
எச்சரிக்கை:
இத பத்தி அது, இதுன்னு என்னமோ ஒளறி கொட்டியிருக்கேன். படிச்சா கண்டிப்பா அது வரும். அதனால படிக்கணுமான்னு கொஞ்சம் யோசனை பண்ணிக்கங்க. சரி, படிச்சதுக்கு அப்புறம் அது வந்துச்சுன்னா அதுக்கு நீங்க தான் பொறுப்பு. ஆமா சொல்லிப்புட்டேன்.
"இத" யாரு கண்டுபிடிச்சா? "இத' வச்சு எத்தன பேரு பொழப்ப ஓட்டிட்டு இருக்காங்க. இதனால அது, இதுன்னு எவ்வளவோ தேவையில்லாம செலவும் ஆகுது. அதுவும் அதுக்கு இது இல்லையினா அது யாருக்கும் தெரியாது. அப்படி யாருக்காச்சும் அது தெரிஞ்சிருச்சுனா அதை விட மாட்டாங்க. அது பின்னாடியே போவாங்க. அப்படியே அதுக்கு இதுவும் போடணும், அதுவும் போடணும். ஏன்னா அது இல்லையினா அதுல தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் அதுல முன்னாடி வராது. அப்படி முன்னாடி வரணும்னா அது நிறைய வேணும். அப்படியே முன்னாடி வந்தாலும், அதனால வந்துச்சா இல்ல இதனால வந்துச்சான்னு ஆராய்ச்சி செய்ய அது இதுன்னு நிறைய மொளச்சிரும். அப்படி அது, இதுன்னு மொளச்சதுக்கு அது வெடிக்கிற மாதிரி வெடிக்க மட்டுமே தெரியும். ஆனா அது கசக்கும்னு அதுக்கு தெரிஞ்சாலும் கண்டுக்காது. குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் அதோட கசப்பு பிடிக்கும். நிறைய பேருக்கு அது பிடிக்காம போகும். அப்படியே அத பாத்தாலும் அதை ஒதுக்கி தூக்கி போட்ருவாங்க. அப்படி தூக்கி போடறது ஏன் மொளைக்கணும்? மொளைக்காம இருக்கலாமேன்னு நாம நெனச்சாலும் அதுக்குன்னு ஒரு இது இருக்றதுனால அது வருது. அதோட இதை அடக்கணும்னா அதை கண்டுக்காம இருக்கணும். அது ஆரம்பத்துல ஓரளவு சரியாத்தான் இருக்கும்னு தோணும். ஆனா அது சொல்றத நாம நல்லா ஆராய்ஞ்சு பார்த்தோம்னா அதுல அப்படி ஒன்னும் இல்லை. அது அதோட விதிப்படி சரியாத்தான் இருக்குன்னு நமக்கு தெரியவரும். அப்படியும் அது அதிகமா வெடிச்சா அதுல கருகிப் போயிரும். அப்ப அதை யாருமே விரும்ப மாட்டாங்க.
என்னங்க, எச்சரிக்கையை மீறி படிச்சிங்களா? ஒண்ணுமே புரியலைன்னு ரெண்டு மூணு தடவ வேற படிச்சிங்களா? அப்ப அது கன்பார்ம், ஹி.... ஹி....
இன்றைய பொன்மொழி:
இன்றைய பொன்மொழி:
கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்
இன்றைய விடுகதை:
ஒலைப்பூ நிறத்தாள்
ஓர் அடி வளர்த்தாள்
கோட்டையேறிப் பார்த்தாள்
குத்துப்பட்டுச் செத்தாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: நுங்கு
முந்தைய விடுகதைக்கான இடுகை கீழே:
26 கருத்துரைகள்:
ஏன் இந்த கொலவெறி - நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சி
ஆண்டவா இந்த புள்ளைய காப்பாத்து...ஏன்தான் இப்படி ஆச்சோ ஹிஹி!
அது சரி ஆனா இது ஏன் அது இருக்கிறதால இது வந்திருக்குமோ எதுக்கும் அதுவே நல்லா இருக்கு ஆனா இதுவும் சரிதான்.
//விக்கியுலகம் said...
ஆண்டவா இந்த புள்ளைய காப்பாத்து...ஏன்தான் இப்படி ஆச்சோ ஹிஹி!///
ரிப்பீட்டு...
அது ? இது? எது ?
இன்று என் வலையில்
சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி
இதப்படிச்சதும் எதைப் பத்தியுமே யோசிக்கத் தோணலையே... யாராவது காப்பாத்துங்க...
பகிர்வுக்கு நன்றி மச்சி வழக்கம் போல பயனுள்ள பதிவு அனைவருக்கும் உபயோகப்படும்.....
பதிவு படிக்காம டெம்ப்ளேட் கமென்ட் போடுவோர் சங்கம்...
வேலை செஞ்சுக்கிட்டு இருந்த அதுவும் இப்ப வேலை செய்யாம போயிடுச்சுய்யா உன்னால..
மதுரைல இப்ப வெயில் ஜாஸ்த்தி இல்லையே.. அப்புறம் ஏன் இப்படி???
வணக்கம் சகோ,
இங்கே என்ன நடக்குது?
எனக்கு ஒரே குழப்பமாக இருக்கே!
அவ்வ்வ்வ்வ்வ்
சகோ, அது பற்றி முதன் முதலில் பதிவெழுதியவர் அடியேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்த வருட ஆரம்பத்தில் எழுதியிருக்கேன்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது பத்தி மொதல்லயே ஒரு இது வந்துச்சு. அதனால, இத பெரிசா ஒரு இது பண்ணிக்க்ல.
ஒருமுறை படிச்சதுக்கே தலைசுத்துது சாமி......
தமிழ்வாசியும் தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டாரா?
108 க்கு உடனே போன் பண்ணுங்க பயபுள்ளைக்கு என்னமோ அது ஆகிப்போச்சு...
ஏன்யா இந்த கொலைவெறியா அலையிரூங்க இதான் நைட் டியூட்டி பாக்காதேன்னு சொல்றது புரியுதா...?
தமிழ் வாசி,
'அதுல' உங்களுக்கு ரொம்ப ஆர்வமோ?
கலக்குறிங்க
பிரகாஷு,
ஊருல வெய்யிலு அதிகமா கண்ணு!
அது இதுன்னு எதைப் பத்தியும் கவலைப்படாம இருக்கலாமுன்னு உங்க வலைப்பக்கம் வந்தா...எது வரக்கூடாதுன்னு நினைச்சேனோ அது இதால வந்துச்சிடுங்க! ஹி ஹி ஹி..
பாலா said...
இது பத்தி மொதல்லயே ஒரு இது வந்துச்சு. அதனால, இத பெரிசா ஒரு இது பண்ணிக்க்ல.
//
I like this...
அது ? இது? எது ?
ஸ்ஸ்ஸ்...முடியல என்னமா கிரியேட் பண்றீங்க பதிவ...
ரொம்ப சீக்கிரமே மேட்டருக்கு வந்திட்டீங்கா !
ரெட்ட நாக்கு.
அதுன்னு தெரியுது ஆனா எதுன்னு தெரியல என்னன்னு புரிஞ்சு போச்சு ஆனா என்னன்னு புரியலை ஆகா விளங்கிருச்சு அய்யோ மக்கா விளங்கல....