CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நம் கைகளில் இத்தனை வடிவங்களா? படங்கள் இணைப்பு

         
 மனிதரின் கைகளில் தான் எத்துனை திறமைகள் மறைந்துள்ளன. அதை சரியாக சமயோசிதமாக பயன்படுத்தி எத்துனை விதமான நிழல்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை இங்கே பாருங்களேன்.















நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

டிஸ்கி: விடுகதைகளுக்கு விடைகள் அடுத்த பதிவில் ...மேலும் அடுத்த பதிவிலிருந்து ஒரு சவால் உங்களுக்கு காத்திருக்கிறது.

அந்த  விடுகதைப் பதிவு:

எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?

மேலும் வாசிக்க... "நம் கைகளில் இத்தனை வடிவங்களா? படங்கள் இணைப்பு"



எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?



நண்பர்களே, 
      உங்கள் அறிவுக்கு ஓர் சவால். கீழ்க்கண்டவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.

மலை ஏறி தாள் பறித்து
மகிழ்ந்திருந்து தொன்னை பிடித்து
பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. அது என்ன?

கழுத்துண்டு; கையில்லை
நாக்குண்டு; பேச்சில்லை
வாயுண்டு; அசைவில்லை
தொப்பி உண்டு; தலைமுடியில்லை. அது என்ன?

சிமிழிலே தண்ணீர்
தண்ணீர் மேலே தனிக்கொடி
கோடி மேலே சூரியன். அது என்ன?

பூவாமல் காய்ப்பது என்ன காய்? அது
புண்ணின்றிப் புழு புழுக்கும். அது என்ன?

வந்தாரு திரும்பி வந்தாரு
சொல்லுமிடம் வச்சாரு. அது என்ன?

நிறங்கறுத்த அழகி நான்;
நித்தம்நித்தம் வேண்டும் அழகி நான்;
ரச அழகி நான்; ருசி அழகி நான். அது என்ன?.

ஆட்டமும் பாட்டமும் அதனாலே
தோட்டமும் ஊட்டமும் அதனாலே
கூட்டமும் நாட்டமும் அதனாலே. அது என்ன?

வாய் இல்லை; வார்த்தைகள் சொல்வேன்
உயிர் இல்லை; ஊருக்குப் போவேன்
கால இல்லை; வீட்டுக்கு வருவேன். அது என்ன?

மூக்கனுக்கு மூன்று முழ நீளம்
மூக்கன் பொண்டாட்டிக்கு
முளைத்தது அகிலம் அதிகம். அது என்ன?

மஞ்சள் பூக்கையிலே
மாட்டேன் என்று சொன்னீரே
பிள்ளை பெற்று கையில் கொடுத்தால்
முத்தமிட வந்தீரே. அது என்ன?

டிஸ்கி: 
             மேற்க்கண்ட விடுகதைகளின் விடைகள் அடுத்த இடுகையில் வெளிவரும்.

மேலும் வாசிக்க... "எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?"



பதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன?

பதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன?
         அட இது தெரியாதா உங்களுக்கு... ஒரு பாடகர் ஒரு சினிமா பாட்டு பாடியிருக்கார்னு வைங்க. அந்த பாட்டு பட்டித் தொட்டி எல்லாம் பேமசா எல்லாரும் பாடினா அந்த பாட்டு ஹிட். அந்த பாட்டை பாடுனவரை ரெண்டு மூணு சினிமாவுல பாட வாய்ப்பு கொடுத்தா அந்த பாடகர் ஹிட் பாடகர்னு சொல்ல ஆரம்பிச்சிருவாங்க. இதே மாதிரி ஒரு படம் எல்லா வகையான மக்கள்களையும் திருப்தி படுத்தும் வகையில் இருந்தால் அதுவும் ஹிட் படம் தான். ஆனா, பாட்டா இருந்தாலும், படமா இருந்தாலும் நமக்கு பிடிக்கிற மாதிரி இருக்கணும். முதல் முறையிலே பார்த்த உடனே பிடித்தால் அது நமக்கு நல்ல படம் தான். முதல் முறையில் இருந்து பிடிக்கவில்லையெனில் அது எப்போதும் நமக்கு பிடிக்காமல் பொய் விடும். ஒருத்தர் ஒரு படம் நல்லா இருக்கும்னு சொல்வாங்க, இன்னொருத்தர் சரியில்லைன்னு சொல்வாங்க. ஒவ்வொருத்தருடைய ரசிக்கும் விதத்தை பொறுத்தே அவர்களின் பாடல் மற்றும் படங்களின் தேர்வு இருக்கும். 
          அப்புறம் நம்ம வீட்டுல எடுத்துக்கங்க, நம்ம வீட்டுக்காரம்மாவுக்கு பிடிச்ச விஷயத்தை அதுவும் அவங்க ரசிக்கிற மாதிரி செஞ்சு அவங்க கிட்ட சபாஸ் வாங்கறது இருக்குதே, அது உண்மையிலே பெரிய ஹிட்ஸ் தான். அதுவும் அவங்க மனநிலையை புரிஞ்சு அதை செய்யணும். ஒரு சேலை வாங்குற விசயத்துல எடுத்துக்கங்க, அவங்களுக்கு பிடிச்ச டேஸ்ட் எதுன்னு நாம தெரிஞ்சு வச்சிருக்கணும். அது இல்லையினா நம்ம பாடு திண்டாட்டம் தான், இப்படியே சொல்லிட்டு போகலாம். நீங்க சொல்றத பின்னூட்டத்தில் சொல்லுங்க. 
       ஒரு பையனோ, பொண்ணோ ஸ்கூல்ல படிக்கறாங்கன்னு வைங்க, அவங்க பரிட்ச்சையில நல்ல மார்க் வாங்கி அடுத்தடுத்த வகுப்புக்கு முன்னேறிட்டு போனா அது அவங்களுக்கு ஹிட்ஸ்.
         இப்போ சமீபத்துல நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓரளவு வெற்றிகளை எதிர்பார்த்த அதிமுகவுக்கு ஊரெல்லாம் வெற்றிகள் கெடச்சது பாருங்க, அதான் அவங்களுக்கு ஹிட்ஸ். அப்ப திமுக, தேமுதிகவுக்கு ஹிட்ஸ் இருக்கான்னு கேட்கறிங்களா? ஹி... ஹி.... எப்படிங்க கேட்க முடியும்? டோடல் பீல்டு அவுட்ல.

        அப்புறம் பதிவுலகில் ப்ளாக் ஹிட்ஸ் ஹிட்ஸ் என சொல்றாங்களே (அப்படியா சொல்றாங்க?), அது என்ன?


மேலும் வாசிக்க... "பதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன?"



மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!

        மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.  

    இந்த பஸ் ஸ்டாண்டு ஆரம்பிக்ரதுக்கு முன்னாடி வெறும் குப்பை மேடு தான்.... அப்புறமா இடங்களை வளைச்சு போட்டு பஸ் ஸ்டாண்டு கட்டி, ISO 9001 சான்றிதழ் வேற வாங்கியாச்சு. பஸ் ஸ்டாண்டு வந்ததுக்கு அப்புறம் அதை சுத்தி உள்ள இடங்களின் விலை மலையென ஏறி விட்டது. ஆமாங்க, ஒரு சென்ட் ரேட் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபது லட்சம் வரை விலை போகுது. எடத்தை பத்தி நாம ஏன் பேசிக்கிட்டு? அதெல்லாம் பண முதலாளிகள் பேசுற பேச்சு. இப்ப நம்மளுக்கு அந்த டாபிக் வேண்டாம். நாம பஸ் ஸ்டாண்டுக்கு வருவோம்.
      பஸ் ஸ்டாண்டுக்கு மொத்தம் மூணு வழிகள் இருக்கு. ஒண்ணு பஸ் உள்ள போற வழி. இன்னொன்னு பஸ் வெளியே போற வழி. இன்னொன்னு நடுவுல அழகா ரவுண்டா பயணிகள் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. எப்பவுமே பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கும். பஸ் ஸ்டாண்ட சுத்தி காம்பௌண்ட் சுவர் கட்டியிருக்காங்க. அங்கிட்டு வெறும் குப்பை மேடு தாங்க. ஏதோ, இப்ப ஒரு வருஷ காலமா குப்ப நாத்தம் அடிக்கிறது இல்லை. எப்படியோ சுத்தம் பண்ணிட்டாங்க.. ஆனா அதுக்கு பதிலா பஸ் ஸ்டாண்டு கட்டுன காலத்துல இருந்து ஒரே ஒரு நாத்தம் மட்டும் மாறவே இல்லை. கரக்ட் நீங்க நெனச்சது, வேறென்ன நாத்தமா இருந்துர போகுது? எல்லாம் மூச்சா நாத்தம் தான். 
     நம்ம அஞ்சா நெஞ்சன் பஸ் ஸ்டாண்ட சுத்தி சுத்தமான டாய்லெட் கட்டி விட்டிருக்காரு. நம்மாளுக அதை யூஸ் பண்ண மாட்டாங்க. திறந்த வெளி தான். குடலை புரட்டும் அந்த நாத்தத்தில், நம்மாளுக அந்த நாத்தமே பிடிக்காத மாதிரி மூக்கை பொத்திட்டு அதே இடத்துல போய் மூச்சா அடிப்பானுக பாருங்க, அவிங்க மேல கோவம் கோவமா வரும். அவன் நிக்ரதுக்கு கூட அங்க இடம் இருக்காது, ஒரே ஈரமா இருக்கும்.  இந்த நாத்தத்துக்கு மத்தில பூக்கடை, பழக்கடை, பங் கடை, டீக்கடை ன்னு நம்மாளுக மொச்சிக்கிட்டு இருப்பாங்க. அதென்னமோ தெரியலைங்க, இங்க இருக்கற பூக்கடையில நூறு எண்ணிக்கை மல்லிகை பூ எப்பவுமே அஞ்சு ரூவா தாங்க. விலை கூடவே கூடாது. 

     டவுன் பஸ் நிக்கற இடத்துக்கு பக்கத்துல தமிழ்நாடு தேயிலை கழகம் நடத்துற டீக்கடை இருக்கு. ஏதோ, டான் டீ ன்னு போடறான்.  டீ நல்லா டேஸ்டா இருக்கும்.  இங்க ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரெண்டு ரூபாய்க்கு விக்கிறாங்க. பிளாட்பாரத்துல நிக்க கூட இடம் இல்லாம கடைகளா இருக்கும். கடைய கட்டடத்துக்கு உள்ள வைங்கன்னா வெளில வச்சிருக்காங்க. மக்கள் நடந்து போனா டீயோ, வடையோ சாப்பிடுறவங்களை தட்டி விடாம போக முடியாது. அவ்வளவு ஆக்கிரமிச்சு இருப்பாங்க. நைட் நேரத்துல திடீர்னு டிபன் கடைகள் பிளாட்பாரத்தில் முளச்சிடும். உட்கார நல்ல டேபிள் சேர் கூட இருக்காது. அவிங்க சொல்றது தான் ரேட்டு. பஸ்கள் விடுற புகை, மற்றும் எல்லா தூசியும் அந்த நைட் நேரத்துல டிபன் மேல விழுகரது நம்ம கண்ணுக்கு தெரியவே தெரியாது. சாம்பாருன்னு பேருல ஊத்துவாங்க பாருங்க கடலை மாவு தண்ணிய, அய்யோ சாப்பிட சகிக்காது. அவிங்க விக்கற கூல்ரிங்க்ஸ், வாட்டர், பிஸ்கட் போன்ற எல்லா பொருட்களின் விலையும் எம் அர் பி ரேட்டை விட ரெண்டு ரூவா அதிகமா தான் இருக்கும். அவிங்க கிட்ட நியாயம் பேசினோம் வச்சுக்கங்க, நம்மள அநியாயமா காதுல கேட்க கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவாங்க. 
        என்னடா, தலைப்புல ரெண்டு டாஸ்மாக் கடைன்னு போட்டுட்டு அத பத்தி ஒண்ணுமே சொல்லலைன்னு நீங்க கத்தறது என் காதுல விழுது. இப்ப உங்கள அங்க தான் கூட்டிட்டு போறேன்.

        மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு ரெண்டு பக்கமும் டாஸ்மாக் கடைகள் இருக்கு, பஸ் வெளியேற பக்கமா, பூ மார்கெட் எதுத்த மாதிரி ஒரு கடை. பஸ் உள்ளே போற பக்கமா, வரவேற்பு ஆர்ச் பக்கத்துல ஒரு கடை. ரெண்டு கடையும் காலையில இருந்து இரவு வரை செம கூட்டமா இருக்கும். பஸ் பயணிகள், டிரைவர், கண்டக்டர் கூட்டமா இருக்கும். பூ மார்க்கெட் பக்கத்துல பார் அளவு சின்னது. நைட் நேரத்துல பார்ல இடம் இல்லாம வெளியில நின்னு தண்ணி அடிப்பாங்க. எல்லோர் கையிலும் பெரிய பை ஒண்ணு தொங்கிக்கிட்டு இருக்கும். ஆமாங்க, எல்லோருமே பயணிகள் தான். நாமெல்லாம் ஊருக்கு சீக்கிரமா போக முடியுமான்னு பார்ப்போம். ஆனா அவிங்க நல்லா மப்பு போட்டுட்டு ஊருக்கு போவாங்க. 
      அடுத்ததா ஆர்ச் பக்கத்துல இருக்குற கடையில் பார் ரொம்ப பெரிசு. சரக்கு வாங்கிட்டு நம்மாளுக உள்ளே போனாங்கனா நல்லா மப்பு ஏத்திட்டு தான் வருவாங்க. எந்த நேரமும் கூட்டம் களை கட்டி இருக்கும். பார்ல ஸ்நாக்ஸ் ரேட் அதிகமா இருக்ரதுனால நம்மாளுக சரக்கை மட்டும் வாங்கிக்கிட்டு அந்த ஆர்ச் மறைவில நின்னுட்டு குடிப்பாங்க. கடைக்கு முன்னாடி சின்ன சின்ன தள்ளு வண்டியில பிரியாணி, சிக்கன், மட்டன் விப்பாங்க. அந்த கடைகளும் நல்லா கூட்டமா இருக்கும்.இப்போ ஏதோ பிரச்சினையில அந்த கடை இடம் மாறிருச்சு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி. மாட்டுதாவனில இருந்து சர்வேயர் காலனி போற வழில ஒரு சுடு காடு இருக்கு. அதுக்கு பக்கத்துல மாத்திட்டாங்க. சுடு காட்டுக்கும், கடைக்கும் சுமாரா நூறு அடி தூரம் தான் இருக்கும்.  சைட் டிஷ்சா பொன வாடைய பிடிச்சுக்கிட்டு தண்ணியடிக்க வேண்டியது தான். இன்னும் இங்க கடைக்கு பக்கத்துல தள்ளு வண்டி உணவு கடைகள் முளைக்கல. சீக்கரமா வந்துடும்னு நம்பிக்கையில தண்ணி அடிச்சுட்டு இருக்காங்க. சரிங்க இதோட உங்கள அறுக்ரத முடிச்சுக்கறேன். 

டிஸ்கி: 
       நான் தினந்தோறும் வேலைக்கு சென்று வரும் போது இவைகளை பார்த்து வருவதன் பாதிப்பே மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டு பற்றியும், டாஸ்மாக் கடைகளை பற்றியும் இந்த பதிவு எழுதுவதற்கான காரணம். அவ்வளவே!


இந்த பதிவுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லிங்கோ....
மீள்பதிவு



மேலும் வாசிக்க... "மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!"



பட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி

இந்த மாதிரி தீபாவளி கொண்டாடாதிங்க.... ஹி..ஹி...

ஹே... ஹே... எம்புட்டு பட்டாசுகள்....

இந்த வெடியை எப்படி வெடிக்கிறது மியாவ்?

தீபாவளி நல்வாழ்த்துகள் 

அட்டகாசமான வானவேடிக்கை. சூப்பர்.


தீபாவளி சம்பந்தமான எனது முந்தைய இடுகைகள்:

தீபாவளி கொண்டாடலாம் வாங்க!


தீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்! - பாகம் 2

"தீபாவளி" வந்தாச்சு... கணவர்களே கவனம்!



அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



மேலும் வாசிக்க... "பட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி"

தீபாவளி கொண்டாடலாம் வாங்க!

வணக்கம் நண்பர்களே,
        தீபாவளி வந்தாச்சு. புதுத் துணிகள் எடுத்தாச்சு. பட்டாசெல்லாம் வாங்கியாச்சு. இனிப்பு கார வகைகளும் செஞ்சாச்சு. அப்புறம் என்ன சொல்ல வரேன்னு பாக்கறிங்களா? ஒன்னும் பெருசா சொல்ல வரல. இருந்தாலும் என்னமோ சொல்றேன். கேட்டுக்கங்க. காலையில அஞ்சு மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருங்க. லேட்டா எந்திரிச்சா என்ன? அப்படின்னு கேள்வி கேட்கிறவங்கள ஒன்னும் பண்ண முடியாது. உங்க இஷ்டம் எப்ப வேணாலும் எந்திரிங்க. எப்படியோ எந்திரிச்சாச்சு. அடுத்து குளிச்சு புதுத்துணி போட்டு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் தான் வெடி விடனுமா? எந்திரிச்சவுடனே விடக் கூடாதான்னு கேட்கரவங்க ஒரு சரம் அல்லது ஒரு அணுகுண்டு மட்டும் ஆசைக்கு காலையில விட்டுக்கங்க. 
        அப்புறமா உச்சந்தலை முதல் பாதம் வரை இளம் சூட்டில் உள்ள நல்லெண்ணையை தேச்சு கொஞ்ச நேரம் ஊற வச்சு, சீயக்காய் போட்டு நல்லா குளிச்சு முடிச்சிரனும். நல்லெண்ணெய் தேச்சு குளிக்கிறது நல்லதா, கெட்டதான்னு கமென்ட் போடறவங்க போடலாம். சரிங்க குளிச்சு முடிச்சாச்சு. அடுத்து ஆசையா வாங்கின ட்ரெஸ்க்கு மஞ்சள் வச்சு சாமி கிட்ட வச்சு அப்பா அம்மாவை எடுத்து தரச் சொல்லி போட்டுக்கறனும். அம்மா அப்பா கையால எந்த புதுதுணியும் வாங்கிப் போடறது ரொம்ப நல்லது. அப்புறம் சாமி கும்பிட்டுட்டு பட்டாசு வெடிக்க ஆரம்பிக்க வேண்டியது தான். 

        பட்டாசு வெடிகிறப்போ ரொம்பவே கவனமா இருங்க. ஸ்டைல் பண்ணாதிங்க. கையில பிடிச்சு வெடி விடறது. வெடி மேல ஏதாவது பொருளை வச்சு சிதற விடறது போன்ற சாகசங்களை பண்ணாதிங்க. முக்கியமா வெடிக்காத வெடிகளை கண்டுக்றவே கண்டுக்காதிங்க. கையில எடுத்து ஆராய்ச்சி பண்றது, நெருப்பு இருக்கா, இல்லையானு பாக்கிறது, காலால மிதிக்கிறது போன்றவைகளை கண்டிப்பா செய்யாதிங்க. வெடி வெடிக்றதுக்கு பக்கத்துல ஒரு வாளி தண்ணிய பிடிச்சு வச்சுக்கங்க. ஏதாவது சிறிய தீ விபத்து நடந்தா உடனே அனைச்சுரலாம்.
          டேய், வந்து டிபன் சாப்பிடு சாப்பிடுன்னு அப்பா அம்மா கூப்பிட்டுடே இருப்பாங்க. அதனால வெடி விடறதை கொஞ்ச நேரம் தள்ளி வச்சுட்டு சாப்பிட உட்கார வேண்டியது தான். அதுக்கு முன்னாடி மறக்காம கைகளை, கால்களை நல்லா சோப்பு போட்டு கழுவிருங்க. பட்டாசு மருந்தெல்லாம் இருக்கும். அதனால நல்லா சுத்தமா கழுவணும். அப்புறமா தான் சாப்பிட உட்காரணும். இட்லி, வடை, நாட்டுக் கோழி குழம்பு மணக்க காலை டிபன் அமர்களமா இருக்கும். நல்லா ஒரு புடி புடிச்சிட்டு, பிரண்ட்ஸ் வீட்டுக்கு போய் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிட்டு, அப்புறமா டி வி யில தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் பார்த்துட்டு அதிலயும் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ரொம்பவே சூப்பரா இருக்கும். 
              இப்படியே மதியம் வந்திரும். அப்புறமென்ன, மதிய சாப்பாடு ரெடியா இருக்கும். மட்டன் பிரியாணி, கோழி வறுவல் என ஒரே அசைவ அயிட்டமா இருக்கும். ஒரு புடி புடிச்சுட்டு வெத்தல பாக்கு போட்டு நாக்கு சிவந்திருச்சான்னு வீட்டுல எல்லார கிட்டயும் காட்டி தம்பட்டம் அடிச்சுட்டு அப்படியே மதியம் டிவியில போடற படத்துல எது நல்ல படம்னு சூஸ் பண்ணிட்டு ஒரு தலகானிய போட்டு படுத்துட்டே படம் பாக்க வேண்டியது தான். தூங்கரவங்க தூங்க வேண்டியது தான். படம் முடிஞ்சதும் யாராவது எழுப்பி விடுவாங்க. ஆக இப்படியே தீபாவளி அன்னைக்கு சாயங்காலம் ஆயிரும். 
            பலகாரங்கள், ஸ்வீட்ஸ் சாப்பிட்டிட்டு ஜாலியா நைட்டுல வெடிக்கிற வெடிகள் மற்றும் பூந்தொட்டி, கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் என ஒரே கலர் புல்லா வெடிக்க வேண்டியது தான். மறக்காம ஒரு பக்கெட் தண்ணிய பக்கத்துல வச்சுக்கறனும். அதுல தான் கம்பி மத்தாப்பு கம்பிகள போடணும். மறந்தும் வேற பக்கம் போட வேண்டாம். யாராவது அதை மிதிச்சு தீக்காயம் ஏற்பட சான்ஸ் இருக்கு. இப்படியே சந்தோஷமா தீபாவளி கொண்டாடிட்டு களைச்சு போயி உட்கார்ந்தோம்னா நைட் சாப்பாடு நேரம் வந்திரும். காலையில இருந்து ஹெவி சாப்பாடு சாப்பிட்டதுனால நைட் கொஞ்சமா ரசம் ரைஸ் சாப்பிடலாம். அப்ப தான் சாப்பிட்டது எல்லாம் நல்லா செரிக்கும். 

             ஆகா பாருங்களேன் ஒரு நாள் தீபாவளி எப்படி ஓடிப் போச்சுன்னு தெரியல. ஒரு நாள் எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும். அடுத்த நாள்ல இருந்து வேலை வெட்டினு வழக்கமான நாட்களா நகர ஆரம்பிச்சிரும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

நாளைக்கு தீபாவளிக்காக ஊருக்கு போறேன். அதான் இன்னைக்கே உங்க எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிடறேன். டைம் இருந்தா பதிவு எழுதறேன்.



மேலும் வாசிக்க... "தீபாவளி கொண்டாடலாம் வாங்க!"



சிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க!


  • ஒழுக்கம் தவறிய இடத்தில பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.


  • பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.


  • உழைப்பால் களைபடைவர்களே உண்மையான இன்பம் காண்கிறார்கள்.


  • மற்றவர்கள் செய்யும் தவறையே நீயும் செய்யாதே, நீயாக சொந்தமாகச் செய்.


  • பொறுமை மிகவும் துன்பமானது, அதன் விளைவோ மிகவும் இனிமையானது.


  • பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு இருக்கிறது, அதை உணரச் செய்து விட்டால் அவன் சிறந்த சிந்தனைவாதியாகி விடுவான்.


  • கண்டுபிடிப்பாளன், ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் இவர்களைப் பொறுத்தே இந்த உலகத்தில் முன்னேற்றம் இருக்கிறது.


  • உங்களுக்கு ஏற்படும் துன்பமே உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.


  • பிறரை மாற்ற வேண்டும் என்று நினைத்து அறிவுரை சொல்கின்றனர், ஆனால் தன்னை மாற்றிக் கொள்ள யாரும் நினைப்பது இல்லை.


  • எத்தொழிலும் இழிவு இல்லை, தொழில் எதுவும் செய்யாமல் இருப்பது தான் இழிவு.


  • பகைவனின் பலவீனத்தை அறிய அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.




மேலும் வாசிக்க... "சிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க!"



பிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லிங்க்ஸ்

     இன்று சில பிரபல மென்பொருட்களின் அண்மைய பதிப்புகளின் தரவிறக்க தொடுப்பு இங்கே பகிர்ந்திருகிறேன். உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

BROWSERS:
         மொஸில்லா பயர்பாக்ஸ்-ன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்யசெய்ய
Firefox 8.0 Beta 3
         கூகிள் க்ரோம்ன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Google Chrome 16.0.912.0 Beta
       ஒபேரா ப்ரௌசர்இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Opera 11.52


ANTIVIRUS AND FIREWALLS:
        அவாஸ்ட் ஆன்டிவைரஸ்ன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Avast! Free Antivirus 6.0.1289
         AVG antivirus free அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
AVG Free Edition 2012.0.1831 (32-bit)
         Comodo Intrernet Security - இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Comodo Internet Security 5.8.211697
         Zonealarm Free - இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
ZoneAlarm Free 9.2.106.000


AUDIO AND VIDEO PLAYERS:
        VLC Media player இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
VLC Media Player 1.1.11
       Winamp player இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Winamp 5.621 Full
       Windows media player இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Windows Media Player 11


CHAT AND MESSENGERS:
       கூகிள் டாக் இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Google Talk 1.0.0.104 Beta
        யாகூ மெசெஞ்சர் இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Yahoo! Messenger 11.0.0.2014
        ஸ்கைப் இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Skype 5.5.0.124

நன்றி: கூகிள் சர்ச்
மேலும் வாசிக்க... "பிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லிங்க்ஸ்"



பதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறோம், திரண்டு வாரீர்

நண்பர்களே,
        உங்களுக்கு இலக்கியத்தில் ( இலக்கியம்னு பார்த்ததும் ஓடிராதிங்க, நகைச்சுவை, சமையல் ஆர்வமா) ஆர்வமா? உங்களிடம் நிறைய படைப்பு திறமை இருக்கிறதா? உங்கள் திறமையை காட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? அதற்கான போட்டிகள் எங்கே நடக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ இங்கே நடக்கிறது.
    தமிழ்த்தோட்டம் என்ற குழும தளத்தில் உங்களுக்கான போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
    அந்த தளத்தில் உறுப்பினரானால் மட்டுமே இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியும். இன்றே உறுப்பினர் ஆகுங்கள். சுமார் பத்து பதிவுகளை உங்கள் பெயரில் வெளிட்டாலே போதும். போட்டியில் பங்குபெற நீங்கள் தகுதி ஆனவராவிர். 


போட்டியின் விவரங்கள்: 

1. கவிதைப் போட்டி

2. கதைப் போட்டி

3. கட்டுரைப் போட்டி

4. நகைச்சுவைப் போட்டி

5. அனுபவங்களைப் பகிரும் போட்டி

6. ஹைக்கூ போட்டி

7.புகைப்படப் போட்டி

8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி 

9. சமையல் போட்டி 

10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி 

போட்டி நிபந்தனைகள்:

  1. நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
  2. படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.
  3. மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.
  4. தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.
  5. தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
  6. படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.
  7. படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.
  8. எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.
  9. படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
    வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும். 
  10. படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com
  11. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :30-11-2011
  12. போட்டி முடிவுகள் 15.12.2011- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.
மேலதிக தகவல்கள் வேண்டுவோர் கீழே உள்ள லிங்க் பார்க்கவும்.
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011



இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!


டிஸ்கி:தமிழ்த்தோட்டம் தள அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வாசிக்க... "பதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறோம், திரண்டு வாரீர்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1