
கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கட்டு முழுமையான அளவு நிரம்பி உபரி தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. வைகை நீர் பாயும் ஐந்து மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் அணைக்கட்டு பகுதியில் அருகில் வசிப்பவர்களுக்கு இரண்டாம் எண் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளதால் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் மதுரையில் உள்ள தரைப்பாலங்களை மூடிய வண்ணம் வெள்ளம் செல்வதால் தரைபாலங்களில் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்புக்காக தரைப் பாலத்தின் ஒவ்வொரு முனையிலும் ஆம்புலன்சுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கீழே படங்களை பாருங்கள். வைகை ஆற்றின் அகலத்திற்கும் வெள்ளம் பரந்து ஓடுகிறது.


குரு தியேட்டர் அருகில் திண்டுக்கல் ரோட்டில் உள்ள பாலத்தில் பஸ்ஸில் செல்லும் போது என் மொபைல் மூலமாக எடுத்த படங்கள் இவை.
32 கருத்துரைகள்:
பார்க்கவே பயங்கரமா இருக்கு
இன்று என் வலையில்
Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக
எங்க ஊருக்கும் வரும்னு நெனைக்கிறேன் :-)
நான் ஸ்கூல் படிக்கிற வயசுல இருந்தப்போ வைகைல இவ்வளவு தண்ணியப் பாத்திருக்கேன். இப்ப இவ்வளவு வருஷம் கழிச்சு படங்கள்ல பாக்கறேன். ஐ மிஸ் யு மதுரை!
வெள்ள நிலைமை ரொம்ப மோசமாயிட்டுதுபோல தமிழ்நாடு Friends ஜாக்கிரதையா இருங்க முடிஞ்சவரை உங்க ஏரியாவில் பாதிக்கப்பட்டவங்களிற்கு கைகொடுங்கோ.
வைகையில் தண்ணீர் ஓடுவதை பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. நானும் நேற்று குருதியேட்டர் பாலத்துக்கிட்ட பார்த்தேன். ஆறு எனப் பெயர் வைத்ததால் வருடத்துக்கு ஆறு நாள் தான் ஓடுகிறதோ என்னவோ? வையைப்புனல் என்று போன வருடம் வெள்ளத்தை பார்த்து நானும் ஒரு பதிவு எழுதினேன். பகிர்வுக்கு நன்றி.
வருண பகவான்அளவுக்கதிகமாதான்
கருணை காட்டிட்டாருன்னு நினைக்கிறேன்.
திருப்பூரில் நிலைமை ரொம்ப மோசமாம்.
மக்கள் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க!
மழையின் பாதிப்புகள் கலக்கத்தை ஏற்ப்படுத்துகிறது...
என்னய்யா மழை பலமோ!
படங்கள் தெளிவாக இருக்கு பாஸ்..
வைகையை பார்த்தேன் நன்றி
வைகை வருடம் முழுக்க இப்படி ஓடினால், எப்படியிருக்கும்?
ரயிலில் மும்பை போகும்போது அடிக்கடி பார்த்திருக்கிறேன் தண்ணீர் வற்றிக்கிடக்கும் கிடக்கும் நதியா இது ஆச்சர்யமாக இருக்கே...!!!
மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்...
படங்கள் அருமை மக்கா...!!!!
நானும் பார்த்தேன். வெள்ள அபாயம் சொல்லும் அளவிற்கு தண்ணீர் இல்லை.. ஆனாலும் இந்த அளவைப் பார்ப்பதற்கே அபூர்வமாய் இருக்கிறது. காலக்கொடுமை..
வருஷம் முழுசும் தண்ணி வத்தாம இப்படியே இருந்தா....!
ஆசை தான்.
அட மழையோ!....அருமையா படம் பிடித்துள்ளீர்கள் சகோ .
வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ..........
பகிர்வுக்கு நன்றி தோழர்..
தகவலுக்கு நன்றி நண்பரே
படங்கள் அருமை
பகிர்வுக்கு நன்றி
மதுரையில இவ்ளோ மழையா?
அழகர் ஆத்துல இறங்குபோது 93 ல தொட்ட தண்ணீ..இப்ப கரைபுரண்டு ஓடுது போல...பயம் + ஆச்சர்யம்...
மதுரை மக்கள் பாவம்
பரவாயில்லையே உங்க ஊரும் இப்ப புள்ள நனைந்சிடுச்சே.....
வைகையில் வெள்ளம்.சந்தோஷமான விஷயம். ஆனால் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
படங்கள் அருமை.பகிர்வுக்கு நன்றி.
மதுரைக்கு சமீபத்தில் வர முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது, நேற்று எடுத்த படங்களை பார்த்து கொஞ்சம் தீர்த்துக்கொண்டேன். நன்றி
அட - நம்ம ஊர்ல இவ்வளவு தண்ணீயா - மொட்ட மாடில போயி இன்னு ரசிச்சேன். சூப்பரு - எவ்வளவு நாளாயிடுச்சி இப்படி பாத்து - ஆமா மொபைல்லேயே இவ்வளவு அழகா படம் எடுக்கறியா நீ - பரவால்ல - பாராட்டுகள் - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா
அருமை நண்பரே. வைகையில் வெள்ளம் செல்வது எப்போதாவது நடக்கும் நிகழ்வாகி விட்டது.
வைகையில் வெள்ளம்... எப்போதாவது நடக்கும் நிகழ்வாகி விட்டது.
படங்கள் அருமை.
படப் பகிர்விற்கு நன்றி சகோ,
முன்னெச்சரிக்கையாக இருங்கோ!
இன்னும் கொஞ்ச நாள்ள தண்ணீர் இல்லைன்னு தவிப்பாங்க.. நம்மிடம் சிறந்த நீர் மேலான்மைக் கொள்கை இல்லை...!!
நான் மதுரைய ரொம்ம்ம்ம்ம்ம்ப மிஸ்பண்றேன் :-(
அப்பாடா மழை விட்டிருக்கிறது.