
தமிழ் பேரன்ட்ஸ் வலை நண்பர் சம்பத்குமார் அவர்கள் எனக்குள் நான் என்ற தொடர்பதிவில் என்னையும் தொடர்பதிவிட மிரட்டல் விடுத்திருந்தார். அவர் மிரட்டலை தட்ட முடியாமல் ஏதோ எழுதி இருக்கேன். கண்டிப்பா படிச்சிருங்க.
நான்: ஊர் ஒலகத்துக்காக அப்பா, அம்மா வச்சது பிரகாஷ் குமார். பதிவுலகிற்காக நான் வச்சது தமிழ்வாசி பிரகாஷ். அப்புறம் என்னைப் பத்தி சொல்றதுக்கு அப்படியொண்ணும் சாதனை பண்ணல.
பிறந்த நாள்: டிசம்பர் 14
பிறந்த, வளர்ந்த இடம்: பிறந்தது வத்தலக்குண்டு, வளர்ந்தது திண்டுக்கல்.
இருப்பது: பார்க்கும் வேலைக்காக மீனாட்சியம்மன் குடியிருக்கும் மதுரைக்கு வந்து ஏழு வருசமாச்சு.
படிப்பு: டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
வேலை: கோவை, சென்னை என அங்க இங்க சுத்திட்டு இப்போ ஏழு வருசமா தனியார் டயர் தயாரிக்கும் கம்பெனில வேலை பாக்கிறேன்.
பிடிச்ச விஷயங்கள்: நெறைய இருக்கு. குடும்பம், நண்பர்கள், இக்கட்டில் உதவியவர்கள் மற்றும் பதிவுலகம்(பலரால்)
பிடிக்காதது: ஏமாற்றுதல், சூழ்ச்சி மற்றும் பதிவுலகம்(சிலரால்)
நட்புக்கள்: இருக்காங்க. பள்ளி, கல்லூரி நண்பர்கள், முகம் தெரியா பதிவுலக நண்பர்கள்.
காதல்: முதல் காதல் திண்டுக்கல் டூ மதுரை ரயில் பயணங்களில், தண்டவாளம் போல சேராமலே போயிருச்சு. இரண்டாம் காதல், பெற்றோர் பார்த்து முடிவு செஞ்ச பெண்ணை, இரண்டு வருடம் லவ்வி, திருமணம் முடிஞ்சு மூணு வருசமாச்சு.
அன்பு, பாசத்துக்கு: அம்மா, அப்பா, மனைவி ஆகியோர்.
மறக்க முடியாதது: திரும்பி வராத பள்ளி, கல்லூரி நாட்கள், நானும் என் மனைவியும் காதலித்த நாட்கள்(மறக்க முடியுமா?).
மறக்க நினைப்பது: நிறைய இருக்கு. இப்போது ஞாபகப்படுத்த விரும்பவில்லை.
சந்தோஷம்: பணியிடத்தில், வீட்டில், நண்பர்களிடத்தில் எப்போதும் சந்தோஷம் நிறைந்திருக்க வேண்டும். அதை தினமும் கடைபிடிக்கனுமே அதுவே ஒரு சந்தோஷம் தான்.
பலம்: சொல்வதை சுருக்கமாக நறுக்குன்னு சொல்றது.
பலவீனம்: சொல்வதை சுருக்கமாக நறுக்குன்னு சொல்றது. (ஆமாங்க, பிட்டு போட தெரியாது.)
கோபம்: முன் கோபம் அதிகம். (அப்ப பின் கோபம் இல்லையான்னு கேட்க கூடாது)
ஏமாற்றம்: அம்மா ஆட்சியின் விலையேற்றம். (நெஜமாலுமே சமாளிக்க முடியலைங்க)
பிடிச்ச பொன்மொழி: மன்னிப்போம், மறப்போம்!
பிடிக்காத பொன்மொழி: மருமக ஒடச்சா மண்குடம், மாமியார் ஒடச்சா பொன்குடம். (வேலையில் தவறு என்னால் வரவில்லை. அவங்களால தான் தவறு வந்துச்சுன்னு ஆபீஸ்ல ஒருத்தர் எப்பவுமே மத்தவங்க பழி போடுவாரு. அப்போ இந்த பொன்மொழியை அவர் கிட்ட சொல்வேன்.)
பொழுதுபோக்கு: இணைய தேடல், பதிவு எழுதுதல், வாசித்தல்...
ரசிப்பது: எங்கள் கம்பெனி மலையோரத்தில் இருப்பதால் மயில்களும், குரங்குகளும் நிறைய வரும். அவற்றின் விளையாட்டுகளை ரசிச்சு பார்ப்பேன். அன்றைய டென்சன் குறைந்து விடும்.
பிடிச்ச சுற்றுலா தளம்: கொடைக்கானல். அதுவும் பனிக் காலத்தில் அந்த மெல்லிய சாரலுடன் ஹோக்கர் வாக்ஸ்-இல் நடந்து செல்ல ரொம்ப பிடிக்கும்.
நிறைவேறாத ஆசை: வெளிநாட்டில் வேலை பார்க்கனும்.
கடவுள்: விநாயகர், முருகன், ஆஞ்சநேயர்.
சமீபத்திய பெருமை: வலைச்சரத்தில் நிர்வாக ஆசிரியர் குழுவில் திரு. சீனா ஐயாவுடன் இணைந்தது.
தற்போதைய சாதனை: மெக்கானிகல் துறையினருக்காக CNC பிரிவில் எழுதும் தொடர்.
தொடர்புக்கு:
முகநூல்: https://www.facebook.com/sprakashkumar
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/tamilvaasi/
கூகிள் ப்ளஸ்: https://plus.google.com/u/0/106412922467461633842/posts
ட்விட்டர்: https://twitter.com/#!/tamilvaasi
மேலும் என்னைப்பற்றி அறிய: இந்த லிங்க் பாருங்கள்.
இந்த எனக்குள் நான் என்ற பய(ங்கர) டேட்டாவை எழுத நான் அழைக்கும் நண்பர்கள்:
- பதிவுகளில் தனி முத்திரை பதிக்கும் எனது நெருங்கிய பதிவுலக நண்பர் செங்கோவி அவர்கள்.
- தன் அனுபவத்தை சிறுகதைகளால் ரசிக்க வைக்கும் திரு. வை. கோபால கிருஷ்ணன் அவர்கள்.
- தான் எழுதிய கவிதைகளை இரண்டு புத்தகங்களாக வெளியிட்ட எனது நண்பர் கவிதவீதி சௌந்தர் அவர்கள்.
- பதிவுலகில் நான் அன்புடன் அம்மா என அழைக்கும் லட்சுமி அம்மா அவர்கள்.
- தனது புரட்சி கவிதைகளால் வாசிப்பவர்களை கட்டிப்போடும் அம்பாளடியார் அவர்கள்.
- குடும்ப நலன்கள், கவிதைகள், ஊக்குவிப்பு கட்டுரைகள் பதிவிடும் எனது மதிப்பிற்குரிய மகிழம்பூசரம் சாகம்பரி அவர்கள்.
என்னை பத்தி சொல்லிட்டேன். பிடிச்சிருந்தாலும், பிடிக்கலைனாலும் உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க.
61 கருத்துரைகள்:
மாப்ள கலக்கலா சொல்லி இருக்கீங்க...சில இடங்களில் வருத்தம்..குறிப்பாக குழந்தை விஷயம் நானும் அனுபவித்து இருக்கிறேன்...நீங்க வாழ்வில் நலன் பெற வாழ்த்துகிறேன்!
ஒரு விஷயம் வருத்தத்தைக் கொடுத்தது.
//நிறைவேறாத ஆசை: வெளிநாட்டில் வேலை பார்க்கனும்.//
பாஸ் வெளி நாட்டில் வேலை செய்யனும் பாஸ். பாக்கவெல்லாம் விடமாட்டுனுக. சொல்லிட்டேன்.
நிறைய தெரிஞ்சுக்கிட்டோம் உங்களை பத்தி பிரகாஷ். குட்.
மாப்ள போட்டோ போதைல எடுத்தியா இப்படி தலை கீழா இருக்கு....
சூப்பர் மச்சி... நிறைய தகவல்கள்....பாதிப்பு சொல்லி இருக்க வேணாம்...
பிறந்த நாள்: டிசம்பர் 14
>>
சினிமா நடிகைங்க போல வருசம் சொல்லாம எஸ்கேப்பாயிட்டீங்களே சகோ
உங்களை நேரிலும், போனிலும் பேசியதை விட நிறைய தெரிஞ்சிகிட்டேன் சுவாரஸ்யமா இருக்கு...!!!
நிறைவேறாத ஆசை: வெளிநாட்டில் வேலை பார்க்கனும்.//
இந்த பக்கமே வந்துராதேய்யா, அப்புறம் திரும்பி போகமுடியாது ஜாக்கிரதை...!!!
@விக்கியுலகம்
தங்கள் வாழ்த்துக்கு நன்றி மாம்ஸ்
ரசிப்பது: எங்கள் கம்பெனி மலையோரத்தில் இருப்பதால் மயில்களும், குரங்குகளும் நிறைய வரும். அவற்றின் விளையாட்டுகளை ரசிச்சு பார்ப்பேன். அன்றைய டென்சன் குறைந்து விடும்.
>>
பின்னே பழகிய நண்பர்களை காணும்போது டென்சன் பஞ்சாய் பறக்கத்தானே செய்யும்
@சத்ரியன்
பாஸ் எப்படியோ வேலை கெடச்சா சரி... ஹி ஹி
பாதித்தது: சமீபத்தில் முதல் குழந்தை அபார்ஷன் ஆனது.//
நானும் இந்தநிலையில் தவிச்சு போனதுண்டு, நல்லதே நடக்கும், கவலை வேண்டாம்.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
ரசிப்பது: எங்கள் கம்பெனி மலையோரத்தில் இருப்பதால் மயில்களும், குரங்குகளும் நிறைய வரும். அவற்றின் விளையாட்டுகளை ரசிச்சு பார்ப்பேன். அன்றைய டென்சன் குறைந்து விடும்.//
சிபி'யை குரங்கு என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.
@சசிகுமார்
மாப்ள போட்டோ போதைல எடுத்தியா இப்படி தலை கீழா இருக்கு....///
மாப்ளே,உன் தலை கவுந்திருக்குன்னு நெனக்கிறேன்.
@ராஜி
சினிமா நடிகைங்க போல வருசம் சொல்லாம எஸ்கேப்பாயிட்டீங்களே சகோ///
ஹி ஹி அவங்க மட்டும் தான் வருஷம் சொலமாட்டாங்களா?
@MANO நாஞ்சில் மனோ
உங்களை நேரிலும், போனிலும் பேசியதை விட நிறைய தெரிஞ்சிகிட்டேன் சுவாரஸ்யமா இருக்கு...!!!//
நன்றி மக்கா
@MANO நாஞ்சில் மனோ
இந்த பக்கமே வந்துராதேய்யா, அப்புறம் திரும்பி போகமுடியாது ஜாக்கிரதை...!!!//
ரைட்டு மக்கா... இருந்தாலும் ஒரு சான்ஸ் கிடைக்கணும்.
@ராஜி
பின்னே பழகிய நண்பர்களை காணும்போது டென்சன் பஞ்சாய் பறக்கத்தானே செய்யும்///
அப்படிங்களா சகோ...
வணக்கம் பாஸ்,
உங்க பிறந்த நாளுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் அல்லவா இருக்கு!
ஒரு கலக்கு கலக்கிடுவோம்!
அதென்ன மோட்டார் பைக்கிற்கு பூ வைக்கிறீங்களா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இத் தொடர் உதவியிருக்கிறது. வாழ்த்துக்களும், நன்றிகளும்!
சீக்கிரமே புளைங்ககிட்ட பல்ப் வாங்கி அதை நீங்க பதிவிட்டு நாங்கலாம் வந்து கும்மியடிக்கனும்னு மதுரை மீனட்சி அம்ம்னை வேண்டிக்கிறோம் சகோ
மச்சி சூப்பர்,
ஆமா அந்த போட்டோல இருக்குறது யாரு? உங்க தாத்தாவா?
சீக்கிரமே புளைங்ககிட்ட பல்ப் வாங்கி அதை நீங்க பதிவிட்டு நாங்கலாம் வந்து கும்மியடிக்கனும்னு மதுரை மீனட்சி அம்ம்னை வேண்டிக்கிறோம் சகோ.. அதே..அதே..
துக்கம் மகிழ்ச்சி என்று இரண்டு மன நிலையில் பயணிக்கிறது உங்கள் தகுதி-குறிப்பு
வணக்கம்,பிரகாஷ்!உங்கள் குறித்த இந்த பயோ டேட்டா அருமை!உங்களை மேலும் அறிந்து கொள்ள உதவியது.சரி,உங்களைக் கலாய்த்த நிரூபனை ஏன் தொடர அழைக்கவில்லை?
@Yoga.S.FR
உங்களைக் கலாய்த்த நிரூபனை ஏன் தொடர அழைக்கவில்லை?///
ஹி..ஹி... மறந்துட்டேனே,
அவர கூப்பிட்டா ரொம்ப பீட்டரு விடுவாரு...அதான்...
இருந்தாலும் உங்களுக்காக மாப்ள நிரூபன் அவர்களை "எனக்குள் நான்" என்ற தொடர்பதிவு எழுத அழைக்கிறேன்.
MANO நாஞ்சில் மனோ said...
நிறைவேறாத ஆசை: வெளிநாட்டில் வேலை பார்க்கனும்.//
இந்த பக்கமே வந்துராதேய்யா, அப்புறம் திரும்பி போகமுடியாது ஜாக்கிரதை...!!!///மனோ சொன்னது போல் வெளி நாட்டு ஆசையைப் புதைத்து விடுங்கள்,பிரகாஷ்!இந்தியா முன்னேறி வரும் நாடு.உங்களுக்குத் தெரிந்திருக்கும்,மேலை நாடுகள் பொருளாதார சரிவை எதிர் கொண்டுள்ளன.இந்தியாவும்,சீனாவுமே இப்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றன.ஏனைய உலக நாடுகள் எதிர் காலத்தில் இந்தியாவிடமும்,சீனாவிடமும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படக் கூடும்.பார்க்கும் வேலையில் கவனமெடுத்து அடுத்த அடியெடுத்து வைக்க முயலுங்கள்.
ஐயோ! மாப்பிள அந்த வெளிநாட்டு ஆசைய விட்டுடு அனுபஸ்தர்கள் சொன்னா கேளய்யா..!!
உங்களைப்பற்றி தெரியாத தகவல்களும் தெரிந்துகொண்டோம்.. உடம்பு இப்ப கொஞ்சம் ஊதினால் போல் உள்ளதே? சரக்க மாத்தையா.. ஹி ஹி ஹி
பயங்கர டேட்டாவைப் பார்த்தேன்..சுவையாய் சொல்லியிருந்தீர்கள்..
பயங்கர டேட்டா நல்லாதான் சொல்லி இருக்கே. என்னையும் மாட்டி வுட்டுட்டியே? ஏற்கனவே என்னப்பத்தி நிறையாவே சொல்லிட்டேன் புதுசா என்னத்த சொல்ல?
உங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இத் தொடர் உதவியிருக்கிறது. வாழ்த்துக்களும், நன்றிகளும்!
விரைவில் வரும் பிறந்த
நாளுக்கு முன் கூட்டியே வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
Excuse me, is there any special format for ladies.
எதார்த்தமான சிந்தனை...
தங்களைப்பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள முடிகிறது..
என்னையும் அழைத்ததற்க்கு மிக்க நன்றி..
கூடிய விரைவில் நானும் எழுகிறேன்...
இதைதானே நான் அன்றே சொன்னேன்....
http://naai-nakks.blogspot.com/2011/11/blog-post.html
புத்தாண்டு வரபோகிறது ...தொடர் பதிவு---தொல்லைகளும் கூடவே ...
//பணியிடத்தில், வீட்டில், நண்பர்களிடத்தில் எப்போதும் சந்தோஷம் நிறைந்திருக்க வேண்டும். அதை தினமும் கடைபிடிக்கனுமே அதுவே ஒரு சந்தோஷம் தான்.//
கண்ணு படப் போகுதையா...
ரொம்ப சந்தோசமா இருக்கு.
முகமறியா நண்பர்களின் உள்ளுணர்வுகளையும்,அவர்களுக்குள் இருக்கும் அவர்களையும் இந்த தொடர்பதிவு மூலமாக அறிய முடிகிறது.
நிறைய தெரிஞ்சுக்கிட்டோம் பிரகாஷ்...உங்களை பத்தி...
//நானும் என் மனைவியும் காதலித்த நாட்கள்(மறக்க முடியுமா?).//ம் மறக்க முடியாது அன்பரே
யூடான்ஸ் 6 இண்ட்லி 13
தமிழ்மணப்பட்டையைக் காணோம்.
இன்று இரவு முழுவதும் தூங்காமல் அதைத் தேடிக்கண்டு பிடித்து எப்படியும் ஆசையில் போட்டு விடுவேன்.
[ நான் போடுவதாகச் சொன்னது என் தமிழ்மண வோட் என்பதை உணரவும் - சத்தியமாக வேறு எதுவும் இல்லை - ஏதாவது வீண் கற்பனைகள் செய்து கொள்ள வேண்டாம் ]
அருமையான பயோடேட்டா.
சூப்பரா எழுதியிருக்கீங்க.
என்னையும் தொடர அழைத்து
இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க.
நன்றி.
முயற்சிக்கிறேன்.
அன்புடன் vgk
உங்க பயோடேட்டா அருமை ..அப்படிஒண்ணும் பயங்கர டேட்டா இல்லையே ....
சுவாரசியமான பதிவு.உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
அட..! இவ்வளவு விஷயம் இருக்கா உங்ககிட்ட..!!!
படித்துவிட்டேன் நண்பரே..
உங்கள் முகநூல் கணக்கில் என்னுடைய வேண்டுகோளை ஏற்க வேண்டுகிறேன்...
படித்துவிட்டேன் நண்பரே..
உங்கள் முகநூல் கணக்கில் என்னுடைய வேண்டுகோளை ஏற்க வேண்டுகிறேன்...
உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் நண்பரே .
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே
சோகங்களை கடந்து இன்பங்களை சுவைத்து வரும் புத்தாண்டில் உங்கள் அனைத்து கனவுகளும் நனவாக மேலும் மேலும் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கறேன்............
பதிவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் தொடர் பதிவு
உங்களை பற்றி விரிவாக தெரிந்து கொண்டேன் அண்ணா . சுப்பர் .
////பிறந்த நாள்: டிசம்பர் 14////
அட்வான்ஸ்ட் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
///நட்புக்கள்: இருக்காங்க. பள்ளி, கல்லூரி நண்பர்கள், முகம் தெரியா பதிவுலக நண்பர்கள்.////
நண்பேன்டா...நண்பேன்டா....
// இரண்டாம் காதல், பெற்றோர் பார்த்து முடிவு செஞ்ச பெண்ணை, இரண்டு வருடம் லவ்வி, திருமணம் முடிஞ்சு மூணு வருசமாச்சு.///
வாழ்த்துக்கள்.. எத்தின புள்ளகுட்டிகள்?
வலைச்சர நிர்வாகியா இணைந்ததற்கு வாழ்த்துக்கள்...
அன்பின் பிரகாஷ்
உன்னைப் பற்றிய அறிமுக ரெஸ்யூம் நல்லாவே இருக்கு - மனசில இருக்கறத எழுத்துல வடிச்சிட்டே. நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அண்ணா வணக்கங்க்ணா..
2 நாள் லீவுல இருந்தேன்.அதான் லேட்
முதலில் எனது அழைப்பினை ஏற்று தொடர் பதிவில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
//முதல் காதல் திண்டுக்கல் டூ மதுரை ரயில் பயணங்களில், தண்டவாளம் போல சேராமலே போயிருச்சு. இரண்டாம் காதல், பெற்றோர் பார்த்து முடிவு செஞ்ச பெண்ணை, இரண்டு வருடம் லவ்வி, திருமணம் முடிஞ்சு மூணு வருசமாச்சு.//
அழகாக உண்மைய சொல்லிருக்கீங்க..
//தற்போதைய சாதனை: மெக்கானிகல் துறையினருக்காக CNC பிரிவில் எழுதும் தொடர்.//
இது போல இன்னும் பல சாதனைகள் தொடரட்டும்..
//பதிவுகளில் தனி முத்திரை பதிக்கும் எனது நெருங்கிய பதிவுலக நண்பர் செங்கோவி அவர்கள்.
தன் அனுபவத்தை சிறுகதைகளால் ரசிக்க வைக்கும் திரு. வை. கோபால கிருஷ்ணன் அவர்கள்.
தான் எழுதிய கவிதைகளை இரண்டு புத்தகங்களாக வெளியிட்ட எனது நண்பர் கவிதவீதி சௌந்தர் அவர்கள்.
பதிவுலகில் நான் அன்புடன் அம்மா என அழைக்கும் லட்சுமி அம்மா அவர்கள்.
தனது புரட்சி கவிதைகளால் வாசிப்பவர்களை கட்டிப்போடும் அம்பாளடியார் அவர்கள்.
குடும்ப நலன்கள், கவிதைகள், ஊக்குவிப்பு கட்டுரைகள் பதிவிடும் எனது மதிப்பிற்குரிய மகிழம்பூசரம் சாகம்பரி அவர்கள். //
தொடர் பதிவு எழுத இருக்கும் என் பதிவுலக சொந்தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ம் சொல்ல மறந்துட்டேன்
wish you advance "HAPPY BIRTHDAY"
நட்புடன்
சம்பத்குமார்
தமிழ் பேரன்ட்ஸ்
/// எங்கள் கம்பெனி மலையோரத்தில் இருப்பதால் மயில்களும், குரங்குகளும் நிறைய வரும். /// உண்மைதான் அண்ணா.. பேருந்து பயணங்கள்ல நான் மிகவும் ரசித்த இடம்..
நிஜமாவே பயங்கர டேட்டாவாத்தான் இருக்கு.அதுவும் உங்க போட்டோ ஆரம்பத்திலேயே போட்டது இன்னும் ...... ஆச்சு.lolls.
என் மனதை திருடிய பாடல்கள்
நண்பா! கலக்குங்க... வாழ்த்துக்கள்.
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"