
அனுபவத்தில், வயதில் மூத்த பெண் காரை மிக வேகமாக ஒட்டி போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக்கொண்ட போது நடந்த வேடிக்கையான உரையாடல் இது.
பெண்: என்னிடம் பிரச்சனையா?, என்ன சார் அது?அதிகாரி: நீங்க காரை வேகமா ஓட்டிட்டு வந்திங்க. அதான் பிரச்சனை.
பெண்: ஓ... அப்படியா....
அதிகாரி: உங்க டிரைவிங் லைசன்ஸ் தயவு செஞ்சு நான் பார்க்கலாமா?
பெண்: நான் தந்திருவேன். ஆனா அது இப்போ என்கிட்டே இல்லை.
அதிகாரி: என்னது... இல்லையா? ஏன்?
பெண்: குடித்து விட்டு வாகனம் ஒட்டியதுக்காக நாலு வருசத்துக்கு முன்னாடியே அதை பறிமுதல் செஞ்சுட்டாங்க.
அதிகாரி: அப்படியா? அப்போ உங்க காரின் உரிமம், ரெஜிஸ்டர் பேப்பர்ஸ் இருக்கா? நான் பார்க்கலாமா?
பெண்: ஓ... அதுவா? அதுவும் என்கிட்டே இல்லை.
அதிகாரி: ஏன் இல்லை?
பெண்: இந்தக் காரே நான் ஒருவரிடமிருந்து திருடியது. அதான் இல்லை
அதிகாரி: என்ன? இது திருடிய காரா?
பெண்: ஆமா, இந்தக் காரோட ஓனரை நான் கடத்தி கொலை செய்துட்டேன்.
அதிகாரி: (அதிர்ந்து) நீங்க என்ன சொல்றிங்க?
பெண்: அவர நீங்க பாக்கணுமா? இந்த கார் டிக்கியில பிளாஸ்டிக் பையில அவரை கூறு போட்டு கட்டி வச்சிருக்கேன்.
(அந்த அதிகாரி அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் மற்ற போலீஸ் அதிகாரிகளை சைகை மூலம் கூப்பிடுகிறார். உடனே ஐந்து நிமிடத்தில் ஒரு போலீஸ் பட்டாளமே அவர்கள் பக்கத்தில் கூடுகிறது. அந்த போலீஸ் அதிகாரி நடந்த உரையாடலை மற்றொரு அதிகாரியிடம் சொல்கிறார். அவர் அந்தப் பெண்ணை நோக்கி வருகிறார்.)
அதிகாரி 2: அம்மா உங்கள் காரை நாங்க சந்தேகப் படறோம். அதனால சோதனை போடணும். வழி விடறிங்களா?
பெண்: சோதனை போடணுமா? என்ன பிரச்சனை சார்?
அதிகாரி 2: என் அதிகாரி ஒருத்தர், நீங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து, அவரை கூறு போட்டு பிளாஸ்டிக் பையில் கட்டி காரின் டிக்கியில் மறச்சு வச்சிருப்பதாக சொன்னார். அதான் சோதனை போடணும்.
பெண்: ஓ... தாராளமா நீங்க சோதனை போடலாம்.
( கார் டிக்கியை திறந்து காட்டுகிறார். அங்கே எதுவும் இல்லை. அதிகாரிகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.)
அதிகாரி 2: அம்மா, இது உங்கள் கார் தானா? எவிடன்ஸ் இருக்கா?
பெண்: ஆமா, என்னுடையது தான். இதோ காரின் ரெஜிஸ்டர் பேப்பர்ஸ். செக் பண்ணி பாருங்க.
(அதிகாரி பார்வையிடுகிறார். எல்லா பேப்பர்ஸ்ம் சரியாக இருந்தது)
அதிகாரி 2: உங்களிடம் டிரைவிங் லைசன்ஸ் இல்லை என அந்த அதிகாரி சொன்னார். அது உண்மையா?
(அந்தப் பெண் தன் கைப்பையில் சிறிது நேரம் தேடி அவரின் டிரைவிங் லைசன்ஸ்ஐ காட்டுகிறார். அந்த அதிகாரி அதை பார்க்கிறார். அதுவும் சரியாக இருந்தது.)
அதிகாரி 2: எனது அதிகாரி, தாங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து விட்டு காரை திருடிக் கொண்டு வந்ததாக சொன்னார். அதான் உங்களையும், காரையும் சோதனை செய்தோம். எல்லாமே சரியா இருக்கு. ஆனா, ஏன் அவர்கிட்ட பொய் சொன்னிங்க?
பெண்: நீங்க மட்டும் நான் வேகமா கார் ஓட்டறேன்னு பொய் சொன்னா எப்புடி ஏத்துக்க முடியும்?
பாருங்க நண்பர்களே, வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே!
டிஸ்கி:
இது ஆங்கில உரையாடல், உங்களுக்காக மொழி பெயர்த்துள்ளேன். படம் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டது.
இன்றைய பொன்மொழி:
அணுகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும். நல்ல புத்தகங்கள் பக்கத்திற்கு பக்கம் வெடிக்கும்!
இன்றைய விடுகதை:
துடிதுடித்து இடி இடிக்கும்
சடசடவென்று படபடக்கும். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வாழைப்பழம்
16 கருத்துரைகள்:
இதெல்லாம் வெளி நாட்டில்தான் நடக்கும். இங்கே என்றால் இப்படி ஜோக் எழுத முடியாது... நடந்தது என்ன....? என்று டிவியில் அலசப்படும்.
நல்ல டிராமாடிக் சீன். இன்னும் ஒரு படத்தில் கூட இந்த காட்சி இடம் பெறவில்லையா என்ன?
வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே!///
aamaa enna thaan sollavara?
////பாருங்க நண்பர்களே, வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே!////
ஹா.ஹா.ஹா.ஹா......நல்ல ஒரு பகிர்வு பாஸ்
இப்படிப் பேசினால், நம்மூர் போலீஸ்னா கூட்டிட்டுப் போய் ரேப் பண்ணியிருப்பாங்க..
@ senkovi....
ROFL....
:)
என்னமா யோசிக்குறாங்க?
பொன்மொழி கலக்கல்!
தலைய சுத்தி மூக்கை தொடுவது எப்படி = தமிழ்வாசி ஹிஹி!
ஆஹா போலீசையும் குழப்பி சாமார்த்தியமா தப்பிச்சுட்டாங்க ஹி ஹி "அம்மா"ன்னா சும்மாவா ஹி ஹி...
இதில் பார்த்திபனை நடிக்க வைத்தால் செம காமெடியா இருக்கும் ஹா ஹா ஹா...
ம்...
புத்திசாலி அம்மணிதாங்க...
இதுக்கு பேரு தான் கிரேட் எஸ்கேப்??
:)
பெண்: நீங்க மட்டும் நான் வேகமா கார் ஓட்டறேன்னு பொய் சொன்னா எப்புடி ஏத்துக்க முடியும்?//
புத்திசாலி...
அந்த அம்மா பயங்கரக் கில்லாடியா இருக்குறாங்களே!...
போலீசுக்கே தண்ணியா!...சிறப்பான பகிர்வுதான் வாழ்த்துக்கள்
சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .என் கவிதை காத்திருக்கு நிதானமாய்
படித்துவிட்டு போட வேண்டியத்தைப் போடுங்கள் சகோ .
வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே!