CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ABCD எப்படி படிக்கணும்? தெரியுமா!?

இப்ப நான் உங்களுக்கு A,B,C,D... சொல்லிக் கொடுக்க போறேன். கவனமா நல்லா காது கொடுத்து கேட்டு மனசுல பதிய வச்சுக்கங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கூட சொல்லி தர்றேன். தெளிவா படிச்சு எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கணும். ஓகே வா... நீங்க ஈசியா புரிஞ்சுக்ரதுகாக நாம விரும்பி சாப்பிடுற உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் படங்கள் மூலமா சொல்லித் தர்றேன். ரைட்டு இப்ப பாடத்தை ஆரம்பிக்கலாமா?
மேலும் வாசிக்க... "ABCD எப்படி படிக்கணும்? தெரியுமா!?"



மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்


இனிய  உறவுகளே!
          மதியோடை திரு. மதிசுதா அவர்கள் பேட்டியின் இரண்டாம் பாகம் இது. இப்பேட்டியின் முக்கிய அம்சமான விஷயம் என்னவென்றால் கேள்விகள் உங்கள் மூலமாக கேட்கப்பட்டது தான். பலரும் பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள். கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றி.
முதல் பாகம்: மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக) 

மேலும் வாசிக்க... "மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்"



இவைகள் சிரிக்கற கார்ட்டூனா? இல்லை சிந்திக்கற கார்ட்டூனா?

நண்பர்களே! இவை  சிரிக்கற கார்ட்டூனா? இல்லை சிந்திக்கற கார்ட்டூனா? நீங்களே முடிவு பண்ணிக்கங்க.
அளவான குடும்பம் ஆசை குடும்பம்! அளவற்ற குடும்பம்???
மேலும் வாசிக்க... "இவைகள் சிரிக்கற கார்ட்டூனா? இல்லை சிந்திக்கற கார்ட்டூனா?"



அழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்





அழகான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் ரிப்பீட்டு.
அசிங்கமான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் அப்பீட்டு.


நண்பன் 1: பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தெரியுமா?
நண்பன் 2: தெரியலைடா
நண்பன் 1: ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.

மேலும் வாசிக்க... "அழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்"



தனபாலு, கோபாலு அரட்டை! - ஆரப்பாளயத்தில் இருந்து.

கோபாலு: அண்ணே! அண்ணே! தனபாலு அண்ணே.... வீட்டுல இருக்கிங்களா?

தனபாலு: மடையா ஏண்டா? இப்படி கத்தற, வீட்டுல தாண்டா இருக்கேன். வா அப்படி முக்குல நின்னு பேசுவோம்.

கோபாலு: இல்லைண்ணே, ஒரு வாரமா வீடு பூட்டியிருந்துசே, அதான் கேட்டேன்.

தனபாலு: ஓ...ஓ... அதுவா, சகலை ஊருக்கு குடும்பத்தோட போயிருந்தேன்டா..

கோபாலு: அப்படியாண்ணே, கொழுந்தியா வீட்டுக்கு போயிருந்தேன்னு சொல்ல வேண்டியது தானே.

தனபாலு: டேய்... தம்பி வம்பு இழுக்கற மாதிரி தெரியுது. ஒழுங்கா பேசுடா.

கோபாலு: சரிண்ணே, கொவப்படாதிங்க. எதாவது புதுசா மேட்டர் இருக்கா?

தனபாலு: என்னது? மேட்டரா? செய்தி இருக்கான்னு கேளுடா தம்பி.

கோபாலு: சரிண்ணே. ஏதாவது செய்தி இருக்கா?

மேலும் வாசிக்க... "தனபாலு, கோபாலு அரட்டை! - ஆரப்பாளயத்தில் இருந்து."



மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்!!!

      மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.  
மேலும் வாசிக்க... "மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்!!!"



காதலின் ஆசை

காதல் தோல்வி விரக்தியால் 
என் உயிரை மாய்த்த பின்னரும்
என் இதயம் துடிப்பது மட்டும்
நிற்க கூடாது என ஆசைப்படுகிறேன்
ஆம், அவளை என் இதயத்தில் குடி வைத்துள்ளேன்!
மேலும் வாசிக்க... "காதலின் ஆசை"



மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

இனிய உறவுகளுக்கு வணக்கம்,
        இந்த இடுகையோடு நம் தமிழ்வாசி 200 வது இடுகைக்கு உங்கள் அன்பும், ஆதரவோடும் அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு இடுகைக்கும் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.
மேலும் வாசிக்க... "மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)"



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு!



சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 1950 வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் நாள், கர்நாடகாவில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ரமாபாய். இவர்களின் நான்காவது குழந்தையாக பிறந்தார் ரஜினிகாந்த். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் (ராமகிருஷ்ணா மிஷனின் அங்கம்)ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இதே சமயத்தில் பல மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.
மேலும் வாசிக்க... "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு!"



மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!

நேற்று அதிகாலை கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் மினி வேன் வேளாங்கண்ணி சென்று விட்டு மதுரை ஒத்தக்கடை நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வோல்வோ பஸ் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்தவர்களில் ஆறு பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விபத்திற்குள்ளான வேன் அப்பளமாக நொறுங்கி இருந்தது. மோதிய வோல்வோ பஸ் அருகிலுள்ள பள்ளத்தில் பாதி கவிழ்ந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது.
மேலும் வாசிக்க... "மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!"



அந்த ஒரு நிமிடம் - (கவிதை)


நான் அவளைப் பார்த்த முதல் நிமிடம்
அவளும் என்னைப் பார்த்த முதல் நிமிடம்
ஐயகோ! என் மீது பேருந்து மோதியது அந்த நிமிடத்தில்
ஆமாம், அந்த நிமிடம் அவளை டிராபிக்கில் பார்த்திருக்க கூடாது.
அடிபட்டு சுயநினைவு இழக்கிற அந்த நிமிடம்
எனக்குள் என் அம்மா சொன்னாள்,
ஒரு நிமிடம் பொறுப்பா சாப்பாடு தயாராகி விடும் என காலையிலேயே சொன்னேனே!மகனே!!


மேலும் வாசிக்க... "அந்த ஒரு நிமிடம் - (கவிதை)"



ஏழ்மை - சிறுகதை


மாலை நேரம். சூரியன் மயங்கும் நேரம். உணவுக்காக தன் கூட்டையும், குஞ்சுகளையும் விட்டு உணவு தேடி நெடுந்தூரம் பயணித்த பறவைகள், தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன. பசியினாலும் பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த குஞ்சுகள் தத்தம் பெற்றோரை பார்த்த ஆனந்தத்தில் கி..கீ..கீச்..கீச்... என ஆராவாரித்து அவர்கள் கொண்டு வந்த உணவுகளை சந்தோசமாக கொத்திக் கொண்டிருந்தன. அக்காட்சியை பார்த்து நாளெல்லாம் இரையை தேடித் தேடி பறந்த களைப்பையும் மறந்து பேரானந்தம் அடைந்தன, பெற்றோர் பறவைகள்.
மேலும் வாசிக்க... "ஏழ்மை - சிறுகதை"



விரைவில் அரசியல் பிரவேசம்: விஜய்!



நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்குவேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.
மேலும் வாசிக்க... "விரைவில் அரசியல் பிரவேசம்: விஜய்!"



இந்தியர்களே! உங்களுக்கு வச்சாங்கய்யா ஆப்பு?


பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
நம்ம கருத்து: 
எவ்வளவு அடி வாங்குனாலும் இந்தியன் தாங்குவண்யா. விலையை ஏத்துறதையும் ஏத்திட்டு பாதி தான் ஏத்தியிருக்கோம்னு சாக்கு போக்கு வேற... இந்தியர்களே! நாம் ஏமாளிகள். மசாலா அரைக்கும் அம்மிக்கல் நாம் தான்.
மேலும் வாசிக்க... "இந்தியர்களே! உங்களுக்கு வச்சாங்கய்யா ஆப்பு?"



ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? ரெண்டாம் பாகமா? அய்யய்யோ!!



வேடந்தாங்கல் - கருண்:
இவரது செய்தி அலசல்கள் ரொம்ப பேமசு.... எல்லாமே விவகாரமான மேட்டரா இருக்கும். அதுல இருந்து நாம எஸ்கேப்பு....இவரோட பதிவுகள் எதுவுமே ஜொள்ளு விடுற மாதிரி இருக்காது. அதனால ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா நமக்கு ஒன்னும் இழப்பு இல்லை.
மேலும் வாசிக்க... "ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? ரெண்டாம் பாகமா? அய்யய்யோ!!"



ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? அய்யய்யோ!!


நாஞ்சில் மனோ:
இவர் தான் ப்ளாக் - இல் பதிவெழுதுவதில் காட்டும் அக்கறையை விட மற்ற ப்ளாக் - இல் மொத ஆளா கமென்ட் போடுவதில் தான் காட்டுவார். எப்படின்னா? வடை, போண்டா, வெட்டு, குத்து, ரத்தம் இந்த ரேஞ்சில் தான் கமென்ட் போடுவார். ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா இவரோட ஊசி போன வடை, பஜ்ஜில இருந்து நாம தப்பிச்சிருலாம். பாவம் மனோ, ஒத்த ஆளா ரூம்ல உட்கார்ந்து ஊசி போன வடை, பஜ்ஜிய சாப்பிட்டு இருப்பார். ஹி...ஹி...ஹி...
மேலும் வாசிக்க... "ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? அய்யய்யோ!!"



பின்லாடன் கொல்லப்பட்டான்! அஜ்மல் கசாப் எப்போது கொல்லப்படுவான்?!



ஒசாமா பின்லாடனை ஒழித்துக்கட்டிவிட்டது, அமெரிக்கா.எப்போதும், பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்து, பெருமூச்சு விடுவதே நமக்கு தலைவிதி என்றாகிவிட்டது. இதிலும் அப்படிதான். ஆமாம் நண்பர்களே, மும்பை அட்டாக்,ஐ தான் குறிப்பிடுகிறேன்.

குருவி சுடுவதை போல, அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றவனை, ராஜமரியாதையுடன், சிறையில் வசதி செய்து கொடுத்து, "நான் ஒன்றும் செய்யவில்லை' என, அவன் எதிர்வாதம் செய்வதற்கு, ஒரு வக்கீலையும் வைத்துக் கொடுத்துள்ளோம்.
மேலும் வாசிக்க... "பின்லாடன் கொல்லப்பட்டான்! அஜ்மல் கசாப் எப்போது கொல்லப்படுவான்?!"



புதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்!


      
      AIMP Music player முற்றிலும் இக்காலத்திற்கேற்ற ஒரு அருமையான இலவச Music player ஆகும். இந்த player அகல வடிவில் தோற்றத்தில் அழகாகவும், சிறந்த தெளிவான audio quality கொண்ட player  AIMP .        
        சுமார் இருபது வகையான audio formet - களை support செய்கிறது.  crystal-clear sound   - க்காக 32 bit  -இல் ஆடியோ இயங்குகிறது. 18-band  graphics equalizer உடன் extra built-in sound effects கொண்டுள்ள காரணத்தால் இசை மிக தெளிவாக உள்ளது.
மேலும் வாசிக்க... "புதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்!"



என்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா?!



**********************************************************************************

ஆசிரியர் : உன் பேர் என்ன? மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார் ஆசிரியர் : சரி, உன் அ‌ப்பா பேர் என்ன?
 மாணவன் : அதான் சொன்னேனே எ‌ன் பே‌ர் தா‌ன் எ‌‌ங்க அ‌ப்பா பேரு‌ம்.

**********************************************************************************
சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்? ஒரு 2 மணி நேரம் ஒடும்! அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!

**********************************************************************************

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்! முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்? உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.

********************************************************************************

தலைவர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை எவ்வளவு நாசுக்காச் சொன்னாரு கவனிச்சியா? கவனிக்கலையே! "என்னை என் குடும்பத்திற்காக உழைப்பவன் என்று கூறுகிறார்கள், நான் என் குடும்பத்துக்கு மட்டுமா சொத்து சேர்க்கிறேன், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்காகவும்தான் சொத்து சேர்க்கிறேன்"

********************************************************************************

தலைவர்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேங்காய் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மறந்துடாதீங்க தேங்காய் சின்னம்... தொண்டர்: தலைவரே! நம் சின்னம் தேங்கய் இல்லை! தலைவர்: எனவே... தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

*********************************************************************************

ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு? கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...!

*********************************************************************************
மேலும் வாசிக்க... "என்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா?!"



மின்சாரமே எங்கே ஒளிந்திருக்கிறாய்?



தமிழகத்துக்கு மின்சாரத் தட்டுப்பாடு என்பது புதிதல்ல. தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் கணிசமான இடைவெளி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. மின்தேவையைக் கருத்தில் கொண்டு, மின்உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் தேவைகளும் இருமடங்காக அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தப் பற்றாக்குறை அடிவானம் போல அடையமுடியாத இலக்காக நீண்டுகொண்டே செல்கிறது.

ஆனாலும், இதற்கு முன்பிருந்த ஒவ்வொரு ஆட்சியின்போதும் ஒவ்வொரு விதத்தில் இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போதைய தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்துறையைச் சரியாகக் கவனிக்காமல் விட்டதன் விளைவுதான், இன்றைய தினம் மின்தட்டுப்பாட்டில் மிகப்பெரும் நெருக்கடியும், நாளொன்றுக்கு மூன்று மணி நேர மின்தடையும் அவசியம் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்த உண்மை.
மேலும் வாசிக்க... "மின்சாரமே எங்கே ஒளிந்திருக்கிறாய்?"



இசைப்புயல் A. R. ரஹ்மான் வரலாறு!


     
ஏ.ஆர். ரஹ்மான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். ஏ.ஆர். ரஹ்மான் (அல்லா இரக்கா இரகுமான்) 1966ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஆர்.கே.சேகர் என்பவரது ஒரே மகனாவார். ரஹ்மான் ஒன்பது வயதாயிருக்கும் போதே அவர் தந்தை காலமானார். அதனால் மிகவும் கஷ்டப்பட்ட இவர்கள் குடும்பம் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாயைக் கொண்டு காலம் தள்ளி வந்தது. இந்நிலையில் ரஹ்மானின் சகோதரி ஒரு விசித்திர நோயினால் தாக்கப்பட்டார். அந்நோயை சூஃபி துறவி ஒருவர் தீர்த்து வைத்தார். அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார் திலீப் என்ற பெயர் கொண்ட அல்லா ராகா ரஹ்மான். 
மேலும் வாசிக்க... "இசைப்புயல் A. R. ரஹ்மான் வரலாறு!"



இவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா! வீடியோ பார்க்க!!

இவன் மனுசனே இல்லை. ரோபோ, ஆமாங்க அவன் தலையில செங்கல் கற்களை எப்படி லாவகமா அடுக்குகிறான்னு பாருங்க. இவிங்க தான் உண்மையான உழைப்பாளிகள்.


மேலும் வாசிக்க... "இவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா! வீடியோ பார்க்க!!"



பெண் என்பவள், அடுக்களை பதுமையா? காம கொடூரனுக்கு உரியவளா?



தினமலரில் ஒரு செய்தியைப் படித்தவுடன் அதை பற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.


ல்லடம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த, 18 வயது பள்ளி மாணவி மீனாட்சியின் சடலத்திலிருந்து, மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது. இது, தமிழர்களுக்கு தலைக் குனிவான சம்பவம்.


தலைநகர் டில்லியில், கே.என்.கட்ஜு மார்க் என்ற போலீஸ் ஸ்டேஷனிலிருந்து, 200 மீட்டர் தொலைவில், டில்லி புறநகரான ரோஹினி பகுதியைச் சேர்ந்த, 77 வயது மூதாட்டியை, ரிக்ஷாக்காரன் கற்பழித்த சம்பவம் அதைவிட கொடூரமானது.


பெண் என்பவள், அடுக்களை பதுமையாகவும், ஆணின் அந்தரங்க தேவைகளுக்கு உரியவளாகவும், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவளாகவும் இருக்க வேண்டும் என, ஆணாதிக்கவாதிகள் விரும்புகின்றனர். 


ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றனர்.ஆண்களுக்கான உரிமை, பெண்களுக்கும் உண்டு. பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர் அல்ல."அங்கங்கள் வேறுபட்டிருந்தாலும், உணர்வு, உணர்ச்சி, அறிவு, வலிமை இருவருக்கும் பொது தான். இதில், நீ என்ன உயர்ந்தவன், நான் என்ன தாழ்ந்தவள்' .


அமெரிக்காவில் கூட, தகுதி படைத்தவர்களாய் இருந்தும், பெண் என்ற காரணத்திற்காக, உயர் பதவி கொடுக்க தயங்குகின்றனர்.பர்தா அணியாத பெண்களின் முகங்களில், ஆசிட் வீசுவது, பெண்களுக்கான கல்விக் கூடங்களை தகர்ப்பது போன்ற செயல்கள், ஆப்கானிஸ்தானில் நடந்து வருவது கண்டிக்கத்தக்கது.


தனியார், "டிவி' சேனல்களில், பாலியல் வன்முறை சார்ந்த கருத்துக்கள், பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள் ஒழிய வேண்டும்.
பெண் விடுதலை, பாலின சமத்துவம் பெற, நல்ல தலைவர்கள் வரவேண்டும். 
மேலும் வாசிக்க... "பெண் என்பவள், அடுக்களை பதுமையா? காம கொடூரனுக்கு உரியவளா?"



சினிமா கிசுகிசுன்னா கசக்சக்குமா? ஹி...ஹி...!


டிஸ்கி: இது ஒரு சினிமா பதிவு ... சினிமா பற்றி படிப்பது  டைம் வேஸ்ட்  என நினைப்பவர்கள் மன்னிக்கவும் இப்படியே எஸ்கேப் ஆகிடுங்க..


பெரும்பாலான கதாநாயகிகள் படப்பிடிப்புக்கு வரும்போது, துணைக்கு அம்மாவைத்தான் அழைத்து வருகிறார்கள். அப்பாவை அழைத்து வருபவர்கள் அபூர்வம்! 
`அப்பா' என்ற வார்த்தையை கேட்டாலே இரண்டு கதாநாயகிகளின் முகம் பயங்கரமாக மாறுகிறது. அவர்களில் ஒருவர், காதல் படத்தில் நடித்த `சரண்' நடிகை! இன்னொருவர், தாமிரபரணி நடிகை! இவர்கள் இருவருமே அப்பாக்களினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாம்!
மேலும் வாசிக்க... "சினிமா கிசுகிசுன்னா கசக்சக்குமா? ஹி...ஹி...!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1