CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

11
Nov

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
முந்தைய பாகங்களுக்கு...


டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி    
    இந்த இடுகையில் CNC PROGRAM பற்றிய ஒரு வீடியோவில் என் குரலில் விளக்கம் சொல்லி இணைத்து உள்ளேன். ஏதேனும் குறை இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.
         நண்பர்களே, சில வாரங்கள் இந்த தொடர் எழுத முடியவில்லை, காரணம் பணிச்சுமை அதிகம். கடந்த பாகங்களில் ABSOUTE, INCREMENTAL METHOD களில் X,Y புள்ளிகளை எப்படி எழுதுவது என பார்த்தோம். இன்று அந்த புள்ளிகளை எப்படி PROGRAM ஆக மாற்றி எழுதுவது என பார்ப்போம். ஏனெனில் முன்னர் நாம் பார்த்தது வெறும் புள்ளிகளை எப்படி எழுதுவது என மட்டுமே பார்த்தோம்.
     PROGRAM எழுத G-CODES, M-CODES, ADDRESS ஆகியவற்றை நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒரு PROGRAMக்கு என்னென்ன தேவை என்பதை முதலில் பார்ப்போம்.
G CODES, M CODES பற்றி இந்த பாகத்தில் பார்க்கவும்.


1. G00 G90 G17 G21 G40 G80 G49; 
ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது இந்த CODES முதல் வரியாக கொடுத்தால் நல்லது.
மேற்கண்ட CODES மிக முக்கியமானது. ஏனெனில் ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது சில தேவையில்லாத CODES செயல்பாட்டில் இருக்கக்கூடாது. அதனால் இந்த G17- XY PLANE, G90- ABSOLUTE METHOD, G21- METRIC INPUT, G40- CUTTER RADIUS COMPENSATION CANCEL, G80 CANNED CYCLE CANCEL, G49- TOOL LENGTH OFFSET CANCEL ஆகிய இந்த CODESகளை தவறாமல் கொடுக்க வேண்டும்.


2. G91 G28 Z0. என்ற வரியை இரண்டாவதாக கொடுக்க வேண்டும்.
இந்த வரியில் G28- AUTOMATIC ZERO RETURN கொடுக்கப்பட்டு Z AXISஐ HOME POSITIONக்கு கொண்டு செல்ல வேண்டும்.


3. M06 T1; முதல் TOOL ஐ CALL செய்ய வேண்டும். முதல் TOOL ஆக நாம் செட் செய்து வைத்திருப்பதை T1 இல் CLAMP செய்து வைத்திருக்க வேண்டும்.


4. G0 G90 G54 X Y; இந்த வரியில் X,Y முதல் புள்ளியை கொடுக்க வேண்டும்.


5. M03 S3000; அடுத்து இந்த வரியை கொடுக்க வேண்டும். தேவையான SPINDLE SPEED மற்றும் SPINDLE ROTARION DIRECTION கொடுக்க வேண்டும்.


6. G43 Z100. H1; என்று கொடுக்க வேண்டும்.


7. G00 Z5. M08; என்று கொடுக்க வேண்டும். இங்கே COOLANT ON செய்ய வேண்டும் (தேவையெனில்).


8. G01 Z-1. F100; என கொடுக்க வேண்டும். தேவையான FEED RATE தர வேண்டும்.


9. நாம் முதலில் புள்ளிகள் எவ்வாறு குறிப்பிடுவது என பார்த்தோமே, அந்த வரிகள் இங்கே வர வேண்டும்.


10. G01 Z5. M09; என்பது வர வேண்டும். COOLANT OFF செய்ய வேண்டும்.


11. G00 Z100. M5; என்பது வர வேண்டும். SPINDLE STOP செய்ய வேண்டும்.


12. G00 G91 G28 Z0; Z AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


13. G00 G91 G28 Y0; Y AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


14. M30; ஆகியவை வரிசையாக வர வேண்டும்.


நண்பர்களே, முதல் எட்டு வரிகள் PROGRAM POINTSக்கு மேலும், பத்து முதல் பதினான்கு வரை PROGRAM POINTSக்கு கீழும் வர வேண்டும். எனவே நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

  மேற்கண்ட வரைபடத்துக்கு ஏற்கனவே X,Y புள்ளிகள் மட்டும் குறிப்பிடுவதை இந்த பாகத்தில் பார்த்தோம். இங்கே PROGRAM உடன் சேர்த்து எழுதுவதை இன்று பார்ப்போம்.
முழுமையான PROGRAM:

G00 G90 G17 G21 G40 G80 G49;
G91 G28 Z0.;
M06 T1;
G0 G90 G54 X-30. Y-20.;
M03 S1000;
G43 Z100. H1;
G00 Z5. M08;
G01 Z-1. F100.;
X20.0     Y-20.0;
X20.0     Y10.0;
X40.0     Y10.0;
X40.0     Y20.0;
X-10.0    Y20.0;
X-20.0    Y10.0;
X-20.0    Y-10.0;
X-30.0    Y-20.0;
G01 Z5. M09;
G00 Z100. M5;
G00 G91 G28 Z0.;
G00 G91 G28 Y0.;
M30;
     இந்த PROGRAM எவ்வாறு RUN ஆகிறது என ஒரு SIMULATER SOFTWARE மூலம் உங்களுக்கு விளக்க போகிறேன். இதில் ஒவ்வொரு வரிக்கும் நான் விளக்கம் சொல்லி உள்ளேன். முதல் முயற்சியாக உங்களுக்காக இந்த வீடியோவில் நான் பேசியுள்ளேன். ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.


        இங்கு ஒரு விசயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இணைய வழியாக CNC BASIC எழுதுவதால் MACHINE சம்பந்தமாக உள்ள WORK OFFSET, TOOL OFFSET எடுத்தல், PANEL BOARD OPTIONS ஆகியன பற்றி நாம் பார்க்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இவை முற்றிலும் CNC MACHINE அருகிலிருந்து கற்கும் விஷயங்கள். இங்கே நான் பாட்டுக்கு தியரியாக எழுதி கொஞ்சம் புரிந்து வைத்திருந்த உங்களை குழப்ப விரும்பவில்லை. PROGRAM எப்படி எழுதுவது என்பதைப் பற்றி மட்டுமே பார்க்க போகிறோம். 

பொன்மொழி, விடுகதைகள் அடுத்த இடுகையில்...




22 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

ஒன்னும் புரியல, மெக்கானிக்கல் படிக்கறவங்களுக்கு புரியும் நினைக்கிறேன்.. ஹீ..ஹீ...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

அட , ஆடியோ மூலமாகவும் விளக்கரீன்களா...

பாராட்டுகள்+ வாழ்த்துக்கள்..

rajamelaiyur said... Best Blogger Tips

மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு

rajamelaiyur said... Best Blogger Tips

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் நன்றி மக்கா...!!!

பாலா said... Best Blogger Tips

நல்ல முயற்சி எனக்கு பயன்படாவிட்டாலும் தேவைப்படுபவர்களுக்கு கண்டிப்பாக பரிந்துரைப்பேன். நன்றி

Unknown said... Best Blogger Tips

ஓட்டு போட்டுட்டேன் படிக்கிற பசங்க புரிஞ்சிக்கிட்டா சரி

Anonymous said... Best Blogger Tips

மழைக்கு ஒதுங்கினேன்...

M.R said... Best Blogger Tips

நல்ல தகவல் நண்பரே ,அருமை

செங்கோவி said... Best Blogger Tips

நல்ல விளக்கம் பிரகாஷ்..

செங்கோவி said... Best Blogger Tips

ஆஃப்செட் பற்றி மெசின் இல்லாமல் சொல்லிக்கொடுப்பது கஷ்டம் தான்..முடிந்தால் அது பற்றி வீடியோ போடுங்கள்.

ADMIN said... Best Blogger Tips

எங்கேயோ வந்துவிட்டமாதிரி இருக்கு. எனக்குப் புரியல..!!

இருந்தாலும் மாணவர்களுக்குப் பயன்படும் என்பதால் எனக்குத் தெரிந்தவர்களின் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..!!

KANA VARO said... Best Blogger Tips

இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக.//

எல்.கே.ஜி படிக்கிற வரோவுக்கு இங்கை வேலையில்லை.

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

பிரகாஷ், தங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

ADHI VENKAT said... Best Blogger Tips

நல்லதொரு பகிர்வுங்க.
மெக்கானிக்கல் டிப்ளமோ படித்த பின் cnc கற்றேன். இப்போது 10 வருடங்கள் ஆகி விட்டது.உங்கள் பதிவினை பார்த்த போது மீண்டும் ப்ரோக்ராம் எழுதி பார்க்கலாம் என்று தோன்றுகிறது.பழைய நினைவுகளை மீட்டு தந்தது.

யாருக்காவது தேவைப்பட்டால் இந்த வலைப்பக்கத்தை சிபாரிசு செய்கிறேன்.

Manimaran said... Best Blogger Tips

cnc தமிழில்.நல்லதோர் பதிவு.முதலில் உங்கள் படத்தில் datum (x0 ,y0 )எங்கே என்று தெரியப்படுத்தவும்.பிறகுதான் நீங்கள் எழுதிய prgm புதியவர்களுக்குப் புரியும்.

Manimaran said... Best Blogger Tips

உங்கள் prgm ன் ஒவ்வொரு வரியிலும் படத்தில் உள்ள 1,2 ,3,4 என்ற பகுதிகளை தெரியப்படுத்தவும்.உங்கள் பணிமென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Unknown said... Best Blogger Tips

Helpful for me
Thanks you.......
And waiting for your...tips....
I am so sorry my phone blackberry so ennala Tamil LA type Panna mudiyala....i am so sorry....yarum thappa eadhuthugathiga.....

Unknown said... Best Blogger Tips

Helpful for me
Thanks you.......
And waiting for your...tips....
I am so sorry my phone blackberry so ennala Tamil LA type Panna mudiyala....i am so sorry....yarum thappa eadhuthugathiga.....

Unknown said... Best Blogger Tips

I went to that program is entirely different from it.

Unknown said... Best Blogger Tips

அன்புள்ள ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை இதுபோன்ற பதிவுகள் மேலும் மேலும் பதிவு செய்து எங்களுக்கு உறுதுணையாக இருக்க அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com Total Posts: 631
Total Comments: 11821
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1