
ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.
சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள். சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது.
எப்படி எலி கிடைக்கிறது?
மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோசப்படுவாங்க.
மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோசப்படுவாங்க.
சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழுப்பு நிறமா இருக்கும். சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக கட்டி கட்டியா இருக்கும். கொஞ்சம் கவனமா பார்த்தா வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.
என்ன நண்பர்களே! கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க...
டிஸ்கி: இந்த செய்தி திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவம்.
மீள்பதிவு.
பொன்மொழி, விடுகதை அடுத்த இடுகையில்...
30 கருத்துரைகள்:
காலைல பலரு இதை படிச்சிட்டு வாந்தி எடுக்க போறாங்க
இதுவரை சில்லி சிக்கன் சாப்பிட்டவங்க எல்லாம் வாந்தி எடுக்கப்போறாங்க
வணக்கம் நண்பரே..
இனிமேல் சில்லிசிக்கன் சாப்பிடணும்னாலும் சாப்பிட்டாலும் இந்த விஷயம் கண்டிப்பாய் மனதிற்க்குள் வந்து போகும்
விழிப்புணர்வு பகிர்விற்க்கு நன்றி
அய்யய்யோ இதிலுயுமா
நல்லா டேஸ்டாதானே இருந்திச்சு? ஒரு வேளை சிக்கனை விடஎலிதான் டேஸ்டோ? விடுப்பா விடுப்பா.. ஆனது ஆகிபோச்சு.
காக்காவுக்கு பதிலா இப்ப எலியா?
என்ன இப்படிச் சொல்லிப்புட்டிங்க குமட்டிக்கிட்டுவருகிறது.
சிலிசிக்கனை இனி எலிச்சிக்கன் என்று சொல்லணுமா
இனி சில்லி சிக்கனைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் பதிவ தான் நினைவுக்கு வரும்..
நமக்கு அந்த பிரச்சினை இல்ல
நான் சைவ பட்சினி.
நல்ல வேலை நான் சைவம்
வணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
Ithukku than orey peace-sa
ulla item vangi sappidanum....
யோவ் பார்த்தா உனோட வச்சிக்க வேண்டியது தானே இப்படி பொது இடத்துல சொல்லிட்டு இனி சிக்கன் சாப்பிடும் போதும் இது தான் ஞாபகம் வரப்போகுது.. ஏற்க்கனவே இறால் பத்தி நீ சொன்னதுல இப்ப சாப்பிடறதே குறசிட்டேன். இப்ப இது வேற... அப்ப எங்கள என்ன தான் திங்க சொல்ற ராஸ்கல்...இனி விழிப்புணர்வு மன்னாங்கட்டின்னு ஏதாவது பதிவு போட்ட ங்கொய்யால நேரா மதுரைக்கே வந்து தூக்கிடுவேன்...ஞாபகம் வச்சிக்கோ...
காலை வணக்கம்,அறிந்திருக்கிறேன். நல்ல வேளை,நாம் தமிழ் நாட்டில் இல்லை!
கொஞ்ச உஷாராத்தான் இருக்கனும் போல...
நல்ல விழிப்புணர்வு பதிவு..
பகிர்வுக்கு நன்றி
உஷாரா தன இருக்கணும் போல
எந்த கடைன்னு சொல்லாம விட்டுடீங்களே அந்த பக்கம் போகாம இருப்போமே !! ஹி ஹி ஹி ....
டேஸ்ட் பண்ணி பாத்தீங்க போல ஹிஹி!
நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு சகோ (இது உங்கள் மீள் பதிவா சகோ?..)
அருமை வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .கவிதை காத்திருக்கு ...
ஆஹா இப்படியெல்லாமா நடக்குது
@சசிகுமார்
யோவ் பார்த்தா உனோட வச்சிக்க வேண்டியது தானே இப்படி பொது இடத்துல சொல்லிட்டு இனி சிக்கன் சாப்பிடும் போதும் இது தான் ஞாபகம் வரப்போகுது.. ஏற்க்கனவே இறால் பத்தி நீ சொன்னதுல இப்ப சாப்பிடறதே குறசிட்டேன். இப்ப இது வேற... ///
மாப்ளே, அந்த நண்டு பத்தி ஒரு விஷயம் சொன்னேன்ல. அதை மறந்துட்ட???
உடனே ஆபீசருக்கு போனை போடுய்யா, ஜீப்போடு ரெய்டுக்கு வந்துருவாரு...!!!
நல்லா எலிக்கரியை சுவைச்சு தின்னுப்புட்டு, காசு குடுக்காததுனாலே கடைக்காரன்கிட்டே உதை வாங்கிகிட்டு வந்துட்டு போட்டு குடுகுரீங்கலாக்கும் ஹி ஹி...!!!!
யப்பா....!
வணக்கம் நண்பரே..
எனக்குள் நான் தொடர்பதிவு எழுத தங்களை அன்புடன் அழைக்கிறேன்
வாருங்கள் ஒன்றிணைவோம்..
நன்றியுடன்
சம்பத்குமார்
எனக்குள் நான்
என்ன நண்பா!... எங்க ஊரில் நடக்குது என்று சொல்லி விட்டீர்களே. எல்லா ஊரிலும் அப்படி தான்பா...
ஐயோ ????
என்ன எழவுய்யா - இப்படி எல்லாமா நடக்குது
இனிமே எச்சரிக்கையா இருப்பேன்.......
நல்ல காலம் நான் யாழ்ப்பாணத்தில இருக்கிறன். வீட்டில நாட்டுக்கோழிக் கூட்டுக்கறியவிட சிங்கம் வெளியில எதயும் தொட்டதில்ல.