
நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான மற்றும் வேதனையான செய்தி சொல்லப் போறேன். பர்ஸ்ட் மகிழ்ச்சி செய்தியை சொல்லிறேன். விலைவாசி கண்டமேனிக்கு ஏறிப் போச்சு என்னையா மகிழ்ச்சியான செய்தின்னு கேட்க்கறிங்களா? உண்மையிலே மகிழ்ச்சி தான்...
ஆமா மறுபடியும் பெட்ரோல் விலை குறையப் போகுதாம். சர்வதேச அளவுல கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கி இருக்றதுனால நம்ம நாட்டு பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை கொஞ்சம் குறைக்கலாம்னு முடிவு செய்திருக்காங்க. போன வருஷம் மதிய அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கி பெட்ரோலிய நிறுவனங்களின் கையில் ஒப்படைத்தது. அது முதல் பெட்ரோல் விலை கிடு கிடுவென உயர்ந்து. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுமார் 74 ரூபாய் வரை அதிகரித்ததே வரலாற்று சாதனையாக இருந்தது. அந்த விலையில் இருந்து இரண்டு ரூபாய் குறைத்து வயிற்றில் பாலை (பெட்ரோலை) வார்த்தனர். இந்நிலையில் மேலும் விலையை குறைக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படி எவ்வளவு ரூபாய் குறைக்க போறாங்கன்னு தெரியுமா? வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. அந்த ஒரு ரூபாயில் நாம ஒரு கிலோ மீட்டர் கூட அதிகமா போக முடியாது. என்னத்த கொறச்சு?, நாம இப்படியே அவங்க தர்ற அல்வாவுக்கு வாயை தொறந்துகிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு சொட்டு நெய் கூட நம்ம வாயில விழாது. அப்புறம் இப்படி விலையை குறைச்சா ஒரு சாதனையாம். ஆமாங்க கடந்த 2009ம் ஆண்டு இப்படி அடுத்தடுத்து ரெண்டு முறை விலையை குறைச்சாங்களாம். அந்த சாதனையை இந்த வருஷம் சமன் செய்ய போறாங்களாம். எப்படியெல்லாம் சாதனை செயறாங்கப்பா, முடியல...
இப்போ வேதனையான செய்தி:
மின்சார கட்டணம் கூட போகுதுன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்களே அதோட சேர்ந்து சின்ன பூச்சாண்டியும் காட்ட போறாங்க. அதாவது ஏற்கனவே மின்சார வாரியம் மின்சார பயனீட்டு அளவுக்கு ரேட்டை உயர்த்தி ஒரு மாதிரியை மக்கள் மத்தியில் சர்வே மாதிரி பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்கள்ல. அந்த ரேட்டே இப்போ இருக்கிற அளவை விட ரெண்டு மடங்கு அதிகமா ஒரு யூனிட்க்கு அதிகமாயிருச்சு. அதே போல கொறஞ்சபட்ச மாதாந்திர கட்டணமும் ரெண்டு மடங்கா அதிகரிக்க போறாங்களாம். அதாவது நாப்பது ரூபாயில் இருந்து, நூத்திபத்து ரூபாயாக ஏத்த போறாங்க.
அது என்னான்னா நாம கரண்ட் யூஸ் பண்ணினாலும் இல்லைனாலும், மினிமம் அமௌன்ட் மாசா மாசம் கட்டனுமாம். அந்த அமௌன்ட்டும் அதிகமாயிருச்சு. இப்போ சொல்லுங்க ஒரு நாளைக்கு அஞ்சாறு மணிநேரம் கரண்ட் இருக்கிறது இல்லை. இப்போ ரேட்டும் அதிகமாயிருச்சுன்னா நாம கரன்ட்டை சிக்கனமா பயன்படுத்தறோம்னு சொல்லி ஆதிகாலத்துக்கு போகாம இருந்தா சரி தான்...
இன்றைய பொன்மொழி:
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!
இன்றைய விடுகதை:
செடியில் விளையாத பஞ்சு
தறியில் நூற்காத நூல்
கையில் தொடாத துணி. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: குடம்
முந்தைய விடுகதைக்கான இடுகை:
42 கருத்துரைகள்:
முதல் பெட்ரோல் நான்தான்...
இரண்டாம் மின்கட்டனமும் நாந்தேன்...
மூன்றாம் பொன்மொழியும் நாந்தேன்
நான்காம் பழமொழியும் நாந்தேன்
ஐந்தாம் வாசிப்பாளனும் நாந்தேன்
கொய்யால ஒரு ரூவாயை குறைச்சிகிட்டு இம்புட்டு பில்டப்பா அடிங்....
சம்சாரம் அது மின்சாரம், போங்கடா நீங்களும் உங்க கரண்ட் பில்லும்....!!!
எல்லாத்துலையும் இணைப்பு குடுத்துட்டு எனக்கு தகவல் சொல்லும்ய்யா ஓட்டு போட வாறேன்...
அடுத்த எலெக்சன்ல இலவச பெட்ரோல்ன்னு நம்ம ஆளுங்க வாக்குறுதி குடுக்குற வரை விட மாட்டாங்க போலிருக்கே!!? ஹி ஹி ஹி
மனோ அண்ணன்.. போதும்.. அதிகமான கமன்ட் போடுறவங்களுக்கு எக்ஸ்ட்ரா வரி போட போறாங்களாம்!!!!!!!
பிரகாஷ் சார், மினிமம் மின்சார கட்டணம் எவ்வளவுன்னு போட்டு திகிலூட்டுங்க... 40 ரூபாயிலிருந்து இப்ப 110 ரூபா கட்டணம் கட்ட வேண்டியது இருக்கும்னு எங்கோ படிச்ச நினைவு
கொய்யால இப்ப இவங்களுக்கு பிரச்சன விலைவாசியா இல்ல உசுரோட இருக்க மக்களா டவுட்டு!
//அதே போல கொறஞ்சபட்ச மாதாந்திர கட்டணமும் ரெண்டு மடங்கா அதிகரிக்க போறாங்களாம். //
முதலில் கரண்ட் குடுக்க சொலுங்க
உங்கள் பார்வைக்கு ..
பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்
@suryajeeva
பிரகாஷ் சார், மினிமம் மின்சார கட்டணம் எவ்வளவுன்னு போட்டு திகிலூட்டுங்க... 40 ரூபாயிலிருந்து இப்ப 110 ரூபா கட்டணம் கட்ட வேண்டியது இருக்கும்னு எங்கோ படிச்ச நினைவு//
தகவலை இனச்சுட்டேன். நினைவூட்டலுக்கு நன்றி சார்
நண்பா இந்த மின்கட்டண மேட்டர் கோபத்தை வரவழைக்குது. வாயில நல்லா வருது. சபை மரியாதை கருதி மூடிக்கிறேன். நன்றி.
நான் என்னத்த சொல்ல..
எப்படில்லாம் கொடுக்குறாங்க பில்டப்பு... மச்சி
மச்சி கரெண்ட் இருந்தாதேனே பில் பிரச்சனை, அம்மா தான் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் தானே கரெண்ட தராங்க...
அதனால தான் மினிமம் பில் ஏத்திடாங்க #அம்மா ராக்ஸ்..
இன்னைக்கு போட்ட விடுகதைக்கு பதில் கண்டுபிடிச்சுட்டேன் சொல்லிடவா... சும்மா ஒரு க்ளூ சொல்றேன்.. கஜினி முகமது....
மக்கா,
“சுகதுக்கம்”.
எத்தனையே பேர் வரிகட்டமா இருக்காங்க, அதையெல்லாம் நாமகிட்ட இப்படிஎல்லாம் வசூல் பண்ணுறாங்க போல
வணக்கம்,பிரகாஷ்!கட்டணம் ஏத்துறதுக்கு முன்னாடி மக்களிடம் கருத்து கூட கேக்கப் போறதா சொன்னாங்களே,அப்புடி இல்லியா?என்னமோ,வராத கரண்டுக்கு காசுகட்டணும்னு கவர்மெண்டு முடிவு பண்ணிடுச்சு.
ஒண்ணுமே புரியலே - நாட்டுல என்னதாம்ல நடக்கு - ஒரு மண்ணும் புரியமாட்டேன்குது
சரிதான் நீங்க வெளிநாட்டு வேலைகிடைக்கலைன்னு வருத்தப்பட்டப்பவே நினைச்சேன்...
அப்படியே நமக்கும் பாருங்க....
இந்த நாட்டை விடடே ஓடிரலாம்...
நியாயமான ஆதங்கம் தான் நண்பரே
கற்காலத்தை நோக்கி பயணம் ............
வேலைக்கு போற எல்லாருக்கும் அம்மா நல்லது பன்றாங்கப்பா............. ஏன்னா
6 மணி நேரம் ஜெனரட்டர் வச்சு ஓட்டறதுக்கு வேலை நேரத்தையே குறைசுடங்கல்லே ............. ( எனன சம்பளத்தையும் குறைச்சுட்டாங்க!!!!!!!!!!!!!!!)
2020 ல் வல்லரசு நினைச்சாலே சிரிச்சு முடியலை...............
இது சரியா இது முறையா?
ஆமாம் தோழரே..நீங்கள் சொன்னதைப்போல வெளிநாட்டிற்கு குடி போகலாமா என்ற யோசனை கூட மெதுவாய் எட்டிப் பார்க்கிறது..
நன்றி.
தொந்தி பந்தியிலே...குப்பை குடிசையிலே.....
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ....
அது என்னான்னா நாம கரண்ட் யூஸ் பண்ணினாலும் இல்லைனாலும், மினிமம் அமௌன்ட் மாசா மாசம் கட்டனுமாம்.
>>>
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வடை போச்சே
எப்படி இரு ரூபாய் குறைத்துவிட்டு கொஞ்ச நாளில் இரண்டு ரூபாய் ஏற்று வதற்கா?
இது எல்லாம் தெரிஞ்சுதானே ஓட்டு போட்டோம், அப்புறம் என்ன குத்துது கொடையுதுன்னு..விடுங்க பாஸ்
பகிர்வுக்கு நன்றி
உலகின் மிக நீளமான கடல் பாலம் - Qingdao Haiwan
இணையற்ற வேகத்துடன் சிகிளீனர் புதிய பதிப்பு 3.13.1600
நீங்க சொன்ன இரண்டுமே வேதனையான செய்தி தான்...
பெட்ரோல் விலையை பத்து ரூபாய் கூட்டிட்டு ஒரு ரூபாய் குறைச்சா அது மகிழ்ச்சியான செய்தியா...?
யோவ் தமிழ்வாசி...ஏற்கனவே வயிறு எரியுது...
இந்த பதிவ போட்டு அதை வாசிக்க வச்சி இன்னும் ஏன்யா அதுல பெட்ரோல ஊத்தற...
பெட்ரோல் விலை குறையப்போவுதுன்னா...
http://ponsenthilkumar.blogspot.com/2011/11/blog-post_29.html
சொந்த டொமைன்க்கு வாழ்த்துகள் அண்ணா. முதல் கமெண்ட் நானே. ஒரு பத்து லிட்டர் பெட்ரோல் மட்டும் வாங்கி அனுப்புங்க ஹி ஹி ஹி
வணக்கம் மச்சி,
புதிய தளத்திற்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்!
ஒரு ரூபாயால் பெற்றோல் விலை குறைந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது அன்றாடம் உழைக்கும் மக்களுக்கு நன்மையே,
மின்சாரக் கட்டண விடயம், வேதனையாக இருக்கிறதே.
நேற்று நம்ம ஊர் பத்திரிகை சொல்லிச்சுது...
கூடாங்குளத்திலிருந்து இலங்கைக்கும் மின்சாரமாம்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.