிற்க வேண்டி இருக்கும். செல்லூர் மயானத்திற்கு செல்லும் இறந்தவர்களின் உடலும் ரயில் கேட் திறக்கும்வரை காத்திருக்கும் அவலமும் இருந்தது. 


 (படங்கள்: செல்லூர் பாலத்தில் இருந்து வைகையை கடந்து செல்லும் இருப்பாதை பாலங்கள்)

இதனால் பாலம் கட்ட வேண்டும் என முடிவெடுத்து பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்து சுமார் நாலைந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உயிரற்ற உடல்களும், அவசர ஊர்திகளும் தடையின்றி செல்ல முடிகிறது. ஆனால் இந்த ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் நலமாக இருக்கும்.


மின்சார சிக்கனம் தேவை எ(இக்கணம்):
அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றில் இக்கால நாகரீகவாழ்வில் மின்சாரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்சார பற்றாக்குறையால் கரண்ட் எப்ப இருக்கும்? போகுமென தெரியாத நிலையில் அன்றாட வாழ்வை நகர்த்தியாக சூழ்நிலையில் நாம் இருக்கையில் அரசாங்கமோ மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதை இந்தப் படத்தில் பாருங்கள்.


இடம்: மதுரை - பாத்திமா காலேஜ் - வழிவிடும் பெருமாள் கோவில் அருகில் - திண்டுக்கல் ரோடு.

நேரம்: காலை 10:15

****************************************************
மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் செய்திகள் இன்னும் வரும்....
மேலும் வாசிக்க... "மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று!"



மதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்

மதுரையில் பொழுதுபோக்குவதற்கான சிற்சில இடங்களில் தல்லாகுளம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே இருக்கும் சுற்றுச்சூழல் பசுமை பூங்காவும் ஒன்று. மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தில் இயற்கையை சுவாசிக்க நகருக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இடம் இது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சென்ற வாரம் பசுமையை ரசிக்கலாம் என சென்றிருந்தேன். 

மேலும் வாசிக்க... "மதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்"



வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000!

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.
எங்களது வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமத்தில் இணைய இங்கே அழுத்துங்கள்



சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!


ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள், அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.


பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு



விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.



கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்

----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி,உங்கள் தொடர்புஎண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு

25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும்.

கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 


நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது. 

கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்



நடுவர்கள்

முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்


இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)


மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)



ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.
source: vettiblogger
மேலும் வாசிக்க... "வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000!"



பஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் - லென்ஸ் ரவுண்ட்!

வணக்கம் வலை நண்பர்களே,

ரொம்ப மோசம் நான்....

அப்படி என்ன மோசம் போயிட்டேன்னு நெனக்கறிங்களா? 
மேலும் வாசிக்க... "பஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் - லென்ஸ் ரவுண்ட்!"



எல்லாமே பேஸ்புக் சரக்கு!

வணக்கம் வலை நண்பர்களே,

நானும் இங்க எழுதறேன் பேஸ்புக் ஸ்டேடஸ்.... இது ச்சும்மா TRIAL தான்...
மேலும் வாசிக்க... "எல்லாமே பேஸ்புக் சரக்கு!"



தீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி?

வணக்கம் வலை நண்பர்களே,
        தீபாவளி வந்தாச்சு. புதுத் துணிகள் எடுத்தாச்சு. பட்டாசெல்லாம் வாங்கியாச்சு. இனிப்பு கார வகைகளும் செஞ்சாச்சு. அப்புறம் என்ன சொல்ல வரேன்னு பாக்கறிங்களா? ஒன்னும் பெருசா சொல்ல வரல. இருந்தாலும் என்னமோ சொல்றேன். கேட்டுக்கங்க. காலையில அஞ்சு மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருங்க. லேட்டா எந்திரிச்சா என்ன? அப்படின்னு கேள்வி கேட்கிறவங்கள ஒன்னும் பண்ண முடியாது. உங்க இஷ்டம் எப்ப வேணாலும் எந்திரிங்க. எப்படியோ எந்திரிச்சாச்சு. அடுத்து குளிச்சு புதுத்துணி போட்டு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் தான் வெடி விடனுமா? எந்திரிச்சவுடனே விடக் கூடாதான்னு கேட்கரவங்க ஒரு சரம் அல்லது ஒரு அணுகுண்டு மட்டும் ஆசைக்கு காலையில விட்டுக்கங்க. 

மேலும் வாசிக்க... "தீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி?"



தீபாவளி ஆரம்பம்!!!


வணக்கம் வலை நண்பர்களே,

இதோ நாளை மறுநாள் தீபாவளி. சொந்தங்களுடனும், நட்புக்களுடனும் கூடி மகிழ்ந்து கொண்டாடும் நன்னாள் தீபாவளி. 

மேலும் வாசிக்க... "தீபாவளி ஆரம்பம்!!!"



வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!

வணக்கம் வலை நண்பர்களே,

தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது  வலைச்சரம் (www.blogintamil.com) என்னும் தளத்தில் ஆசிரியராக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். தாங்கள் விரும்பி வாசிக்கும் தளத்தில் பிடித்த பதிவுகள் பற்றி, வலைப்பூவை பற்றி சில வரிகள் தொகுத்து வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினம் ஒரு பதிவாக பதிவிட வேண்டும்.

வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக தங்களுக்கு அழைப்பு வந்து, தாங்களும் ஏற்றுக் கொண்ட பின், வலைச்சரத்தில் இணைவது எப்படி? பதிவு எழுதுவது எப்படி? என சில சந்தேகங்களுக்கான விடை தான் இந்த பதிவு...

வலைச்சரத்தில் பதிவு எழுத தங்களை இணைப்பது எப்படி?

தங்களின் அனுமதி வலைச்சர குழுவிற்கு கிடைத்த உடன், உங்களுக்கு வலைச்சரத்தில் இருந்து ஒரு மெயில் அனுப்பப்படும். அந்த மெயில் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல இருக்கும்.


அந்த மெயிலில் Accept Invitation என்பதை க்ளிக் செய்தால்... கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பக்கம் திறக்கும்.
பின்னர் click here to sign in என்பதை கிளிக் செய்து பிளாக்கர் கணக்கில் நுழைந்த உடன் Accept invitation என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பிளாக்கர் டேஷ்போர்டில் வலைச்சரம் இணைந்து இருக்கும்.
மேலே படத்தில் உள்ளவாறு எனது தமிழ்வாசி பிளாக்குடன் டேஷ்போர்டில் வலைச்சரமும் இணைந்துள்ளது. அதே போல உங்களது டேஷ்போர்டில் இருக்கும். 

பதிவில் லிங்க் இணைப்பது எப்படி?

பின்னர் New post எழுதும் பக்கத்தை திறந்து தகுந்த தலைப்பிட்டு பதிவுகள் எழுத வேண்டும். பதிவில் பலரது வலைப்பூக்களையும் அறிமுகம் செய்ய வேண்டி இருப்பதால், அந்த வலைப்பூ பதிவுகளின் லிங்க் எவ்வாறு தர வேண்டும் என்ற சந்தேகம் எழும். நம் பதிவில் மற்ற வலைப்பூவின் பதிவு லிங்க் இணைக்க அந்த வலைப்பூவின் URL முகவரியை COPY செய்து கொள்ள வேண்டும். 

1. கீழே உள்ள படத்தில் "வலைச்சரத்தில்" என்ற வலைப்பூவை லிங்க் தருவதற்கு தேர்ந்தெடுத்து உள்ளேன்.  பார்க்க படம்:


2. வார்த்தையை தேர்ந்தெடுத்த பின் பதிவு எழுதும் இடத்திற்கு மேலே வரிசையாக நிறைய ICONS இருக்கும். அதில் Link என்பதை தேர்வு செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு கட்டம் திறக்கும்.


3. திறந்த கட்டத்தில் text to display என்ற இடத்தில் நாம் தேர்வு செய்த வார்த்தை இருக்கும்.  அதற்கு கீழே link to என்பதில் web address தேர்வு செய்து, அதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் நாம் Copy செய்த வலைப்பூ பதிவின் URL-ஐ PASTE செய்ய வேண்டும். பார்க்க மேலேயுள்ள படம்.

4. பின் open this link in a new window என்ற கட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நாம் கொடுத்த லிங்க் வேறு பக்கத்தில் திறக்கும். 

பதிவில் லேபிள் இணைப்பது எப்படி?

வலைச்சரத்தில் நீங்கள் பதிவு எழுதும் போது தவறாமல் லேபிள் தர வேண்டும். அதில் நீங்கள் வலைப்பூவில் பயன்படுத்தும் பெயரை குறிப்பிட வேண்டும். பார்க்க படம் கீழே.
உங்கள் பெயரை கொடுத்த பின் Done என்பதை க்ளிக் செய்தால் உங்களது வலைச்சர பதிவில் லேபிள் இணைந்து விடும். 
மேலும் லேபிள் பற்றி விரிவாக அறிய இங்கு க்ளிக்  செய்யவும்.

நண்பர்களே, இந்த பதிவில் வலைச்சர ஆசிரியர்களாக வரும் பெரும்பாலான பதிவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களான, லிங்க் தருவது பற்றியும் லேபிள் தருவது பற்றியும் பார்த்தோம். 

பதிவில் படங்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என சந்தேகம் இருப்பின், பதிவில் படங்களை இணைப்பது என்ற லிங்க்கை க்ளிக் செய்து பதிவை வாசிக்கவும்.

மேலும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்.
மேலும் வாசிக்க... "வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!"



கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்!


ஒரு உண்மைச் சம்பவமே இக்கட்டுரை எழுத காரணம்.

கடந்த வருடம் என் தூரத்து உறவினர் ஒருவர் திடீரென பிரபல மருத்துவமனையில் ஐஸியூ-வில் அட்மிட் செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர்களால் அந்த மருத்துவமனையே நிறைந்து இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சொன்ன செய்தி எங்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது.
மேலும் வாசிக்க... "கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்!"



தீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை


வணக்கம் நண்பர்களே,

தீபாவளி நவம்பர் முதல் வாரம் வருது. இப்ப தான் சம்பளம் வாங்கி எப்பவும் போல செலவுகளை பட்ஜெட் போட்டுட்டு இருப்போம். எப்பவும் பட்ஜெட்க்கு துணையா இருக்கிற மனைவிமார்கள் இந்த மாசம் கொஞ்சம் கிராக்கி பண்ணுவாங்க. ஆமாங்க, தீபாவளிக்கு புது துணிமணிகள் வாங்கணும் தான். ஆனாலும் நம்ம வீட்டுல அதுக்குனே தனியா பட்ஜெட் போட்டு தருவாங்க.
மேலும் வாசிக்க... "தீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை"



அட, எப்படியெல்லாம் யோசிக்கறாங்கையா???

 வணக்கம் வலை நண்பர்களே...

இணையத்தில் உலாவும் போது கிடைத்த யோசனைகள்.... உங்களுக்கும் க்ரியேடிவ் திறமை இருந்தால் முயற்சித்து பாருங்கள்....
 
மேலும் வாசிக்க... "அட, எப்படியெல்லாம் யோசிக்கறாங்கையா???"



2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்!


வணக்கம் வலை நண்பர்களே,

கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் சென்னையில் பதிவர் சந்திப்பு, திருவிழாவாக வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் அரங்கத்தில் நடந்தது. இவ் விழாவிற்காக உழைத்த பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வாசிக்க... "2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்!"



பதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம்


வணக்கம் வலை நண்பர்களே,

இரண்டாம் தமிழ் பதிவர் சந்திப்பு விழாவில் பதிவர், பாடலாசிரியர், கவிஞர் மதுமதி தான் எழுதி, இயக்கிய குறும்படம் ஒன்றை திரையிட்டார். சுமார் பத்து நிமிடம் அரங்கத்தில் இருந்த அனைவரின் மனதை கனக்க வைத்த இந்த குறும்படத்தின் பெயர் 90 டிகிரி. இந்தப் படத்தை பற்றி எனது விமர்சனம் இங்கே:
மேலும் வாசிக்க... "பதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம்"



பதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் முந்தானை!


வணக்கம் வலை நண்பர்களே,

கடந்த ஞாயிறு(01-09-2013) அன்று சென்னையில் பதிவுலக நண்பர்களால் பதிவர் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடந்தது. சந்திப்பு பற்றிய பதிவுகள் நிறைய நண்பர்களால் எழுதப்பட்டு வரும் இவ்வேளையில், சந்திப்பு பற்றிய என் முதல் பதிவாக,  பிற்பகல் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன் அவர்களின் பேச்சிலிருந்து ஆரம்பிக்கிறேன். தனது கணீர் குரலில் பல்வேறு குட்டிக்கதைகள் சொல்லி, நகைச்சுவை ததும்ப பேசிய, அவர் சொன்ன சிறுகதைகளில் என் நினைவில் நின்ற கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
மேலும் வாசிக்க... "பதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் முந்தானை! "



2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - காணத் தவறாதீர்கள்!!!


வணக்கம் வலை நண்பர்களே,
இதோ, நீங்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த பதிவர்கள் ஒன்று கூடி நட்புறவை வளர்க்கும் விழா இனிதே துவங்கியுள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள் என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, புத்தக வெளியீடு, மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.

மேலும் வாசிக்க... "2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - காணத் தவறாதீர்கள்!!!"



2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்!!!

 .
 
பதிவர் சந்திப்பு விழாவை உங்கள் தளத்தில் நேரடியாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்.
2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!!
 
பிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 17M, 17E. M17M       

அனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.

17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.

குறிப்பு :  17M, 17E. M17M  தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.

கோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 70A, M70A, G70, D70 மற்றும் M27

கோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனைத்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும். 

குறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம்  நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.      

70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.  

மற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.

தாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு : 

பேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும்  M18M

அனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது). 

தாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.

மாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)

சென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.

ஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.

அல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.                           

வடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது 

பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)  

வடபழனி டிப்போவில் இருந்து  சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால்  தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முகவரி 

Masafi Guest House
No. 5, Gangappa Street, (Opp. to AVM Studio) Vadapalani,
Chennai - 600026.
Ph: 044 - 42136173 / 23766173 / 23766174

பதிவர் சந்திப்பு நடைபெறும் இடம் 

திரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை - 
26. கமலா தியேட்டர் அருகில்.

நாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை. 




மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 
தொடர்புக்கு 

அரசன்  : 9952967645
ரூபக்     : 8148915596

சிவா      : 9841611301
சீனு        : 9940229934

 

மேலும் வாசிக்க... "2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்!!!"



2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!!


வணக்கம் வலை நண்பர்களே,

நாம் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டாவது உலக தமிழ் பதிவர் திருவிழா நாளை மறுநாள் (01-09-2013) இனிதே நடைபெற உள்ளது. இவ் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வலையகம் திரட்டி தளத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். சென்ற வருடமும் இவர்களால் சிறப்பாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு உலகெங்குமுள்ள பதிவர்கள் கண்டு களித்தார்கள். 
 
உங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.
மேலும் வாசிக்க... "2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!!"

பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட திடீர் முடிவு!!


வணக்கம் வலை நண்பர்களே,

சென்னையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் தாங்கள் எழுதியவற்றை புத்தகமாக வெளியிட ஆயத்தமாகி வரும் இவ்வேளையில் இன்னும் சில பதிவர்கள் தங்கள் வலைபதிவுகளை ஒன்று திரட்டி புத்தகமாக வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அவர்கள் யாரென்று பார்ப்போமா?
மேலும் வாசிக்க... "பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட திடீர் முடிவு!!"



பதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!



வணக்கம் வலை நண்பர்களே,

        வரும் செப்டம்பர் முதல் தேதி சென்னையில் பதிவர்கள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம்  கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும் வாசிக்க... "பதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!"



வூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பதிவர்கள்!!!

வர்ற செப்டம்பர் ஒண்ணாம் தேதி சென்னையில் பதிவர் திருவிழா நடக்க இருக்கு. அதுல கலந்துக்க நாலா பக்கமிருந்தும் நம்ம பதிவுலக நண்பர்கள் தயாரா இருக்காங்க. அவங்களோட வேலைகள ஒதுக்கி, டிக்கெட் புக் செஞ்சு, துணைக்கு நண்பர்களையும் திரட்டி படையா வர ரெடி ஆகியிருக்குற நேரத்துல பதிவர்களின் மனைவி கிட்ட இருந்து "என்னங்க... எங்க போறீங்க? அம்புட்டு அவசியமா போகனுமா? லீவு இருந்தா வீட்டுல இருக்குற வழிய பாருங்க"ன்னு ஆர்டர் வந்தா எப்படி இருக்கும்? அதை சமாளிச்சு நம்ம பதிவர்கள் எப்படி வராங்கன்னு பார்ப்போமா?

மேலும் வாசிக்க... "வூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பதிவர்கள்!!!"



அனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்!!!

வணக்கம் வலை நண்பர்களே,

நாம் அனைவரும் ஒன்று கூடி நமது நட்புறவை மேலும் வளர்க்க, முகமறியா பதிவர்களுக்கு ஒரு பாலமாக, கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் மேடையாக  உள்ள பதிவர் திருவிழா வருகிற செப்டம்பர் முதல் தேதி(01-09-2013) சென்னை - இசைக் கலைஞர்கள் சங்க மகாலில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான நிகழ்ச்சிநிரல் மற்றும் அழைப்பிதழ் தயாராகி உள்ளது. பதிவுலக நண்பர்கள் அனைவரையும், தவறாது கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துத் தரும்படி இந்த அழைப்பிதழ் மூலமாக அழைக்கின்றோம்.
மேலும் வாசிக்க... "அனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்!!!"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18

வணக்கம் வலை நண்பர்களே,

இத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம். 

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18"



இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்?


வணக்கம் வலை நண்பர்களே,

இன்று இந்தியாவின் 67-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிற இவ்வேளையில் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த நமது நாட்டை பல தலைவர்கள் அற வழியிலும், தீவிரவாத வழியிலும் போராட்டம் நடத்தி சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்கள். அவ்வாறு போராடிய தலைவர்களின் பெயர்கள் சில நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஆரம்ப காலம் தொட்டு, சுதந்திரம் அடையும் வரை போராட்டம் நடத்திய தலைவர்களின் பெயர் இங்கே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.


அரவிந்தகோஷ்
டாக்டர் அன்னி பெசன்ட்
அல்லமாஹ் இக்பால்
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்

பகத் சிங்
பால கங்காதர திலகர்
புலாபாய் தேசாய்
பக்கிம் சந்திர சாட்டர்ஜி
பிதான் சந்த்ரா ராய்
பிபின் சந்திர பால்
பகா ஜதின் முகர்ஜி

சித்தரஞ்சன் தாஸ்
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
சந்திர சேகர் ஆசாத்

தாதாபாய் நவ்ரோஜி
தினேஷ் குப்தா

கோபின் வல்லப பந்த்
கோபால கிருஷ்ணகோகலே

ஜதின் முகர்ஜி
ஜே பிரகாஷ் நாராயண்
ஜவகர்லால் நேரு
ஜே.பி. கிரிபாலனி

கே காமராஜ்
குலபதி முன்ஷி
கான் அப்துல் காபர் கான்
குதிராம் போஸ்

லாலா லஜபதி ராய்
லால் பகதூர் சாஸ்திரி

மதன் லால் திங்க்ராஜ்
மகடோ கோவிந்த் ரானடே
மோதிலால் நேரு
PT. மதன் மோகன் மாளவியா
மவுலானா அபுல் கலாம் ஆசாத்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
மணி லால் காந்தி
மங்கள் பாண்டே

புருஷோத்தம் தாஸ் டாண்டன்

ராணி லக்ஷ்மிபாய்
ராஜேந்திர பிரசாத்
ராம் மனோகர் லோஹியா
ராஷ் பிகாரி போஸ்
ரவீந்திரநா தாகூர்
ராம் பிரசாத் பிஸ்மில்


சேனாதிபதி பபட்
எஸ் சத்தியமூர்த்தி
சிவராம் ராஜகுரு
சுபாஷ் சந்திர போஸ்
சுக்தேவ்
சரோஜினி நாயுடு
சுரேந்திரநாத் பனேர்ஜா
டாக்டர் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன்

டாண்டியா டோப்

உதம் சிங்

எஸ் வீர்
வினோபா பாவே
விநாயக் தாமோதர் சவர்கார்
வல்லபாய் படேல்
வ.உ. சிதம்பரம் பிள்ளை

டாக்டர் ஜாகீர் ஹுசைன்

அனைவர்க்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மேலும் வாசிக்க... "இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்?"



தல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா!!

 
வணக்கம் வலை நண்பர்களே,

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும்  பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


சந்திப்பு நடைபெறும் இடம்:
சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம்.

 மதுரை, நெல்லையை சுற்றியுள்ள பதிவர்கள் இந்த பதிவர் விழாவில் கலந்து கொள்ள ஆர்வமிருப்போர் என்னைத் தொடர்பு கொண்டு, தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். முதல் நாளே சென்னை வருபவர்கள், அந்த தகவல்களையும் சேர்த்து சொல்லுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு  தங்கும் வசதி ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.


எனது மின்னஞ்சல்: thaiprakash1@gmail.com
மொபைல்: 9080780981

தீதும் நன்றும் பிறர் தர வாரா வலைபதிவர் ரமணி ஐயாவிடமும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம்.
மின்னஞ்சல்: svramani08@gmail.com
மொபைல்: 9344109558

பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள்:
1. வலைப்பூ பெயர், முகவரி ( blog name & blog url address)
2. தொடர்பு மின்னஞ்சல் முகவரி,
3. தொலைபேசி எண்,
4. ஊர் பெயர்,
5. முதல் நாள் வருகையா என்ற விபரம்.

நண்பர்களே, விரைந்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 

பதிவர் விழா பற்றிய விபரங்கள்அடங்கிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப்படும். 

விழா குழு பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.


தென்னகத்தில் இருந்து கிளம்பும் பதிவர்கள்:
உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர்.
ரமணி ஐயா,
மதுரை சரவணன்,
தருமி ஐயா,
சிவகாசிகாரன் ராம் குமார்,
சதீஷ் செல்லத்துரை,
தமிழ்வாசி பிரகாஷ்,
ஜோக்காளி பகவான்ஜி,
கடற்கரை விஜயன் துரைராஜ்,
மணிவண்ணன்.
 
பதிவர் சந்திப்பு எப்படி இருக்கும்?
சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி
ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.


இதில் பங்கேற்கும் பதிவர்கள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் வெளியீடு:
கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். 
 
அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.

(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)
வருகைப் பதிவு:
கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.

தமிழ்வாசி பிரகாஷ்: thaiprakash1@gmail.com
ரமணி ஐயா: svramani08@gmail.com
நன்கொடை:
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.. பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
 

 
மேலும் வாசிக்க... "தல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா!!"



ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்!


வணக்கம் வலை நண்பர்களே,

தினமலர் ஆன்லைன் செய்திகளை படிக்காமல் நாம் ஒரு நாளும் இருந்தது இல்லை. செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்வது, முதல்பக்க செய்தி, அரசியல் செய்தி என எல்லா வகை செய்திகளையும் முந்தித் தருகிறது. ஒவ்வொரு செய்திகளுக்கு கீழும் வாசகர்களின் கருத்தை தெரிவிக்க வசதியும் உள்ளது.  
மேலும் வாசிக்க... "ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்!"



குரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்!


வணக்கம் வலை நண்பர்களே,
             போன வாரம் மதுரைக்கு பக்கத்துல இருக்குற அழகர் கோவில் மலைக்கு போயிருந்தோம் குடும்பத்துடன். அங்க நுபுர கங்கை எனும் தீர்த்தம் நீராடும் இடத்தில் குரங்குகள் ரொம்ப அதிகமா இருக்கும். மக்கள் கொன்டு வர்ற உணவுப் பொருட்கள், பொரிகடலை என சாப்பிட குரங்குகளுக்கு நிறையவே கிடைக்கும்.

மேலும் வாசிக்க... "குரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்!"



பேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா?

வணக்கம் வலை நண்பர்களே,

பேஸ்புக்கில் வெறும் ஒரு வரி ஸ்டேடஸ் போட்டாலும் ஒர்த்துன்னு?? லைக்ஸ், கமெண்ட்ஸ் என கிடைகிறது. அந்த ஸ்டேடஸ் இங்க பிளாக்கில் பதிவா போட்டா ஓர்த்தா இருக்குமா? இருக்காதாதா? பார்ப்போமா?
மேலும் வாசிக்க... "பேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா?"



வலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த பதிவில் இஸ்லாமிய பதிவர்களுக்காக ரமலான் அசையும் விளக்கு படத்தை நமது வலைப்பூவில் எப்படி இணைப்பது என பார்த்தோம். அந்த பதிவில் பலரும் சுதந்தினதினம் வருதே,சுதந்திர வாழ்த்தை தெரிவிக்கும் விதமான பேனரை வலைப்பதிவில் இணைக்க வழிமுறை கேட்டிருந்தார்கள். 

மேலும் வாசிக்க... "வலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி?"



இஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern


வணக்கம் வலை நண்பர்களே,

இந்த மாதம் ரமலான் மாதம். இஸ்லாம் மதத்தில் ரமலான் புனித திருவிழாவாக கருதப்பட்டு இஸ்லாமியர்கள் சூரியன் உதயத்தில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.
நமது இஸ்லாமிய பதிவர்களுக்காக அழகிய அசையும் ரமலான் விளக்கை தங்கள் வலைப்பதிவில் வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கே பதிந்துள்ளேன்.
மேலும் வாசிக்க... "இஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern"



மதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


வணக்கம் வலை நண்பர்களே,

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும்  பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வாசிக்க... "மதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு!"



உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா? இல்லையா? (Follower widget)

வணக்கம் வலை நண்பர்களே,
நீங்கள் வலைப்பூ எழுதுபவராகவும் இருக்கலாம், வாசிப்பவராகவும் இருக்கலாம். வலைப்பூ எழுதுபவர்கள் உங்கள் பதிவுக்கு வாசகர்கள் நிறைய பேர் வர வேண்டுமானால் உங்கள் வலைப்பூவில் பாலோயர் விட்ஜெட் முக்கியமாக இருக்க வேண்டும். 

மேலும் வாசிக்க... "உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா? இல்லையா? (Follower widget)"



நடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)


அஜித்தின் ஆரம்பம்
          இப்ப சொல்வாங்க... நாளைக்கு சொல்வாங்க. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியாவது சொல்வாங்க என நம்பி இருந்த அஜித் ரசிகர்களின் வயிற்றில் போன வாரம் பாலை வார்த்துள்ளது அஜித்தின் 53 படக் குழு. ஆம், Ajith53 என ரசிகர்களால் பெயரிடப்பட்ட படத்திற்கு "ஆரம்பம்" என பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் வாசிக்க... "நடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)"



எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!


       நண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா? கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சமூக சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.
மேலும் வாசிக்க... "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!"



மானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா? முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு


வணக்கம் வலை நண்பர்களே,

           கொஞ்சம் மந்தமாக இருந்த பதிவுலகம் மீண்டும் களை கட்டியுள்ளது. ஆம், நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகில் தொடர்பதிவுகள் வலம் வரத் துவங்கியுள்ளது. ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் பதிவுகள் எழுதப்பட்டு, அதே தலைப்பில் மற்ற பதிவுலக நண்பர்களையும் எழுத அழைப்பதே தொடர்பதிவின் சிறப்பு. 
மேலும் வாசிக்க... "மானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா? முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு"



மதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்!



        அரசியல் தலைகளின் நகரமா, அதிகார வர்கத்தின் நகரமா, கூலிப்படைகளின் நகரமா, கோவில்களின் நகரமா, ரோட்டோர இட்லிக் கடைகளின் நகரமா  இருக்குற, இருந்த மதுரையில மக்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக... இல்லையில்லை... வேகமாக மாறி வருது... வேறொன்னுமில்ல பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் தான்.
 

         முன்னாடில்லாம் அரசியல் மாநாட்டு சமயத்துல, பெரிய பணக்காரர்களோட குடும்ப விழா சமயத்துல, சாமி திருவிழா சமயத்துலயும் விளம்பரமாக சுவத்துல எழுதுவாங்க. தட்டி போர்டு வைப்பாங்க. சின்னதா போஸ்டர் ஓட்டுவாங்க. இதனால ஆர்ட்ஸ் கலைஞர்களுக்கு வேலையும் இருந்துச்சு. அப்புறம் பிளக்ஸ்ங்கற தொழில்நுட்பம் வந்த பிறகு அவங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. சின்ன சைசுல இருந்து கண்ணால பாக்க முடியாத அகலத்துக்கு பெருசா பெருசா பிளக்ஸ் போர்டு வைக்க ஆரம்பிச்சுடாங்க..

           எங்க பாத்தாலும் பளீர் போகஸ் லைட்டோட பிளக்ஸ் போர்டுகள் மின்னுது. கிராபிக்ஸ்னு  புகுந்து விளையாடறாங்க. அரசியல் தலைவர்ல இருந்து தொண்டன் வரைக்கும் பல்ல காட்டிட்டு மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குற  அவலமும் பிளக்ஸ் மூலமா வந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு எடுத்துக்கிட்டாலும், இந்த சாதாரண மக்களின் பிளக்ஸ் ஆசை இருக்கே, அதான்யா ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு. அதிலும் மதுரையில் பிளக்ஸ் பேய் பிடித்து ஆட்டும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த பேய்களை தனியா அடையாளம் காட்டி சங்கடங்களை பெற எனக்கு விருப்பமில்லைங்க.

                கல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, என எல்லாத்துக்கும் பிளக்ஸ் வைக்கறாங்க.  இல்ல விழாங்கற பேர்ல மண்டப வாசலை மறைச்சு, ரோட்டை மறைச்சு, கடைகளை மறைச்சு அவங்க பிளக்ஸ் பேனர்  வைக்குற இடங்களோட செலக்சன் இருக்கே, மதுரை செல்லூர் பகுதிக்கு வந்து பாருங்க. MM லாட்ஜ் பாலம் ஸ்டேசன் ரோட்ல இருந்து, தத்தனேரி ESI மருத்துவமனை வரை இருக்குற  பகுதிகள் பிளக்ஸ் போர்டுகளால் எந்நேரமும் பிஸியா இருக்கும். அதில்லாம, பிளக்ஸ் பேனர் சைஸ் பார்த்தா அசந்து போயிருவிங்க. மாடி கைப்பிடி செவுத்துல நீள் செவ்வகமா அடிச்சு ஒட்டியிருப்பானுங்க. ஒரு ஓட்டு வீட்டு முன்னாடி பார்த்தேன் பாருங்க அவிங்க கலைநயத்தை... ஓட்டு மேற்கூரையில் முன்பக்கம் முக்கோண வடிவமா இருக்குமே, அதுக்கேத்த மாதிரி முக்கோணமா பிளக்ஸ் அடிச்சி ஒட்டியிருக்காங்க. இப்படி பிளக்ஸ் மோகத்தோட பகட்டு காட்டுறவங்க பணத்தையும் அவங்க நகை நட்டுகளையும்  டிஸைன் டிஸைன்னா அடிச்சு ஒட்டுவாயிங்க.

       பிறந்த குழந்தைல இருந்து சாகுற நெலமையில இருக்குற கிழவன், கிழவிகள் வரை பிளக்ஸ் போர்டில் சிரிச்சுட்டு இருப்பாங்க. அதிலும் இப்ப கூலிங்கிளாஸ் போட்டு பந்தா காட்டுற ஆட்கள் தான் ரொம்ப அதிகம். சிறுசு முதல் பெருசு வரை ஆளாளுக்கு விதவிதமா கூலிங்கிளாஸ் போட்டு, அங்க இங்க கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு, பிளக்சில் காட்டும் போஸ் இருக்கே, சினிமா நடிகர்களே தோத்துப் போயிருவாங்க.

           அதிலும் சில குல விளக்குகள் இருக்காங்களே, பிளக்ஸ் போர்டுக்கென தனியாவே பட்டுசேலைகள் முதல் நகை செட்டுகள் வச்சிருப்பாங்க போல. தம்பதி ஜோடியா அவர்களின் புகைப்படம் பிளக்சின் மொத்த உயரத்துக்கும் கம்பீரமாக நிற்கும்.  நகைக்கடை விளம்பர பிளக்ஸ் மாடலிங் பெண்கள் தோற்கும் அளவுக்கு இவர்களின் பகட்டு ஆடம்பரம் பிளக்சில் ஜொலிக்கும். பெண்களுக்கு  சளைச்சவங்க நாங்களும் இல்லை என ஆண்களும் ஜொலிப்பாங்க.

         விழாவுக்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளக்ஸ் வச்சு அழகு பாக்கறவங்க தான் ரொம்ப அதிகம். இதைச் சரியா திருத்தி சொல்லனும்னா, மண்டபம் புக் செய்ற அன்னிக்கே பிளக்ஸ் வச்சிருவாங்க. அதிலும் மண்டபங்கள் பக்கத்துல பக்கத்துல நிறைய இருந்துச்சுன்னா, பிளக்ஸ் போட்டியே இருக்கும். அடுத்த நாள் விழாவுக்கு முதல் நாள் நைட்டு பிளக்ஸ் கட்டுவாங்க. அந்த பிளக்ஸ் பக்கத்து மண்டபத்தில் நடக்கும் விழா பிளக்ஸ விட பெருசா இருந்தா ஒரே ரகளை தான். உடனே அவர்களுக்கும் அந்த நடு இரவில் அதைவிட பெருசா பிளக்ஸ் அடுச்சு போட்டிக்கு வச்சு ரகளையை கூட்டுவாங்க. மேலும் இந்த பிளக்ஸ் போர்டுக்கு காவலும் காப்பாங்க புல் கட்டு போதையுடன்.

          கல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு??? அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே?

             வட்டியில்லா மொய் பணத்தை வாங்க எந்த விழாவும் இல்லாட்டியும், இல்ல விழான்னு மண்டபத்தை புக் செஞ்சு, பத்திரிக்கை அடிச்சு அதுக்கும் கலர் கலரா போட்டோ போட்டு பிளக்ஸ் ஒட்டி கறி சோறு ஆக்கி போட்டு வசூல் வேட்டை நடத்துவாங்க நம்மூரு ஆட்கள்.

            ஆட்டோலயும் பிளக்ஸ் கட்டுற இடமாக்கிருவாங்க நம்மூரு ஆட்கள். ஏதோ அரசியல் தலைவர் மாதிரி போட்டோ போட்டு, அவங்க சாதி பேரை போட்டு, சாதி சம்பந்தமா புரட்சி வரியையும் சேர்த்து போட்டு கலக்குவாய்ங்க.

           விழாவுக்கு அடையாளமா மண்டபத்தில, அப்புறம் வீட்டுக்கு பக்கத்தில் பிளக்ஸ் வைக்கலாம். அதவுட்டுட்டு ஊரே அடிச்சு ஓட்டினா என்ன நியாயம்?  இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா? வண்டியில ஓடறவங்க கவனத்தை திசை திருப்பும், பிளக்ஸ் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு வரும். காத்து அதிகமா வீசுனா பிளக்ஸ் சரிஞ்சு விழவும் வாய்ப்பு இருக்கு. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.

           என்னமோ சொல்லனும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். யாரும் திருந்த மாட்டாயிங்க.

பகிர்ந்துள்ள படங்கள் கூகிள் இமேஜ் மூலம் பெறப்பட்டவை.
மேலும் வாசிக்க... "மதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1