
உங்களுக்கு மனைவியா டிவியையும், தோழியா மொபைல் போனையும் வச்சு சில வரிகள் எழுதியிருக்கேன். அவை உங்களை சிந்திக்க, சிரிக்க வைக்கவும் செய்யும்.
நீங்கள் வீட்டில் இருக்கும் போது டிவி பாக்கறிங்க, ஆனால் வெளியே போகும் போது மொபைலை எடுத்துட்டுப் போறீங்க.
உங்ககிட்ட பணம் பற்றாக்குறை எப்போ வருதோ அப்போ டிவியை விக்கலாம்னு நெனக்கலாம். ஆனால் பணம் அதிகமா வரும் போது உங்க மொபைல் போனை மாத்த முடிவு பண்றீங்க.
சில நேரங்களில் டிவி நிகழ்ச்சியை விரும்பிப் பாக்கறிங்க. ஆனால் எந்த நேரமும் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுறிங்க.
டிவி உங்கள் வாழ்க்கை முழுதும் முற்றிலும் இலவசமே, ஆனால் மொபைல் உங்களுக்கு சொந்தமாக இருந்தாலும் சேவைக்கு பணம் கட்டா விட்டால் சேவை துண்டிக்கப்பட்டு விடும்.
டிவி பெரிய சைசில் பழசா இருக்கும், ஆனா மொபைல் போன் அழகிய வடிவில், மெலிதாக, சிறு வளைவுகளுடன் கைக்கு அடக்கமாக இருக்கும்.
டிவிக்கான செலவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இருக்கின்றன. ஆனால் மொபைலுக்கான செலவுகள் அதிகமாகவும், சில சமயங்களில் சேவையை டிமான்ட் செய்து வாங்க வேண்டியும் உள்ளது.
டிவியை இயக்க ரிமோட் கண்ட்ரோல் வேண்டும். ஆனால் மொபைல் போனை இயக்க அது தேவையில்லை.
நீங்க விரும்பினாலும், விரும்பா விட்டாலும் டிவியை உங்களால் பார்க்க, கேட்க மட்டுமே முடியும். ஆனால் மொபைல் போனில் பார்த்து பேசவும் செய்யலாம், கேட்கவும் செய்யலாம்.
டிவி டிவியா மட்டும் தான் இருக்கும், ஆனா மொபைல் போன் டிவியாவும் மாறும்.
கடைசியா முக்கியமான ஒன்று:
டிவியில் வைரஸ் இருக்காது. ஆனால் மொபைல் போனில் வைரஸ் வர வாய்ப்புகள் நிறைய உள்ளன.
டிஸ்கி: ஆங்கில புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்தது!
இன்றைய பொன்மொழி:
அன்பும், இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை!
இன்றைய விடுகதை:
உயர்ந்த மரத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணு கண்ணு பாப்பாத்தி
முக்காடு போட்டிருக்கா. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: கண் இமை
முந்தைய விடுகதைக்கான இடுகை கீழே:
29 கருத்துரைகள்:
முதல் நொங்கு ஸாரி டிவி ஸாரி செல்போன் ஸாரி கருத்து ஹி ஹி...
அப்போ நிறைய சிம்கார்டு வெச்சிருக்கீரு போல...?
ஹா ஹா ஹா ஹா டிவி, போன் மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாகிப் போச்சு இல்லையா..?
சபாஷ்...
இரண்டுண்டையும் சரியான முறையில் பராமரிக்கனும்..
இல்லையா..!
@MANO நாஞ்சில் மனோ
முதல் நொங்கு ஸாரி டிவி ஸாரி செல்போன் ஸாரி கருத்து ஹி ஹி...//
ஏன் குழம்புரீர்?
@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்போ நிறைய சிம்கார்டு வெச்சிருக்கீரு போல...?//
வெறும் ரெண்டு தான் இருக்கு?
@MANO நாஞ்சில் மனோ
ஹா ஹா ஹா ஹா டிவி, போன் மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாகிப் போச்சு இல்லையா..?//
அப்போ ரெண்டும் முக்கியம்கறிங்க...
பார்வையாளர்களை ஈர்க்கும் கலையை வலைப்பதிவர்கள் உங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும் நண்பா..
வலை வடிவமைப்பு
இடுகைகள்
நகைச்சுவை
தொழில்நுட்பம்
எனத் தாங்க வெளியிடும் ஒவ்வொரு இடுகைகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
அருமை.
காலம் ரொம்ப கெட்டுபூட்சீபா.
இப்போ அல்லாம் டிவி இல்லாமே வெரும் மொபைல் போனைவச்சே அட்ஜஸ்ட் பண்றானுங்க வாத்யாரே!
ஆனா நீ சொன்னபாரு, டிவிகிட்டே பேச முடியாது, ஒன்லி பாக்கலாம் கேட்கலாம்...சூப்பர்பா
கரீட்டா சொன்னெபா
நல்ல ஒப்பீடு..
எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்க?
ஒப்பீடுகள் அருமை.
மாப்ள இந்த பதிவுல நெறைய டபுள் மீனிங் இருக்கு...ஹிஹி!
இரண்டையுமே சரியாய் மெயின்டைன் பண்ணனும், கரணம் தப்பினால் .......?????
வழக்கம் போல் கலக்கல்
தொடருங்கள்
டிவி உங்கள் வாழ்க்கை முழுதும் முற்றிலும் இலவசமே, ஆனால் மொபைல் உங்களுக்கு சொந்தமாக இருந்தாலும் சேவைக்கு பணம் கட்டா விட்டால் சேவை துண்டிக்கப்பட்டு விடும்.//
டிவிக்கும் மாசம் மாசம் கட்டணம் செழுத்தனுமே
ஒரு வேளை விக்கி மாம்ஸ் சொல்ற மாதிரி ......ஹி ஹி ஹி
அருமை தொகுப்பு நண்பரே
//சிறு வளைவுகளுடன்///
ஹி ஹி ஹி...
#இது அடல்ட்ஸ் ஒன்லி பதிவா?
நல்லாத் தான் யோசிச்சிருக்காங்க..
டிவி டிவியா மட்டும் தான் இருக்கும், ஆனா மொபைல் போன் டிவியாவும் மாறும்.// என்னவொரு தத்துவம் மச்சி..
தொலைபக் காட்சி பெட்டிக்கும்
பணம் கட்டவேண்டுமே சகோ!
இருந்தாலும் ஒப்பீடு அருமை!
புலவர் சா இராமாநுசம்
ஹி.ஹி.ஹி.ஹி செம கற்பனை பாஸ் சில விடயங்கள் எனக்கு புரியலை ஏன்னா என்னிடம் டீ.வியும் இல்லை மொபைல் போனும் இல்லை ஹி.ஹி.ஹி.ஹி.....
சிந்திக்க, சிரிக்க வைக்கவும் செய்யும் பகிர்வு. பாராட்டுக்கள்..
டி.வி. பெரிய வீடு .................மொபைல் சின்ன வீடு ........................
Raittu Matchi....
“டிவியில் வைரஸ் இருக்காது. ஆனால் மொபைல் போனில் வைரஸ் வர வாய்ப்புகள் நிறைய உள்ளன.“ ஹி ஹி ஹி சூப்பர்
எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இப்படி?
ரூம் போட்டு யோசித்தா?
குழந்தைகள் தின வாழ்த்துகள்...
அட மக்கா இப்படி எல்லாமா யோசிப்பாங்க ....!!!!
அருமையான நகைச்சுவை .உங்களுக்கு வடிவாக்கேளுங்க உங்களுக்கு சிறுவர்தின வாழ்த்துக்கள் சகோ.............
செம்ம கலக்கல் பாஸ்!
மச்சி, வித்தியாசமான கற்பனை!
அதுவும் வெரைட்டி கூட்டி சிந்தித்து ஒரு பதிவினை நகைச்சுவையாகவும் அந்த அர்த்தம் நிறைந்திருக்கவும் தந்திருக்கிறீங்க.
வாழ்த்துக்கள்!